அரிசி பால் ஒரு ஆரோக்கிய உணவாக இருக்குமா?

சில நேரங்களில் பசும்பால் குழந்தைக்கு ஜீரணம் ஆவதில்லை. மற்ற சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒரு வித ஒவ்வாமையை உண்டாக்குகிறது. அந்த நேரங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு எந்த உணவைக் கொடுப்பது என்று கவலை கொள்கின்றனர்.

அரிசி பால் ஒரு ஆரோக்கிய உணவாக இருக்குமா?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் ஏற்ற உணவாகும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு பார்முலா என்னும் பால் பவுடரை நீரில் கலந்து கொடுப்பது வழக்கம். அல்லது பசும்பாலை சிலர் குழந்தைக்கு கொடுக்கின்றனர். திட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பருவத்தில் எந்த ஒரு சிரமும் இல்லை. ஆனால் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் இந்த கால கட்டங்களில் காலையிலும் மாலையிலும் குழந்தை வயிறு நிரம்ப சாப்பிடக்கூடிய ஆகாரம் எதுவாக இருக்கும் என்று தாய்மார்கள் தேடும் நேரத்தில் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு உணவு உள்ளது. அது அரிசி பால். இதில் லாக்டோஸ் இல்லை என்பதால் குழந்தைக்கு ஒரு சிறந்த தீர்வாக இந்த உணவு உள்ளது. சிலர் தங்கள் குழந்தைக்கு பாதாம் அல்லது சோயா பாலை கொடுக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பருப்பு மற்றும் சோயா போன்றவை ஒவ்வாமல் இருக்கலாம். ஆகவே இந்த பதிவை படித்து, அரிசி பாலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அரிசி பால் என்பது என்ன?
அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பால் அரிசி பால். அரிசி ஆலையில் அரிசியை அரைத்து அதன் துகள்களை நீக்குவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. பழுப்பு அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட அரிசி மாவைக் கொண்டு இதனைத் தயாரிப்பது மற்றொரு முறையாகும். அரிசி பால் இயற்கையிலேயே இனிப்பு சுவையைக் கொண்டது. அரிசியில் உள்ள கார்போ சத்து அரைக்கப்ப்படும்போது 
சர்க்கரையாக மாறுவது இதன் காரணமாகும். அரிசியைப் போல் அரிசி பாலும் கார்போ சத்து அதிகம் கொண்ட ஒரு உணவாகும். பால் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு வரவேற்கப்படக்கூடிய மாற்று உணவாகவும் பாதுகாப்பான உணவாகவும் உள்ளது.

அரிசி பாலின் ஊட்டச்சத்து விபரங்கள் :
அரிசி பாலில் மிக உயர்ந்த அளவு கார்போஹைட்ரெட், சர்க்கரை மற்றும் கலோரிகள் பசும்பாலைத் தவிர வேறு எந்த பாலில் காணப்படாத அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு கப் அரிசி பாலிலும் கீழ் கண்ட ஊட்டச்சத்து விபரங்கள் உள்ளன..

கலோரி - 120
சர்க்கரை - 10 கிராம் 
மொத்த கார்போஹைட்ரெட் - 22 கிராம் 
புரதம் - 0 கிராம் 
மொத்த கொழுப்பு - 2 கிராம்

கைக்குழந்தைக்கும் வளரும் பருவ குழந்தைகளுக்கும் அரிசி பால் பாதுகாப்பான  ஏற்ற உணவா?
ஒவ்வாமை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதே நேரத்தில் தாய்ப்பால் அல்லது பார்முலா என்னும் பால் பவுடர் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு இது ஒரு ஆரோக்கிய மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை. அரிசி பால் என்பது ஒவ்வாமை ஏற்படுத்தாத சில வகை பாலில் ஒன்றாகும். ஆனால் இந்த பாலில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் பி 12 சத்து ஆகியவை இல்லை, காரணம், இது தாவர அடிப்படையைக் கொண்ட பால் அல்ல. குழந்தைக்கு எந்த ஒருவகை பாலும் ஏற்றுக் கொள்ளாத போது பெற்றோர்கள் இதனை ஒரு சிறந்த மாற்றாக தேர்வு செய்யலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர்.

அரிசி பாலை குழந்தைக்கு கொடுப்பதால் உண்டாகும் நன்மைகள் :
அரிசி பாலை குழந்தைக்கு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்போது காணலாம்.

அரிசி பாலில் லாக்டோஸ் முற்றிலும் இல்லை என்பதால் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இந்த பாலில் முற்றிலும் இல்லை. மேலும் பருப்பு அல்லது கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் பாலில் உள்ள அபாயங்கள் இதில் இல்லை. பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இது ஒரு பாதுகாப்பான மாற்று உணவாக இருக்கும். உங்கள் குழந்தையின் உணவில் பால் சேர்ப்பதன் அவசியத்தை இது பூர்த்தி செய்யும். 


இதன் சர்க்கரை இருப்பு காரணமாக மற்ற எல்லா பால் உணவுகளை விட இனிப்பு சுவை அதிகம் கொண்டது.
 
வைட்டமின் மற்றும் கால்சியம் போன்றவற்றுடன் எளிதில் செறிவூட்டப்படுகிறது.
 
இது ஒரு சைவ பால் வகைய சார்ந்தது.
 
இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை என்பதால் கொழுப்பு அற்ற பாலில் இது ஒரு சிறப்பான தேர்வாக உள்ளது.
 
வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு பால் பொருட்களை கொடுக்கக் கூடாது, ஆனால் அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு அற்புத தீர்வைத் தருகிறது. குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆவதால் இந்த அரிசி பால் உணவு குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பானது.
 
அரிசி பால் கொடுப்பதால் குழந்தைக்கு உண்டாகக் கூடிய ஆபத்து விளைவுகள்:
அரிசி பால் ஒவ்வாமை பாதிப்பை உண்டாக்கக்கூடிய தன்மை கொண்டதாக இல்லாமல் இருந்தாலும், சில சாத்தியமான ஆபத்துகள் உள்ளது. அவற்றைப் பற்றி இப்போது காண்போம்.
அரிசி பாலில் புரத சத்து இல்லை, என்பதால் பசும்பாலுக்கு ஒரு சிறந்த மாற்று உணவாக இருப்பதில்லை. பசும்பால் தினசரி பருகுவதால், குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான அளவு புரத சத்து கிடைக்கிறது. அரிசி பால் அருந்துவதால் இந்த சத்து அவர்களுக்கு குறைகிறது.
 
உற்பத்தியாகும் அரிசி ஒரு கனிம ரசாயன மூலகத்தைக் கொண்டுள்ளது. பெரியவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இந்த ரசாயனம் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை, ஆனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இந்த ரசாயனம் சேதத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக வெள்ளை அரசியுடன் ஒப்பிடுகையில் பழுப்பு அரிசியில் இந்த ரசாயன மூலகம் அதிகம் உள்ளது.
 
அரிசி பாலில் உப்பு, நீர், எண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் இரும்பு அல்லது மற்ற மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துகள் இல்லை.
 
இரண்டு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலில் முழுகொழுப்பு மிகவும் அவசியம், ஆனால் அரிசி பாலில் கொழுப்பு முற்றிலும் இல்லை.
 
அரிசி பாலில் கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரை உயர்ந்த அளவில் இருப்பதால், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாது.

அரிசி பாலில் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு இருப்பதால் , 12 மாதங்களுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலுக்கு மாற்றாக எந்த ஒரு உணவும், குறிப்பாக அரிசி பால் பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் இதனை பருகுவதால் தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு இது வழிவகுக்கிறது.

அரிசி பாலை தயாரிப்பது எப்படி?
 
அரிசி பாலை பல்வேறு உணவு தயாரிப்புகளுக்கு பயன்படுத்தலாம். ஸ்மூதி, சீரியல், சமையல், பேக்கிங், மற்றும் கஞ்சியாக பருகவும் இதனை பயன்படுத்தலாம். குழந்தைகள் வீட்டிலேயே இதனை பருக, இதனைத் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம். கீழே குறிப்பிட்டுள்ள ரெசிபி, 8 கப் அரிசி பால் தயார் செய்ய உதவும். கால்சியம் பவுடர் அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப மற்றவற்றை சேர்ப்பதால் இதனை செறிவூட்டியும் நீங்கள் பயன்படுத்தலாம்.
 
தேவையான பொருட்கள்:
வேகவைத்த பழுப்பு அரிசி - 1 கப்
தண்ணீர் - 4 கப்
தேன் - 1 ஸ்பூன்
சுவையூட்டி (வெனிலா ) - 1/2 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு 

செய்முறை:
பழுப்பு அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
தண்ணீருடன், வேக வைத்த அரிசி , இனிப்பு மற்றும் சுவையூட்டியை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை நன்றாக  தண்ணீர் வெண்மை நிறமாகும் வரை அரைக்கவும்.
மஸ்லின் துணி அல்லது வடிகட்டி பயன்படுத்தி பாலை மட்டும் நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த பாலை பிரிட்ஜில் வைத்து அடுத்த சில நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பசும்பாலுக்கு மாற்றாக குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்ற பால் வகைகள் :
பெரிய பிள்ளைகளுக்கு பசும்பாலைத் தவிர மற்ற பால் வகைகளும் ஒரு மாற்று உணவாக வழங்கப்படுகிறது. அவற்றுள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

பாதாம் பால்:
தண்ணீருடன் பாதாம் சேர்த்து அரைத்து தயாரிக்கப்படும் பால் பாதாம் பால். இந்த பாதாம் பால் வைடமின் ஏ சத்தின் ஆதாரமாக விளங்குகிறது என்றாலும் கால்சியம் மற்றும் புரதம் இதில் முற்றிலும் இல்லை. லாக்டோஸ் முற்றிலும் இல்லாமல் கலோரிகளும் குறைவாக உள்ளது.

சோயா பால் :
சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவது சோயா பால் ஆகும். தாவர அடிப்படைக் கொண்ட மற்ற பால் வகையைப் போல் இதிலும் வைடமின் பி 12 அதிகமாக உள்ளது. மேலும், சோயா பாலில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரெட் ஆகிய சத்துகளும் உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை மற்றும் நிறைவுற்ற கொழுப்பு மிகவும் குறைவாக உள்ளது.

தேங்காய் பால் :
தேங்காய் மற்றும் தண்ணீர் கொண்டு தயார் செய்யப்படுவது தேங்காய் பால். கொழுப்பு சத்து, கார்போஹைட்ரெட், மற்றும் கலோரிகளின் ஆதாரமாக விளங்குகிறது தேங்காய் பால். பாதாம் போன்ற பருப்புகளில் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது.

சணல் பால் :
சணல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவது சணல் பால் ஆகும். புரதம் மற்றும் வைடமின் சத்தின் ஆதாரமாக விளங்குகிறது இது. ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாகவும் விளங்குகிறது சணல் பால்.

குழந்தைக்கு எந்த உணவு தேவைப்படுகிறது என்பதை ஒரு தாயால் உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். பசும்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஒவ்வாமை பாதிப்பு உண்டாகும்போது, குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு ஏற்ற உணவை மாற்று உணவாக வழங்கலாம்.