பாதங்களின் வறட்சியை போக்க எளிய வழிகள் !

மழைக்காலத்தில் பொதுவாக சருமம் வறண்டு காணப்படும். குறிப்பாக பாதங்கள், கைகள் மற்றும் கால்கள் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும். சில நேரம் இந்த வறட்சியால் எரிச்சல் ஏற்படலாம். இதனை போக்குவதற்கான குறிப்புகளை சுமந்து வந்திருப்பது தான் இந்த பதிவு.

பாதங்களின் வறட்சியை போக்க எளிய வழிகள் !

சருமத்தின் மேல் பரப்பில் படிந்திருக்கும் இறந்த செல்கள் தான் சரும வறட்சிக்கு காரணம். அவைகள் சருமத்தில் இருந்து நீக்கப்படாமல் இருக்கும்போது சருமம் வறட்சியாக காட்சியளிக்கும். இவற்றை நீக்குவதற்கான எளிய முறைகளை இப்பொது இந்த பதிவில் காண்போம்.

தேங்காய் எண்ணெய்:
உங்கள் பாதங்களில் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யுங்கள். எண்ணெய்யை முழுவதுமாக சருமம் உறிஞ்சி கொள்ளும்வரை மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை தினமும் இரவு படுக்க போகும் முன் செய்வது நல்ல  பலனை கொடுக்கும். ஆலிவ் எண்ணெய் அல்லது குழந்தைகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யையும் இதில் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்:
½ கப் ஆப்பிள் சீடர் வினிகரை 1 பக்கெட் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். உங்கள் பாதங்களை அந்த நீரில்  வைத்து ½ மணி நேரம் அப்படியே அமரவும். ½ மணி நேரத்திற்கு பிறகு உங்கள் கால்களை பக்கெட்டில் இருந்து எடுத்து கையால் உங்கள் பாதங்கள் மற்றும் கால்களை நன்றாக தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் உரிந்து வந்துவிடும். தேய்த்தவுடன் சாதாரண நீரில் கால்களை கழுவி, பின் ஏதாவது ஒரு மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

தேங்காய் - சர்க்கரை ஸ்க்ரப்:
¼ ஸ்பூன் பழுப்பு சர்க்கரை , 4-5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் , சில துளி எலுமிச்சை சாறு அல்லது டீ ட்ரீ எண்ணெய்.சேர்த்து கலக்கவும். இந்த ஸ்கரப்பை  உங்கள் பாதத்தில் மற்றும் கால்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் மென்மையாக தேய்க்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கால்களை  கழுவி பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்யலாம்.

லிஸ்டரின் மற்றும் வினிகர்:
* ½ கப் லிஸ்டரின் 
* ½ கப் வெள்ளை வினிகர் 
* வெந்நீர் 
* படிக   கல் 
ஒரு டப் வெந்நீரில் லிஸ்டரின் மற்றும் வினிகரை சேர்க்கவும். உங்கள் கால்களும்  பாதங்களும் மூழ்கும்  படி அந்த டப்பில் வைக்கவும். 20 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும். பின்பு கால்களை எடுத்து படிகக்கல் கொண்டு தேய்க்கவும். பின்பு நீரால் கால்களை கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம்.

தேன்:
தேனை உங்கள் பாதத்தில் தடவவும். 2 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தவுடன் 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு நீரால் கால்களை கழுவவும். இதனை தினமும் செய்வதால்  பாதங்கள் மென்மையாகும். 
இந்த மழைக்காலத்தில் மென்மையான பாதங்களை மற்றும் கால்களை பெற எளிய தீர்வுகளை கொடுத்துள்ளோம். முயற்சித்து பயனடையுங்கள் நேயர்களே!