சருமத்தை அழகுடன் ஜொலிக்க வைக்க சில வழிகள் 

இந்த மாசடைந்த சமூகத்தில் நம்மை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் நச்சுக்கள் இருக்கின்றன. அதே நச்சு மற்றும் அழுக்குகள் நம்முடைய சருமத்திலும் இருப்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமில்லை.

சருமத்தை அழகுடன் ஜொலிக்க வைக்க சில வழிகள் 

வெளிப்புற நச்சுகள் ஒரு புறம் இருந்தாலும், நமது நவீன உணவு பழக்கம் இன்னும் பல தீய விளைவுகளை சருமத்திற்கு ஏற்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் தாங்கும் பூமாதேவியாக நமது சருமம் இருப்பது பெரிய விஷயம் தான். நமது சருமத்திற்கு சிறந்த பொலிவை தருவது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவு.

அழுக்குகளை நீக்குவது:
பொலிவான சருமம் பெற முதல் படி, சருமத்தை பாதிக்காத வகையில் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவது. சருமம் சுத்தமாக இருக்கும்போது, சரும பாதுகாப்பு பொருட்களில் இருக்கும் ஊட்டச்சத்துகளை ஏற்று கொள்ள தயாராக இருக்கும். 

காலையும் மாலையும்  சருமத்தை சுத்தமாக்க வேண்டும். இதனால்  கட்டிகள், கொப்பளங்கள் , பருக்கள் போன்றவை தோன்றாமல் இருக்கும். சுத்தமில்லாத சருமத்தின் துளைகள் நாம் போடும் மேக்கப் பொருட்கள், அழுக்குகள் போன்றவற்றால் அடைக்கப்படும்.. சுத்தமான சருமம் இயற்கையான முறையில் நச்சுக்களை வெளியேற்றும். அழுக்குகள் அடைக்கப்பட்ட சருமம் பருக்கள், கட்டிகள் போன்றவற்றால் பாதிப்படையும்.
முகத்திற்கு பயன்படுத்தும் க்ளென்சர் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையை அழிக்கும் விதத்தில் இருக்க கூடாது. அழுக்குகளை அகற்றி, சருமம் இழந்த pH அளவை மீட்டு தரும் விதத்தில் இருக்க வேண்டும்.
எண்ணெய் சார்ந்த க்ளென்சர் நல்ல பலனை தரும். மேக்கப் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமம் வறண்டு விடாமல் சமமான pH அளவை கொண்டிருக்க வேண்டும்.

பாதுகாப்பு:
சருமம் சோர்வாக காணப்படும்போது மாய்ஸ்ச்சரைசேர் மட்டும் பயன்படுத்துவது எந்த பலனையும் தராது. பார்மாலிடீஹைடு போன்ற மூலப்பொருட்கள் மற்றும் செயற்கை மூலப்பொருட்கள் இல்லாத டோனர் பயன்படுத்துவதால் சருமம் மாய்ஸ்ச்சரைசரை உறிஞ்சி கொள்ள முடியும்.

சருமத்தை தூய்மை படுத்தி, ஊட்டச்சத்து கொடுத்தவுடன் சருமத்தின் எரிச்சல், வீக்கம், போன்றவற்றை குறைத்து மென்மையை கொடுக்க வேண்டும்.

சிறந்த மாய்ஸ்ச்சரைசேர் சருமத்தில் நீர்ச்சத்தை கொடுத்து சருமத்தை தட்டி எழுப்பும் விதமாக இருக்க வேண்டும். சருமத்தின் தரத்தை உயர்த்துவதாக இருக்க அவேண்டும். ஆகவே தரமான மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்துவது பாதுகாப்பானது .

இரவு உறங்க செல்வதற்கு முன் மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்துவதால், சருமத்தை தளர்த்தி, புத்துணர்ச்சி அடைய செய்ய முடியும்.

மஞ்சள் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது. சருமத்தின் செபம் உற்பத்தியில் சம சீரான நிலையை தருகிறது. செயற்கை மனம் தரும் பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கை எண்ணெய்யை கொண்ட 
மாய்ஸ்ச்சரைசேர் பயன்பாடு சருமத்திற்கு  நன்மை தரும்.

சருமத்தை உயிர்ப்பிக்க :
அணுக்கள் உற்பத்தியை ஊக்குவித்து சருமத்திற்கு அழகையும் புத்துணர்ச்சியையும் இயற்கையான முறையில் மீட்டு தருவது தான் இந்த நிலை. சருமத்தில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு எண்ணெய் செபம் எனப்படுவதாகும். இதன் உற்பத்தி குறையும் போது சருமம் ஒளியிழந்து சோர்வாக காணப்படும். ஆரோக்கியமான எண்ணெய்களை கொண்டு சருமத்தை புதுப்பிப்பது சரும ஆரோக்கியத்தை கொடுக்கும்.
சரும பாதுகாப்பு சாதனங்களில் ஊட்டச்சத்து நிறைந்த எண்ணெய்கள் இருக்கும்படியாக பார்த்து கொள்ளுவது நல்லது. இவை சருமத்தை புதுப்பித்து, புத்துணர்ச்சியை தக்க வைக்கிறது. 

தரமான சரும பாதுகாப்பு சாதனத்திற்கான குறியீடுகள்:
சுத்தமான தீங்கு ஏற்படுத்தாத மூல பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

சருமத்தின் pH அளவு சற்று மென்மையான அமிலத்தன்மையுடன் இருக்க வேண்டும். இதற்கு ஏற்ற சரும பாதுகாப்பு பொருட்களை வாங்க வேண்டும். இதனால் சரும ஆரோக்கியம் மேம்படுகிறது. 

சரும தரத்தை அதிகரிக்கும் இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்க பட்ட பொருட்களை வாங்குவது நல்லது. இதனால் நீண்ட நாட்கள் சருமம் அழகுடன் இருக்க முடிகிறது,

இந்த முறைகளை பின்பற்றுவதால் நாளுக்கு நாள் அழகும் பொலிவும் அதிகரித்து காணப்படும்.