செல்போன் பயன்பாட்டை குறையுங்கள்

ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு செல்போனின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. ஒரே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர்.

செல்போன் பயன்பாட்டை குறையுங்கள்

செல் போன் பயன்பாடு அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் , எளிதான இன்டர்நெட் வசதியால் உலகத்தையே கையில் வைத்திருக்க முடிகிறது. 
ஆனால் செல்போன் பயன்பாட்டில் பல விபரீதங்கள் ஏற்படுவதும் நாம் அறிந்த ஒன்றுதான். செல்போனில் இருந்து வெளியாகும் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்கள் உடல் நலத்தை பாதிக்கிறது. மூளையின் ஆற்றலை குறைக்கிறது. பல நோய்கள் வருவதற்கும் இந்த கதிர்கள் காரணமாய் இருக்கின்றன.

முற்றிலும் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பது இன்றைய நாட்களில் கடினமான  செயல் தான். இருந்தாலும், நமது உடல் நலத்திற்காக சில விஷயங்களை செய்வதன் மூலம்  ஓரளவு ஆரோக்கியத்தை உடலுக்கு கொடுக்கலாம். அவை என்னவென்று  பார்ப்போம்.

* சிக்னல் குறைந்த இடத்தில் பயன்படுத்த வேண்டாம்:
அதிக அளவு சிக்னல் கிடைக்கும் இடத்தில்  மட்டும் செல்போனை பயன்படுத்த வேண்டும். சிக்னல் குறைவான இடத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறைந்த சிக்னல் இருக்கும் இடத்தில் போன் அதிகமான ஆற்றலை செலுத்த வேண்டி இருப்பதால்  அதிக அளவு கதிர்களை உமிழ்கிறது. இந்த கதிர்களை நமது உடல்தான் ஏற்றுக்கொள்கிறது.

* பாக்டீரியாக்களின் அளவை குறையுங்கள்:
செல்போனை காதில் வைத்து பேசுவதால் ஏற்படும் வியர்வையால் பாக்டீரியாக்கள் உருவாகின்றன. மற்றும் இப்போது எல்லா இடங்களிலும் நாம் செல்போனை பயன்படுத்துகிறோம். வீட்டிற்குள், தோட்டத்தில், பால்கனியில் மற்றும் பாத்ரூமிலும் கூட.. இந்த இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் தூசு மூலமாக கவரப்படுகின்றன. குறிப்பாக செல்போனை பாத்ரூமில் பயன்படுத்துவதால், அங்கு ப்ளஷ் செய்யும் ஒவ்வொரு முறையும் எண்ணற்ற பாக்டீரியாக்கள் போனில் வந்தடைகின்றன.
ஆகவே உங்கள் செல்போனை அடிக்கடி தூய்மை படுத்த வேண்டும். சிறிது தண்ணீர் மற்றும் சிறிது ஆல்கஹாலை ஒரு துணியில் தெளித்து, அந்த துணியை கொண்டு உங்கள் மொபைல் போனை நன்றாக துடைக்கவும். அடிக்கடி உங்கள் கைகளை கழுவுங்கள். இதனால் உங்கள் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் போனில் சேராமல் இருக்கும்.

* தலைக்கு அருகில் போனை வைக்காதீர்கள்:
வைபை அல்லது பிளூடூத் பயன்பாட்டில் இருக்கும் போது உங்கள் காதுகளில் செல்போனை வைக்காமல் ஸ்பீக்கர் போன் அல்லது செல்பி ஸ்டிக்க்கை  பயன்படுத்தலாம். குறைந்த நேரம் பேசுதல் அல்லது மெசஜ் அனுப்புதல் இன்னும் சிறந்தது. செல்போன் பயன்பாட்டில் இல்லாதபோது, அதனை ஏரோபிளேன் மோடில் வைக்கவும்.
ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த மாற்றாக இருக்கலாம். தரமான ஹெட்போன் ஒயர்கள் பாதுகாப்பான முறையில் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒளி அலைகள் சீராக பரவும்.ஆனால் இதனை தரமாக வாங்காமல் இருக்கும் போது அதில் இருக்கும் ஒயர்களே ஆண்டெனாவாக  சிஃனல்களை கவர்வதால் மூளை நேரடியாக பாதிக்கும்.

* குழந்தைகளிடம்  இருந்து விலக்கி வைக்கவும்:
மீட்டிங் அறைகளிலும், குழந்தைகள் இருக்கும் இடத்திலும், மருத்துவமனைகளிலும், பொது இடங்களிலும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்வது நல்லது. இது எலெக்ட்ரோ மேக்னெட் கதிர்கள் பலருக்கும் ஊடுருவாமல்  இருக்க உதவும்.  செல்போனில் இருந்து  வரும் எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்கள் குழந்தைகளின் உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். 
செல்போன், வைபை போன்றவை  ஆனில் இருந்தாலே கதிர்களை உமிழும். ஆகவே இரவு நேரங்களிலும், பயன்படுத்தாமல் இருக்கும் நேரங்களிலும், செல்போனை அணைத்து வைப்பது நல்லது.  அவசரநேரத்தில் மட்டும் செல்போனை பயன்படுத்துவது நல்லது.
* செல்போனை வைக்கக்கூடாத உடல் பகுதி:

செல்போனை பேண்ட் பாக்கெட், மார்பு பகுதி போன்ற இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும். செல்போனை மார்பு பகுதியின் அருகில் வைப்பதால் மார்பு புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. பேண்ட் பாக்கட்டில் வைப்பதால் கருவுறுதலில் பிரச்சனை  தோன்றலாம். பொதுவாக படுக்கை அறைகளில் செல்போன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்களின் தாக்கத்தை  குறைக்க மெக்னீசியம் அதிகமான உனவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. செல்போனை ஒரு  அத்தியாவசிய பொருளாக பார்க்க தொடங்கி  விட்டோம். அதில் இருந்து மீண்டு , தேவைக்கேற்ப அதனை பயன்படுத்தினால், பல தீய விளைவுகளில் இருந்து நாமும் நமது சந்ததியும் மீளலாம்.