தினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய பொருட்கள் 

ஒரே செயலை திரும்பத் திரும்பச் செய்வது ஒரு வித சலிப்பை உண்டாக்குவது மனித இயல்பு. ஒரே மாதிரி தேநீரை தினமும் பருகுவதும் இதே சலிப்பை உண்டாக்கும்.

தினசரி அருந்தும் தேநீரில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 16 ஆரோக்கிய பொருட்கள் 

தேநீர் அருந்துவதே புத்துணர்ச்சிக்காக என்ற நிலையில் அதனை வெவ்வேறு பொருட்களுடன் சேர்த்து தயாரித்து பருகுவதால் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தினமும் ஒரு புதுத் தெம்பு உடலுக்கு உண்டாகும். இதனால் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். உண்மையில் தேநீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது , உடலுக்கு தேவையான அடிப்படை நீர்சத்து கிடைக்க தேநீர் உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் குறிப்பிட்டு காட்டுகின்றன. தேநீரில் உள்ள அன்டி ஆக்சிடென்ட், வைடமின் ஏ, வைடமின் கே , பூஞ்சை எதிர்ப்பு பண்பு, கிருமி எதிர்ப்பு பண்பு போன்றவை , மனிதனின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்த உதவுகிறது. புத்துணர்ச்சி அதிகரிப்பது என்பதற்கு மேலாக, எடை குறைய உதவுகிறது, வாதம் மற்றும் மாரடைப்பிற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது, எலும்புகளின் பலத்தை அதிகரிக்க உதவுகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்கிறது. உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஏற்ற விதத்தில் 10 க்கும் மேலான மூலப்பொருட்களைக் கொண்டு தேநீர் தயாரிக்கும் முறையை நாம் இந்த பதிவில் காணலாம். உங்களுக்கு விருப்பமான கலவையை தேர்வு செய்து தயாரித்து பருகி மகிழுங்கள்.


1. தேநீருடன் தேன் :

தேநீருடன் சேர்க்கப்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் தேன். தேனுடன் ஒருங்கிணைந்த ஆரோக்கிய நன்மைகள் சர்க்கரைக்கு மாற்றாக இதனை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. கார்போ ஹைட்ரேட்டின் ஆதாரமாக விளங்கும் தேன், உடலின் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரிக்காமல், தேநீருக்கு இனிப்பு சுவையை வழங்குகிறது. தேன் கலந்து பருகும் தேநீர், தற்காலிகமாக காய்ச்சல் மற்றும் சளியைப் போக்க உதவுகிறது. தேன் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், மாதவிடாய் வலிகளையும் போக்க உதவுகிறது. தேநீருடன் தேன் கலந்து சூடாக பருகுவதால், குரல்வளைக்கு ஈரப்பதம் மற்றும் நீர்சத்து கிடைக்கிறது, இதனால் குரல்வளை அழற்சி குறைய பெரிதும் உதவுகிறது. பேச்சாளர்கள் மற்றும் பாடகர்கள் குரல்வளையைப் பாதுகாக்க இதனை முயற்சிக்கலாம். இந்த ஒருங்கிணைந்த கலவை, எடை குறைப்புக்கு உதவுகிறது, சருமத்தை சுத்தம் செய்கிறது, அழற்சியைக் குறைக்கிறது, மேலும் வைட்டமின் பி சத்தின் ஆதாரமாக விளங்குகிறது.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் தேநீரில், ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்கலாம். கொதிக்கும் நீரில் தேன் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தேனின் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்து விடும். ஆகவே தேநீர் தயாரித்து முடித்தவுடன் பருகுவதற்கு முன்னர், தேன் சேர்த்து பருகலாம்.

2. தேநீருடன் தேங்காய் எண்ணெய் :
ஆரோக்கிய உணவுகளில் தேங்காய் எண்ணெய்க்கு ஒரு நிரந்த இடம் உண்டு என்று கூறுவது மிகையல்ல. உலகளாவிய சுகாதார சூழ்நிலையில் தேங்காய் எண்ணெய்யின் மதிப்பு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது. அண்மைக் கால ஆரோக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களின் தனிச்சிறப்பு வாய்ந்த கலவை, உடலின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, அறிவாற்றல் அதிகரிக்க உதவுகிறது, வலிப்பு நோய் உண்டாவதைக் குறைக்கிறது. தேங்காய் எண்ணெயில் தூய்மையான எலேக்ட்ரோலைட் மற்றும் pH அளவு காரணமாக, இதனை தேநீரில் கலந்து பருகுவதால் உங்கள் தசை செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். எடை குறைப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தேநீரை பருகுவதால், தேங்காய் எண்ணெயில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக பசி உணர்வு கட்டுப்படுகிறது. கர்ப்பிணிகள், இந்த தேங்காய் எண்ணெய் கலந்த தேநீரைப் பருகுவதால், இதில் உள்ள லாரிக் அமிலம் காரணமாக, குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடைய உதவுகிறது. 
 
எவ்வளவு சேர்க்க வேண்டும் :

தூய்மையான தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். புதிதாக தயாரிக்கப்பட்ட தேநீரில், ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் கலந்தவுடன் தேவைபட்டால் இந்த தேநீரை குளிர வைத்தும் பருகலாம். விரும்பினால் இதில் தேன் சேர்த்தும் பருகலாம்.


3. தேநீருடன் லாவெண்டர் எண்ணெய் :
லாவெண்டர் எண்ணெய், உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்றாகும், லாவெண்டர் எண்ணெய்யானது, வாத நோய் மற்றும் செரிமான அமைப்புடன் தொடர்புடைய நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. லாவெண்டர் எண்ணெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளைத் தருவதாக உள்ளது. பதட்டத்தைக் குறைத்து, உணர்வு ரீதியிலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது, நீரிழிவு அறிகுறிகளை எதிர்த்து நம்மை பாதுகாக்கிறது. அறிவாற்றல் செயல்பாடுகள் மற்றும் தூக்க சுழற்சியை மேம்படுத்துகிறது. வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது, சருமத்தின் தரம் மேம்படுகிறது. லாவெண்டர் எண்ணெயின் அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, க்ளுடதியோன் , கேடலேஸ், சூப்பர் ஆக்சைடு டிச்ம்யுடஸ் போன்றவற்றின் செயல்பாடுகள் அதிகரித்து, விஷத்தன்மை அழுத்தத்தைத் தடுக்கிறது. நீரிழிவு அறிகுறிகளான வளர்சிதை மாற்றத்தில் கோளாறு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பழுது , எடை அதிகரிப்பு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து லாவெண்டர் எண்ணெய் உடலை பாதுகாக்கிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லாவெண்டர் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால் தலைவலியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக ஐரோப்பிய நரம்பியல் துறையில் நடத்திய ஆய்வு குறிப்பிடுகிறது. பூஞ்சை எதிர்ப்பு தன்மை கொண்ட லாவெண்டர் எண்ணெய், உடலின் நச்சுகளை வெளியேற்றி சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தி , தூக்கமின்மைக்கு சிகிச்சையாகிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும் :
வெதுவெதுப்பாக தயாரிக்கப்பட்ட தேநீரில் சில துளிகள் அதாவது 3 அல்லது 4 துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து பருகலாம். சுவைக்கேற்ப தேவைப்பட்டால் தேன் சேர்த்தும் பருகலாம்.

4. தேநீருடன் லவங்கப் பட்டை :
உங்கள் சாதாரண தேநீரில் லவங்கப் பட்டை சேர்ப்பதால் அதன் மணம்  அதிகரிக்கிறது. இது மட்டுமில்லாமல், தேநீரின் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கிறது. உங்கள் தேநீரின் மூலிகை பண்புகள் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ நன்மைகள் இணைந்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எடை குறைப்பை ஊக்குவிக்கிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை விரிவாக்குகிறது. மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது, புற்று நோயை எதிர்த்து போராடுகிறது, அழற்சி, சாதாரண காய்ச்சல் மற்றும் நாட்பட்ட வியாதிகளைத் தடுக்கிறது. விஷத்தன்மை வாய்ந்த சேதங்களிலிருந்து உங்கள் உடலை பாதுகாக்க லவங்கப் பட்டையில் இருக்கும் பாலி பினால் என்னும் கூறு உதவுகிறது. திசுக்களின் சேதங்களை மற்றும் தொற்றை சரி செய்ய லவங்கப் பட்டையின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன. தேநீருடன் லவங்கப் பட்டை சேர்ப்பதால், உடலின் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை க்ளிசரைடு அளவு குறைகிறது. இதனால் இரத்த அழுத்த அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். லவங்கப் பட்டையின் இரத்த சர்க்கரையை குறைக்கும் பண்பு நன்கு அறியப்படுவதால், இன்சுலின் எதிர்ப்புக்கு நன்மை புரிந்து, நீரிழிவுக்கு சிறந்த தீர்வைத் தருகிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:

ஒரு கப் தண்ணீரில் ஒரு லவங்கப் பட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பிறகு அந்த நீரை ஒரு கப்பில் ஊற்றி ஆற விடவும். பின்பு அந்த நீரில் தேநீர் பையை போட்டு 10 நிமிடம் சென்றவுடன் அந்த நீரிலிருந்து லவங்கப் பட்டை மற்றும் தேநீர் பையை எடுத்துவிட்டு அந்த தேநீரைப் பருகவும். இயல்பிலேயே இந்த தேநீர் இனிப்பு சுவை கொண்டதாக இருப்பதால், இந்த தேநீருக்கு சர்க்கரை தேவையில்லை.

5. தேநீருடன் இஞ்சி :
தினசரி நீங்கள் பருகும் தேநீரில் இஞ்சியை சேர்ப்பதால், உங்கள் உடல் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது, வயிற்று வலி குறைகிறது, எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி தடுக்கப்படுகிறது, புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, எடை குறைப்பை ஊக்குவிக்கிறது, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, அல்சைமர் போன்ற நோய்கள் வருவதை எதிர்த்து உடலை பாதுகாக்கிறது. ஹோகால், பரடால், ஜிங்ஜரான் மற்றும் குறிப்பாக ஜிஞ்சரால் போன்ற கூறுகள் இருப்பதால், நீரிழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய்க்கான மூலக் காரணமான நாட்பட்ட வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. உயிரியல் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாவதால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் இஞ்சி பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கர்ப்பிணி பெண்கள் இஞ்சி சேர்க்கபட்ட தேநீர் பருகுவதால் வயிற்று வலி குணமாகிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
இரண்டு ஸ்பூன் துருவிய இஞ்சியை எடுத்து, தேநீரில்  போட்டு கொதிக்க வைத்து பருகவும்.

6. தேநீருடன் எலுமிச்சை :
எலுமிச்சையின் மிகப் பொருத்தமான நன்மை, அதன் சுத்தீகரிக்கும் தன்மை மற்றும் நச்சுகளை வெளியேற்றும் தன்மை ஆகியவை. இவை, தொற்று மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவும். இது உங்கள் இரத்தத்தில்  உள்ள நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் மனஅழுத்தம் மற்றும் சோர்வைப் போக்க உதவுகிறது. எலுமிச்சையை தேநீரில் கலந்து பருகுவதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது, எலுமிச்சையில் இருக்கும் ப்லவனைடு கொழுப்பைக் குறைத்து, தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது. தேநீர் மற்றும் எலுமிச்சையின் அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் இணைந்து செயல்புரிந்து ஆரோக்கியமான அணுக்களின் சேதங்களைத் தடுக்கின்றன. மேலும் புற்று நோய்க்கான அணுக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் எலுமிச்சை தேநீருக்கு, ஒரு முழு எலுமிச்சையை சேர்க்கவும். கொதித்தவுடன், தேநீரில் தேன் கலந்து பருகவும்.

7. தேநீருடன் துளசி :
இந்திய மருந்து வரலாற்றில் துளசிக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. துளசி இலைகளில் உயர் ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. மனம் மற்றும் உடல் பாதிப்புகளுக்கு துளசி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. "மூலிகைகளின் ராணி" என்று அழைக்கப்படும் துளசி, வைடமின் ஏ, வைடமின் சி , கால்சியம், இரும்பு, ஜின்க், மற்றும் பச்சையத்தின் ஆதாரமாக விளங்குகிறது. ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம் பத்திரிகையின் படி, துளசியின் தழுவல் தன்மை மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைப்பு ஆகியவற்றில் ஒரு முதன்மை மூலப்பொருளை உருவாக்குகிறது. கிருமி எதிர்ப்பு, பக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக் கொண்ட துளசியை தினசரி உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் உங்கள் காயங்கள் விரைவாக குணமடைகின்றன. இரத்த சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவை குறைய உதவுகின்றன, உங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகின்றன. மனச்சோர்வைப் போக்கி, சிறுநீரக கோளாறு மற்றும் சிறுநீரக கற்களைத் தடுக்கிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
துளசியின் பூ, இலை அல்லது காய்ந்த இலையைத் தூளாக்கிக் கொண்டு தேநீர் தயாரிக்க முடியும். ஒரு கப் கொதிக்கும் நீரில், இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் துளசி இலைகளை போட்டு , 5 நிமிடம் கழித்து பருகலாம்.

8. தேநீருடன் ஏலக்காய் :
இனிப்பு சுவை மற்றும் நறுமணம் கொண்ட ஏலக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு உணவுப்பொருள். அன்டி ஆக்சிடென்ட், சிறுநீர் பிரிப்பு போன்ற பண்புகளைக் கொண்ட ஏலக்காய் இரத்த அழுத்தத்தை சீராக்கும் தன்மை கொண்டது. ஏலக்காயில் இருக்கும் முக்கிய கூறுகளில் ஒன்றான γ-Bisabolene, வாய் வழி புற்று நோய்க்கான அணுக்களில் பெருக்கத்தை தடுப்பதில் நேரடி தாக்கத்தை உண்டாக்குவதாக அறியப்படுகிறது. அதே போல், ஏலக்காயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டதாக உள்ளது. ஏலக்காய் சாற்றை பருகுவதால், செரிமான தொந்தரவுகள் குறைவதாகவும், வயிற்றுப்புண் என்னும் அல்சர் குணமடைவதாகவும் கூறப்படுகிறது. மனித உடலில் இந்த ஆய்வுகள் குறித்த பரிசோதனைகள் நிகழ்த்தப் பட வேண்டும் என்றாலும், சோதனைக் கூட ஆய்வின் முடிவுகள் படி, ஏலக்காய் அல்சரை உண்டாக்கும் பக்டீரியா ஹெலிகோ பக்டர் பைலோரியைத்  தடுப்பதாக அறியப்படுகிறது. பற்குழிகளைத் தடுத்து வாய் துர்நாற்றத்தைப் போக்குவது ஏலக்காயின் பொதுவான நன்மையாகும்.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:

ஒரு கப் தேநீரில் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். கொதிக்கும் நீரில் இந்த தூளை சேர்த்து வடிகட்டி பருகலாம்.

9. தேநீருடன் புதினா :

புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய புதினா இலைகள், செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. புதினா இலைகளில் உள்ள ரோஸ்மாரினிக் அமிலம், ஒரு இயற்கையான அன்டி ஆக்சிடென்ட் மற்றும்  அழற்சி எதிர்ப்பியாக செயல்பட்டு, சாதாரண காய்ச்சல் மற்றும் ஒவ்வாமையைப் போக்க உதவுகிறது. இன்டர்நேஷனல் ப்ரெஸ்ட் பிடிங் ஜர்னல் படி, புதினாவை எடுத்துக் கொள்வதால் முதன் முறை தாய்மையடையும் பெண்களின் மார்பக முளை வலி மற்றும் விரிசல் போன்றவற்றை தடுக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. உடலில் பித்தநீர் சுரப்பை அதிகரிக்க உதவுவதன் மூலம், செரிமான செயல்பாடுகளை எளிதாக்குகிறது. இதனால் அஜீரணம் மற்றும் வாய்வு தொந்தரவுகள் நீக்கப்படுகின்றன. புதினா தேநீர் பருகுவதால் ஆழ்நத தூக்கம் கிடைக்கிறது, ஆரோக்கிய வழியில் எடை குறைப்பு மேற்கொள்ளப்படுகிறது, நறுமண சுவாசம் கிடைக்கிறது. புத்தி கூர்மையை புதினா தேநீர் அதிகரிக்க உதவுகிறது, மேலும் சைனஸ் மற்றும் வலி தொந்தரவுகளை போக்க உதவுகிறது.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கைப்பிடி புதினா இலைகளை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் கொதிக்க வைத்த தேநீரை ஊற்றவும். இதனால் புதினா மணம் தேநீர் முழுவதும் பரவும்.

10. தேநீருடன் வெண்ணிலா :
உங்கள் சருமம், கூந்தல், மன நலம், எடை குறைப்பு, சுவாச நிலைகள், செரிமான மண்டலம், போன்றவற்றிற்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது, மேலும் புற்று நோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இனிப்பு உலகின் தவிர்க்க முடியாத பகுதியாக இருப்பதுடன், வெண்ணிலா பல்வேறு ஆரோக்கிய நலன்களை உள்ளடக்கியது. நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சையில் வெண்ணிலா ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. வெண்ணிலாவிற்கு பசியார்வத்தைக் குறைக்கும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான செயல்பாடுகளை சீராக்கி, எடை குறைப்பிற்கு உதவுகிறது. இதன் பக்டீரியா எதிர்ப்பு தன்மை காரணமாக, கட்டிகள் வராமல் தடுக்கப்படுகிறது, மேலும் தழும்புகள் விரைந்து குணமடைய உதவுகிறது. கல்லீரல் அழற்சியில் சிறந்த தீர்வைத் தருகிறது வெண்ணிலா, கீல்வாதம் மற்றும் எலும்புப்புரை நோய்களை தீர்க்க உதவுகிறது. வெண்ணிலாவில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் , குணப்படுத்துவதற்கான பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இது நாள்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்ற ஃப்ரீ ரேடிகல்களின்  சாதகமற்ற விளைவுகளை தடுக்க உதவுகிறது.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் வெண்ணிலா தேநீர் தயாரிக்க, கொதிக்கும் தேநீரில், 1/2 ஸ்பூன் வெண்ணிலா சாறு சேர்க்கவும்.


11. தேநீருடன் பெர்ரி பழம் :
தேநீருடன் பெர்ரி பழம் சேர்ப்பது மிகவும் பிரபலமான முறையாகும். இதில் குறைந்த அளவு காபின் உள்ளது இதன் சிறப்பு. வைட்டமின் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் அடங்கிய இந்த பெர்ரி தேநீரில் பல வகைகள் உள்ளன. சில பொதுவான பெர்ரி தேநீர், சிவப்பு ராஸ் பெர்ரி, ஆகாய் பெர்ரி, எல்டர் பெர்ரி, குருதி நெல்லி, ஜுனிபர் பெர்ரி, ஹாத்ரோன் பெர்ரி, கோஜி பெர்ரி, கருப்பு திராட்சை போன்றவை ஆகும். இதன் சுவை காரணமாக உலகம் முழுவதும் இது போற்றப்படும் தேநீராக விளங்குகிறது. மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகைளும் ஏராளம். எல்லா பெர்ரி தேநீரும் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் இது அதிகரிக்க உதவுகிறது. பெர்ரி தேநீரில் உள்ள வைடமின் ஏ சத்தின் காரணமாக கண் பார்வைக்கு சிறந்த பலன் அளிக்க உதவுகிறது. ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிப்பதன் காரணமாக, தேவையற்ற கழிவுகளை அகற்ற பெர்ரி தேநீர் உதவுகிறது. புற்று நோயைத் தடுக்க உதவுகிறது, எடை குறைப்பிற்கு ஆதரவாக உள்ளது. உயர்ந்த அளவு ஒமேகா 6 மற்றும் 9 வகை கொழுப்பு அமிலம் , நார்ச்சத்து மற்றும் புரதம் காரணமாக, கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைய உதவுகிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப்பில் 2 ஸ்பூன் பெர்ரி டீ தூள் சேர்த்து கொதிக்கும் நீரை அதில் ஊற்ற வேண்டும்.

12. தேநீருடன் சீமை சவுக்கு (maple)
சீமை சவுக்கில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, இது உடலுக்கு பல நன்மைகளைத் தருவதாக உள்ளன. சீமை சவுக்கில் உள்ள மாங்கனீஸ், சூப்பர் ஆக்சைடு டிஸ்ம்யுடேஸ் என்னும் கூறை  உற்பத்தி செய்வதால் இவை தொந்தரவு தரும் ப்ரீ ரேடிகல்களை தடுக்க உதவுகிறது. சீமை சவுக்கில் அதிக அளவு ஜின்க் இருப்பதால், இதனை தினசரி உங்கள் உணவில் இணைத்துக் கொள்வதால் இதய நோய்களின் தாக்கம் தடுக்கப்படுகிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் காரணமாக உடலில் உண்டாகும் சேதங்களை தடுத்து உடலை பாதுகாக்க ஜின்க் உதவுகிறது. சீமை சவுக்கின்  முக்கிய  சுகாதார நன்மைகளில் ஒன்று, ஆண் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற சுகாதார சீர்குலைவுகளின் ஆபத்தைக் குறைப்பதன் மூலம் புரோஸ்டேட் சுரப்பி் பயனடைகிறது. இதற்குக் காரணம் சீமை சவுக்கில் உள்ள ஜின்க் அளவு ஆகும். சீமை சவுக்கில் உள்ள ஜின்க் மற்றும் மங்கனீஸ் அளவு, நோயெதிர்ப்பு மண்டலத்தில் நேரடி தாக்கம் ஏற்படுத்தி, வெள்ளை அணுக்களின்  எண்ணிக்கையை சமச்சீராக வைக்க உதவி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைக்கிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் தேநீரில், ஒரு ஸ்பூன் சீமை சவுக்கு சிரப் சேர்த்து பருகலாம்.

13. தேநீருடன் சிவப்பு மிளகாய்(கேயன் பெப்பர்) :

கேப்சசின் என்னும் கூறு அடங்கிய கேயன் பெப்பர் என்னும்  சிவப்பு மிளகாய், உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. தினசரி உணவில் சிவப்பு மிளகாய் சேர்த்துக் கொள்வதால், அழற்சி குறைகிறது, நச்சுகள் வெளியேற உதவுகிறது, ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது இதன் தலையாய பொறுப்பு. உடல் வெப்பத்தை அதிகரித்து, அதிக கலோரிகள் எரிய உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இதனை பயன்படுத்துவதால், உடல் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பசியைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வயிற்று நரம்புகளை ஊக்குவித்து, செரிமான சாறு உற்பத்தியை அதிகரித்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. கேப்சசினுக்கு வலி நிவாரணத் தன்மை உண்டு. மூளைக்கு வலிக்கான சிக்னலை அனுப்பும் ந்யுரோபெப்டிடு அளவைக் குறைப்பதால் வலி குறைகிறது. மூட்டு மற்றும் தசை வலிக்கு, அறுவை சிகிச்சை மற்றும் நரம்பு தொடர்பான வலிக்கு , கீழ் முதுகு வலிக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கிறது.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் தேநீரில், 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

14. தேநீருடன் ரூய்புஸ்  :
இதனை ரெட் புஷ் டீ என்றும் ரெட் டீ என்றும் கூறுவர். உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள் விரும்பி பருகும் தேநீராக இது உள்ளது. தேயிலையுடன் சேர்க்காமல் இது தனித்தே தேநீராக அருந்தப்படுகிறது. காபின் குறைந்த தன்மை காரணமாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது ரூய்புஸ். பதப்படுத்திய ரூய் புஸ் இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட், காப்பர் மற்றும் ப்ளுரைடு கொண்டது. காபின் சேர்க்கப்பட்ட வழக்கமான தேநீருக்கு இது ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது. இந்த குறைந்த அளவு டன்னின் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஆக்சாலிக் அமிலம் இதில் இல்லாதது கூடுதல் நன்மையைத் தருகிறது. இதனால் சிறுநீரக கற்களுக்கான அபாயம் குறைக்கப்படுகிறது. அஸ்பலத்தின் மற்றும் க்வேர்செடின் போன்ற அன்டி ஆக்சிடன்ட் சேதம் விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடமிருந்து அணுக்களைப் பாதுகாத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மறுபுறம், க்வேர்செடின் மற்றும் லுடியோலின் போன்ற அன்டி ஆக்சிடென்ட் புற்று நோய் அபாயத்தை குறைப்பதாக எந்த ஒரு சான்றும் இல்லை. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் தேநீருக்கு, கொதிக்கும் நீரில் 2 ஸ்பூன் ரூய்புஸ் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி பருகவும்.

15. தேநீருடன் பட்டர் :
இதனை போ சா என்று பொதுவாக அழைப்பார்கள். பட்டர் டீ ஆரோக்கிய நன்மைகளின் ஆதாரமாக விளங்குகிறது. பட்டருடன் சேர்க்கப்பட்ட தேநீர் பல அற்புத ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. ஆற்றல் அதிகரிப்பு, உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்துவது, செரிமானத்தை ஊக்குவிப்பது, பசியார்வத்தைக் குறைப்பது, அறிவாற்றலை அதிகரிப்பது , இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பது போன்றவை இதன் சில அற்புத நன்மைகளாகும். தசை பலவீனம், அறிவாற்றல் குறைபாடு , உடல் பருமன் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பட்டர் டீ பருகுவதால் சிறந்த நன்மை அடையலாம். இதில் இருக்கும் அதிக அளவு காபின் காரணமாக, உடல் ஆற்றல் உடனே அதிகரிக்கிறது. டிமென்ஷியா போன்ற குறைபாடுகள் இதன் அன்டி ஆக்சிடென்ட் பண்பு காரணமாக தடுக்கப்படுகிறது. உயர நோய் உள்ளவர்கள், உடனடி நிவாரணம் பெற பட்டர் டீ பருகலாம். இதனால் மயக்கம் மற்றும் குமட்டல் தடுக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, நீரிழிவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
2 ஸ்பூன் தேயிலை தூள், 2 ஸ்பூன் உப்பு சேர்க்கப்பட்ட பட்டர் (குறிப்பாக யாக் பட்டர்), 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் பால் சேர்த்து இந்த தேநீரை தயாரிக்கலாம்.

16. தேநீருடன் வெல்லம்:
வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீருக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. வெல்லம் உட்கொள்வதால், செரிமான என்சைம்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறுகிறது , மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. வெல்லத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவு, மிகக் குறைவாக இருந்தாலும் அது இரத்த சோகையைப் போக்க உதவுகிறது, கல்லீரலில் நச்சுகள் வெளியேற உதவுகிறது, நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இவற்றிற்கு அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் இல்லை.

எவ்வளவு சேர்க்க வேண்டும்:
ஒரு கப் தேநீரில் 2 ஸ்பூன் தூளாக்கிய வெல்லம் மற்றும் சிறிய துண்டு இஞ்சி சேர்த்து பருகவும்.