வல்சியின் அற்புதங்கள்

அரிசி மாவில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்குகிறது. இதனால் முகத்தில் பருக்கள் வராமலும் தடுக்கிறது, வந்துவிட்டால் அதன் தழும்புகளை மறையவும் வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் முகத்தை மென்மையாகவும், பொலிவுடனும் வைக்க உதவுகிறது.

வல்சியின் அற்புதங்கள்

வல்சியின்  அற்புதங்கள்

வல்சி என்றால் அரிசி என்று பொருள்படும். அரிசி என்றவுடன் நம் அனைவருக்கும் தோன்றுவது சுவையான உணவு வகைகள் தான். ஆனால் இதை நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகிற்காகவும் பயன்படுத்தினார்கள் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அரிசியில் சத்துக்களான ஆன்டி ஆக்சிடென்ட், கார்போஹைட்ரேட், கொழுப்பு,நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைய உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நம் தோலுக்கு  வலிமையையும்,  பொலிவையும்  கொடுக்கிறது. அழகுபடுத்திக் கொள்வதற்காக கடைகளில் வாங்கும் பொருட்கள்  பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆனால்  இந்த அரிசி மாவு எந்த பக்க  விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த கட்டுரையின் மூலம் அரிசி மாவை அழகிற்காக எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். 

அரிசி மாவின் பயன்கள்:

  • சூரிய ஒளியால்  ஏற்படும் கருமையை போக்க: அரிசி  மாவுடன், சிறிது பாலையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகம் பொலிவடைவதுடன், மிருதுவாகவும் இருப்பதை. 
  • தோல் பளபளக்க: அரிசி மாவுடன், காய்ச்சாதபால் அல்லது பன்னீர் மற்றும் தயிரை  ஒன்றாக கலந்து முகத்தில் பூசி, 30 நிமிடங்கள் கழித்து முகத்தை தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் உங்கள் முகம் பளபளப்பாகிவிடும். 
  • கருவளையங்களைப் போக்க:அரிசி மாவுடன், வாழைப்பழம் மற்றும் விளக்கெண்ணெய் ஒன்றாக கலந்து கருவளையம் உள்ள இடத்தில்  பூசி  15 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் உங்கள் கருவளையங்கள் மறையும். 
  • தழும்புகளைப் போக்க:அரிசி மாவை, மஞ்சள்தூள், காய்ச்சாத பாலுடன் ஒன்றாக  கலந்து தழும்பு உள்ள இடங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும்  இவ்வாறு செய்தாலே போதும் தழும்புகள் விரைவாக மறைந்துவிடும். 
  • தோலை வெண்மையாக்கும்: அரிசி மாவை, சிறிது தேன் மற்றும் தயிருடன்  ஒன்றாக கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு முகத்தை  கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகம் வெண்மையாக மாறும். 
  • மேக்கப்பை கலைப்பதற்கு:அரிசிமாவுடன், பன்னீரை கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை லேசாகத் தேய்த்து கழுவினால் மேக்கப் முழுவதுமாக நீங்கிவிடும். 
  • முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போக்க: அரிசி மாவுடன், தேன் மற்றும்  சிறிது கற்றாழை சாற்றை  ஒன்றாக கலந்து முகத்தில் பூசி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் மறைந்துவிடும். 
  •  தோலிலுள்ள சுருக்கங்கள்  போக்க:         ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன், வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை  ஒன்றாக கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும். 

அரிசி மாவில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்குகிறது. இதனால் முகத்தில் பருக்கள் வராமலும் தடுக்கிறது, வந்துவிட்டால் அதன் தழும்புகளை மறையவும் வைக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் முகத்தை மென்மையாகவும், பொலிவுடனும்  வைக்க உதவுகிறது. இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. அழகாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது அதுவும் குறைந்த செலவில் வீட்டிலேயே எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாத அரிசி மாவை பயன்படுத்தினால் நம் சருமம் ஜொலிஜொலிப்பாக இருக்கும் என்றால் யார் தான் உபயோகிக்க மாட்டார்கள். அரிசி மாவை பயன்படுத்தினால் நீங்களே   உணர்வீர்கள் உங்கள் சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும்,பளபளவென்றும் இருப்பதை.