புனர்பாகத்தால் உடலுக்கு இவ்வளவு நன்மையா

இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான உணவு.அதனால் நாமும் நம் முன்னோர்களைப் போல் இந்த புனர்பாகத்தை குடித்து ஆரோக்கியமாக  நோயின்றி வாழ்வோம்.

புனர்பாகத்தால் உடலுக்கு இவ்வளவு நன்மையா

புனர்பாகத்தால் உடலுக்கு இவ்வளவு நன்மையா

நம் முன்னோர்கள் நீண்ட ஆயுளோடு  நோயின்றி வாழ்வதற்காக  இந்த அற்புதமான புனர்பாகத்தை பயன்படுத்தினார்கள். புனர்பாகம் என்றால் அரிசி கஞ்சி என்று பொருள்படும். அரிசியில்  கார்போஹைட்ரேட், புரதம்,  வைட்டமின் பி, இ, சி, தாதுக்கள், அமினோ ஆசிட், ஆன்ட்டி ஆக்சிடென்ட்  போன்ற சத்துக்கள் உள்ளது.அரிசியில் 75 முதல் 80%  ஸ்டார்ச் உள்ளது. இந்த அனைத்து சத்துக்களும் அரிசியால் செய்யும் கஞ்சியில் அதிகமாக இருப்பதால் இதை நாமும் பயன்படுத்தி  ஆரோக்கியத்தை பெறுவோம்.

அரிசி  கஞ்சியைக் குடிப்பதால் ஏற்படும்  நன்மைகள்:

 • உடல் சக்தி பெற:கஞ்சியில் சிறிது உப்பை சேர்த்துக் குடித்தால் உடலுக்கு சக்தி கொடுத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 
 • எலும்புகளையும், பற்களையும் வலிமையாக்க: இந்தக் கஞ்சியில் சிறிது உப்பை சேர்த்துக் குடித்தால், எலும்புகளையும், பற்களையும் வலிமையாக்கும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:  இந்த கஞ்சியில் புதினா, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து குடிப்பதால் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
 • உடல் எடையை குறைக்க: இந்தக் கஞ்சியில் சிறிது சீரகம், உப்பை சேர்த்து குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும்.
 •  உடலில்  ஏற்படும் உஷ்ணத்தைப் போக்க: இந்தக் கஞ்சியில் தயிர், சிறிது சீரகம், உப்பை ஒன்றாக கலந்து குடித்தால் உஷ்ணத்தைப் போக்கி  குளிர்ச்சியை தரும்.
 • ரத்த அழுத்தத்தை சீராக்க: இந்தக் கஞ்சியில் சிறிது உப்பை சேர்த்துக் குடித்தால் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
 • வயிற்றுப்போக்கை குணமாக்க: இந்தக் கஞ்சியில் உப்பு அல்லது சர்க்கரையை கலந்து  குடித்தால் உடலுக்குத் தேவையான அளவு நீர்ச்சத்தை கொடுத்து வயிற்றுப்போக்கின் போது ஏற்படும் சோர்வை போக்கி நோயிலிருந்து விரைவாக குணமாக்கும்.
 • செரிமான சக்தி அதிகரிக்க: இந்தக் கஞ்சியில் சிறிது சீரகம்,அரைத்த புதினா,மிளகு தூள், உப்பை ஒன்றாக கலந்து குடித்தால் செரிமான பிரச்சனையை போக்கும்.
 • பசியின்மையை போக்க: இந்தக் கஞ்சியில் சிறிது சீரகம்,மிளகு தூள்,  உப்பை ஒன்றாக கலந்து குடித்தால்  பசியின்மையை போக்கி பசியை தூண்டும்.
 • உடல் புத்துணர்ச்சி பெற: இந்தக் கஞ்சியில் தயிர், சிறிது சீரகம், உப்பை ஒன்றாக கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.
 • வயிற்று வலியை குணமாக்க: இந்த கஞ்சியில், பனங்கற்கண்டு, வெந்தய தூளை சேர்த்து  குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து, வயிற்று வலியை குணமாக்கும். 

இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான உணவு.  வெயில் காலத்திற்கு ஏற்ற ஒரு குளிர்ச்சியான பானம். இத்தனை பலன்களை கொண்ட புனர்பாகம் நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நம்மூர் பானத்தை விடுத்து அந்நிய பானத்தின் மீது கொண்ட  மோகத்தின் விளைவுதான் மருத்துவமனைகளில் குவியும்  கூட்டம். அதனால் நாமும் நம் முன்னோர்களைப் போல் இந்த புனர்பாகத்தை குடித்து ஆரோக்கியமாக  நோயின்றி வாழ்வோம்.