உங்களுக்கு 30 வயதா! அப்போ உங்கள் சருமம் அழகாக இதை படியுங்கள்!

30 வயதில் செய்ய வேண்டிய உடல் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பை பற்றி அறிய இந்த கட்டூரையை தொடர்ந்து படியுங்கள்.

உங்களுக்கு 30 வயதா! அப்போ உங்கள் சருமம் அழகாக இதை படியுங்கள்!

30 வயதை எட்டுவது என்பது ஒரு முக்கியமான மைல்கல். வயது கூட கூட, புதிய சரும பிரச்சனைகள் ஏற்படலாம். 25 வயதுக்கு மேலே, உங்கள் சருமத்தில் நீங்கள் கவனித்த மெல்லிய சுருக்கங்கள் இப்போதுகொஞ்சம் ஆழமாகலாம். உங்கள் தோல் விரைவாக ஈரப்பதத்தை இழந்து, மெல்லியதாகவும், கரடுமுரடானதாகவும் மாறும். அதனால்தான் 30 வயதில் உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்கு உதவக்கூடிய இந்த கட்டூரையை தொடர்ந்து படியுங்கள்.

தண்ணீர் :

நிறைய தண்ணீர் குடித்தால், உடலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கவும் இது அவசியம்.

CTM :

CTM என்றால் க்ளென்சிங்-டோனிங்-மாய்ஸ்சரைசிங் என்று அர்த்தம். சருமத்தை இளமையாக வைக்க இதை அடிக்கடி செய்ய வேண்டும்.

 எக்ஸ்ஃபோலியேட்:

ஒவ்வொரு 2-4 வாரங்களுக்கும் உங்கள் தோல் அதன் மேற்பரப்பில் குவிந்திருக்கும் இறந்த செல்களை உதிர்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த செல்களை  அகற்றாவிட்டால், இவை உங்கள் சருமத்தை மந்தமானதாகவும், கருமையாகவும், மற்றும் வறண்டதாகவும் மாற்றிவிடும். எனவே, வாரத்திற்கு ஒருமுறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது மிகவும் முக்கியம். இதற்கு நீங்கள் ஸ்க்ரப்களை பயன்படுத்தலாம். ஆனால், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டாம். அதிகப்படியாக இதை செய்தால், தோல் எரிச்சல் ஏற்படும்.

சன்ஸ்கிரீன்:

எந்த பருவநிலையாக இருந்தாலும், கண்டிப்பாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். இது புற ஊதாகதிர்களில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், சருமம் வயதான தோற்றமளிப்பதிலிருந்தும்உங்களை பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் SPF 30 மற்றும் PA+ மதிப்பீட்டைக் கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

க்ரீம்:

டோனர்கள், கிரீம்கள், சீரம்கள் மற்றும் பிற தோல் பராமரிப்புப் பொருட்களை வாங்கும் போது, AHAகள்(கிளைகோலிக் மற்றும் லாக்டிக் அமிலங்கள் போன்றவை), வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற மூலப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்யவும். இவை உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கின்றன. 

உணவு:

சரியான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு உடலுக்கும்,சருமத்திற்கும் முக்கியம். ஊட்டச்சத்து நிபுணரைகலந்தாலோசிப்பது நல்லது.

ஃபேஷியல் :

ஃபேஷியல் செய்தால், முகப் பொலிவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாக மாறும். இவை தோலின் இரத்தஓட்டத்தை மேம்படுத்த 

உதவுகின்றன. நீங்கள் பார்லரிலோ அல்லது வீட்டிலோ ஃபேஷியல் செய்யலாம். 

கண்களுக்குக் கீழே கிரீம்:

30 வயதுக்கு மேல் கருவளையங்கள் மற்றும் கண்களைச் சுற்றி வறட்சி போன்ற பல தோல் பிரச்சினைகள் ஏற்படலாம். உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள தோல் பகுதி, முகத்தின் மற்ற பகுதிகளை விட மிகவும் மென்மையானதாக இருப்பதால், கண்களுக்குக் கீழே கிரீம் போட வேண்டும். 

உடல் பராமரிப்பு:

முகப் பராமரிப்பு போல், உங்கள் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கும் பராமரிப்பு தேவை. நீங்கள் ஃபேஸ் க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்தும்போது, அதையே உங்கள் கழுத்திலும் தடவலாம். கைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். பாடி ஸ்கரப் வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். தினமும் பாடி லோஷனைப் பயன்படுத்த வேண்டும்.