தங்கமே தங்கம் ....

தங்கம் என்றால், யாருக்கு தான் பிடிக்காது? 

தங்கமே தங்கம் ....

பொதுவாக இந்தியாவில், அதுவும் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்வில் ஒரு இன்றியமையாத ஒரு பொருளாகும். 

அது நமது வாழ்வின் ஒரு உயரிய நிலையை காட்டும் ஒரு பொருளாக பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு பார்க்கப் பட்டு வருகிறது. பேரரசர்களும், பெரிய செல்வந்தர்களும் தமது செல்வ செழிப்பைக் காட்ட தங்கத்தை ஒரு முக்கிய பொருளாக தொன்று தொட்டு உபயோகித்தார்கள் என்பதை வரலாறுகள் நமக்கு உணர்த்தும் செய்தி. ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கவே தங்கம் போன்ற உயரிய மதிப்புடைய கூறுகள் தான் காரமாக இருந்திருக்கிறது. தங்கத்தை  சில அரசுகள் நாணையமாகவும் பயன்படுத்தி வந்தது பல அகழ்வாராய்ச்சியில்  தெரிய வருகிறது. மேலும் பண்டைய காலங்களில் ஒரு சாதனையை பாராட்டும் வகையிலும் தங்கத்தை ஒரு பரிசாக (பொற்கிழி அல்லது பொற் காசுகள்) கொடுப்பது என்பது மரபாக இருந்திருக்கிறது.

நமது மக்களால் பெரிதும் போற்றப்படும் அப்பேற்பட்ட தங்கம் நமது உடலிலும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 

ஆம், அது தான் உண்மை. அதை பற்றிய விவரங்களை இங்கே காண்போம்.

மனித உடலில் பல கூறுகள் உள்ளன, அவற்றில் தங்கம் உள்ளிட்ட சில கூறுகளும் சிறிய அளவுகளில் அடங்கும்.

1998 இல் "ஆக்ஸ்போர்டு கிளாரண்டன் பிரஸ்" பத்திரிகையால் வெளியிடப்பட்ட "ஜான் எம்ஸ்லே" எழுதிய "த எலிமெண்ட்ஸ் - மூன்றாம் பதிப்பு" எனும் நூலில், சுமார் 70 கிலோ கிராம் எடையுள்ள சராசரியான நபரின் உடலில் மொத்தம் 0.2 மில்லிகிராம் தங்கம் அடங்கியிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட வடிவில் இந்த தங்கத்தின் அளவு 10 நானோ லிட்டர்களாக இருக்கும் எனவும்  அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை திடமான கனசதுரமாக உருவெடுத்திருந்தால், ஒவ்வொரு பக்கத்தின் அளவும் 0.22 மில்லிமீட்டர் என்று இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது .

ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு நமது உடலில் இருக்கும் அதிகப்படியான கூறு. ஒப்பீட்டளவில், 70 கிலோ கிராம் எடை உடைய மனித உடலில் 43 கிலோ கிராம் பிராண வாயு உள்ளது, பூமியில் மிக  அதிகமாக  வாயு  பிராண வாயு ஆகும்.  அதே போல் மனித உடலில் காணப்படும் மற்ற முக்கிய கூறுகளாக கார்பனும், ஹைட்ரஜனும் உள்ளன. நமது உடலில் 16 கிலோ கிராம் கார்பன் மற்றும் 7 கிலோ கிராம் ஹைட்ரஜன் இருக்கிறது. ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் நமது மனித உடலில் பெருமளவில் உள்ள தண்ணீரில் இருந்து கிடைக்கிறது.

நமதும் மனித உடலில் தங்கத்தின் செயல்பாடுகள் தான் என்ன?

மனித உடலின் உடலியல் செயல் முறையில் தங்கத்தின் பங்கு பல ஆண்டுகளாக அறியப்படாத நிலையில், சமீபத்தில் நமது உடலில் தங்கத்தின் செயல்பாடுகளை பற்றி  விஞ்ஞானிகள்  ஆய்ந்து அறிக்கை  வெளியிட்டு உள்ளனர். அவை, 

1. தங்கம் நமது எலும்பு மூட்டுகளின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஒரு பெரும் பங்கு வகிக்கின்றது.

2. அதே போல் நமது உடல் முழுவதும் மின்சார சமிக்ஞைகள் பரிமாற்றம் செய்ய உதவும் மிக முக்கிய கூறாகவும் விளங்கி வருகிறது. 

3. இது ஒரு சுவாரஸ்யமான குறிப்பு, நமது மனித உடலில் 1.0 கிராம் சிலிக்கான் உள்ளது. இந்த கூறு பொதுவாக இயற்கையான முறையில் பெறப்படும் தங்கத்தில் அதிகப்படியாக காணப்படும் ஒரு கூறு ஆகும்.

அதனால் தானோ என்னவோ வேறு எந்த  மொழி பேசும் மக்களை விட  உலக அறிவியலில் சிறந்த  நமது தமிழ் முன்னோர்கள் தமது பேரக் குழந்தைகளை "தங்கமே!" என்று அன்போடு அழைத்தார்களோ?