இந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்

இந்த நீருக்கு சருமத்தில் உள்ள அழுக்கையும், கருமையையும் போக்கி பளிச்சென்று, இளமையாக மாற்றும் ஆற்றல் உண்டு.

இந்த நீரினால் அழகிய அரசி ஆகலாம்

அரிசி நீரின் ரகசியத்தை உணர்ந்தவர்கள் இந்தியா, ஜப்பான், சைனா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள்.ஊற வைத்து வடித்த அரிசி தண்ணீரில் அதிக ஸ்டார்ச் தங்கிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் சருமத்திற்கு நல்ல பலனை கொடுக்கிறது.அரிசி நீரில் சத்துக்களான வைட்டமின் பி, இ, சி, தாதுக்கள், அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இன்டர்நேஷனல் ஜெர்னல் ஆஃப் காஸ்மெட்டிக் கெமிஸ்ட் நவம்பர் 2010 இல் அரிசி கழுவிய நீரை பற்றிய ஆய்வை வெளியிட்டனர். இந்த ஆய்வில் பண்டைய காலத்தில் முடியை அலச உபயோகித்த அரிசி நீரை இக்காலத்திலும் முடியை பராமரிக்க பயன்படுத்துவதனால் முடிக்கு ஆரோக்கியத்தை கொடுத்து முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பிற முடி பராமரிப்பு பொருட்களோடு இதை சேர்த்தால் இன்னும் பலன் அதிகமாகவே கிடைக்கும் என்று நிரூபித்து உள்ளதையும் தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிட்டுள்ள  அரிசி நீரை இரண்டு முறையாக எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்:

அரிசி கழுவிய நீர்: ஒரு கப் அரிசி எடுத்துக் கொள்ளவும் இதை இரண்டு அல்லது மூன்று தடவை நன்றாக கழுவி அந்த நீரை ஊற்றி விடவும். அதன் பிறகு 2 கப் தண்ணீரை இதில் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். இந்த கலவையில் உள்ள நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த நீரை அழகிற்காக பயன் படுத்தி மீதம் இருந்தால் அதை ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துவிட்டால் தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம். 

புளித்த அரிசி நீர்: அரிசியை தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அந்த தண்ணீரை மட்டும் வடித்து எடுத்துக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெளியில் வைத்துக் கொண்டால், அந்த நீர் புளித்து இருக்கும் இந்த நீரை அப்பொழுதே எடுத்து உபயோகப்படுத்தலாம், இல்லை என்றால் ஒரு பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் வரை தேவைப்படும் பொழுது உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அரிசி கழுவிய நீரை விட இந்த புளித்த அரிசி நீர் பலனை அதிகமாகவே கொடுக்கும். 

தினமும் அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்கள். அரிசி சமைப்பதற்கு முன்னர் அரிசியை கழுவி தண்ணீரை கீழே உற்று விடாதீர்கள் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த நீரை பயன்படுத்தி பலன் பெருங்கள்.இந்த நீீீரைபற்றி தெரியாதவர்கள் மேலே குறிப்பிட்டுள்ளதை  போல் செய்து  பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதில் குறிப்பிட்டுள்ள இரண்டு நீரும் சரும பராமரிப்புக்கு ஏற்றது.

அரிசி கழுவிய நீர் மற்றும் புளித்த அரிசி நீரின் பயன்கள்:

  • சருமம் புத்துணர்ச்சியோடு இளமையாக இருக்க: அரிசி நீரில் தினமும் முகத்தை கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். 
  •  சருமத்தில் உள்ள கருமையையும், சுருக்கங்களையும் போக்க: அரிசி நீரில் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவினால் சூரிய ஒளியால் ஏற்படும் கருமையையும், சுருக்கங்களையும் நீக்கி சருமத்தை இளமையாக வைக்கும்.
  • பருக்களையும், கரும்புள்ளிகளையும் போக்க: இந்த நீரில் கடலை மாவை கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் பசையை நீக்கி பருக்களையும், கரும்புள்ளிகளையும் மறையச் செய்யும்.
  • தழும்புகள் மறைய: இந்த நீரில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் கடலை மாவை கலந்து தழும்புகள் உள்ள இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் தழும்புகள் மறைந்து வருவதை நீங்களே உணர்வீர்கள்.இதில் புளித்த நீரை உபயோகப்படுத்தினால் பலன் அதிகமாகவே கிடைக்கும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்து வந்தால் தழும்புகள் விரைவாக மறைந்து விடும்.
  • முகப்பரு வராமல் தடுக்க: அரிசி நீர் அல்லது புளித்த அரிசி நீர்யுடன், இரண்டு ஸ்பூன் பச்சைப் பருப்பு மாவு, இரண்டு ஸ்பூன் வேப்பிலை பவுடரை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் உங்கள் முகத்தில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து முகப்பரு வராமல் தடுக்கும் .
  • முடியை பொலிவோடு அதிகமாக வளர வைக்க: சீயக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி முடியை நன்றாக அலசிய பிறகு இந்த அரிசி நீர் அல்லது புளித்த அரிசி நீரை தலை முழுவதும் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் உங்கள் முடியை அலச வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்கும்போது இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வை குறைத்து, முடிக்கு ஆரோக்கியத்தை கொடுத்து நன்றாக வளர வைக்கும்.
  • சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்க: அரிசி கழுவிய நீரை ஐஸ் க்யூப் தட்டில் உறைய வைக்கவும். தினமும் இதை கொண்டு முகத்தில் லேசாக தேய்க்கவும் ,முகம் காய்ந்த பிறகு தண்ணீரில் கழுவினால் நீங்களே உணரலாம் உங்கள் சருமம் எவ்வளவு மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கிறது என்பதை.
  • சருமம் பளபளக்க: இந்த நீரில் ஓட்ஸ் சேர்த்து கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவோடு மின்னும். 

இந்த அரிசி நீரை உங்கள் சருமத்திற்கும், முடிக்கும் பயன்படுத்தினால் புரதத்தை கொடுத்து பொலிவுடன், பளபளக்க செய்யும். இதில் உள்ள கார்போஹைட்ரேட் முடியை வளர வைப்பதோடு மிருதுவாகவும், வலிமையாகவும் மாற்றும். இந்த நீரை தினமும் உங்கள் சருமத்தில் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள அழுக்கையும், கருமையையும் போக்கி பளிச்சென்று, இளமையாக மாற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. நீங்களும் இந்த அரிசி நீரை பயன்படுத்தினால் அழகிய அரசி ஆகலாம்.