தண்ணீர் 

மனித இனத்திற்கு இயற்கை வழங்கிய அற்புதமான கொடையில் ஒன்று தண்ணீர். எல்லா உயிரினங்களும் தண்ணீரால் ஆனவை. மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரால் ஆனது

தண்ணீர் 

தண்ணீர் என்பது தெளிவான, நிறமற்ற ஒரு திரவம். 20 அடி அடர்த்தியில் இதனைப் பார்க்கும் போது நீல நிறமாகத் தோன்றும். நீரின் வண்ணம் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது, மேலும் நீரில் இருக்கும் அசுத்தங்கள் காரணமாகவும் அதன் நிறம் மாறுபடுகிறது. தண்ணீரின் குளிர் நிலை 0 டிகிரி சென்டி கிரேட் ஆகவும், அதிக பட்ச வெப்ப நிலை 100 டிகிரி சென்டி கிரேட் ஆகவும் உள்ளது.


உடல் இயங்கத் தேவையான ஒரு மூலப் பொருளாக தண்ணீர் உள்ளது. நமது உணவில் நீரின் முக்கியத்துவம் வெளிப்படையானது, உடலில் குறிப்பிட்ட வளர்சிதை மாற்ற பணிகளைச் செய்ய உதவுவதோடு நமது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது, தண்ணீர் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, அது நமது பூமிக்கும் அதி;ல் வாழும் ஜீவராசிகளுக்கும் மிகவும் முக்கியமானது, தண்ணீரில் கலோரிகள் முற்றிலும் இல்லை. மேலும் எடை குறைப்பிற்கு தண்ணீர் மிகவும் சிறந்த முறையில் உதவுகிறது. நமது வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய கூறாக இருப்பது தண்ணீர்.


புல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சும்போதும், குழாய்களை பயன்படுத்தும்போதும், அதன் தேவை முடிந்தவுடன் தண்ணீர் குழைகளை மூட வேண்டும் என்ப்டஹை நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம் அல்லது வீட்டின் செல்ல பிராணிகளை தண்ணீர் தேவைப்படும் தோட்டத்தில் வைத்து குளிக்க வைக்கலாம். தண்ணீர் கசியும் குழாய்களை உடனடியாக சரிபார்த்து அதன் கசிவை நிறுத்தலாம். மழை நீரை சேமிக்கலாம். இயற்கையாக தண்ணீர் நிரப்பப்படுவதை விட வேகமாக இந்த பூமியில் உள்ள மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர். ஆகவே பூமி, குடும்பம் மற்றும் சமூகத்திற்காக தண்ணீரை பாதுகாப்பது அவசியமாகிறது. இந்து கலாச்சாரத்தில் கங்கை நதி போன்ற முக்கிய மத கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது நீர் சார்ந்த கலாச்சார கருத்துக்கள் நிலவி வருகின்றன. தண்ணீர் உயிர் அமுதம் என அழைக்கப்படுகிறது. எனவே வாழ்வைக் காப்பாற்ற நீரை சேமிக்க வேண்டும்.