அத்தி உடலுக்கு சக்தி

அத்தி பழத்தின் மருத்துவ பலன்களை இப்போது பார்க்கலாம்.

அத்தி உடலுக்கு சக்தி

உடலுக்கு சக்தியளிக்க மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் பல உணவு பொருட்களை பரிந்துரைக்கின்றனர். அவற்றுள் மிக முக்கியமானது உலர்  பழங்கள். உலர் பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அளவுக்கதிகமாக உள்ளன. உலர் பழங்களில் அனைவருக்கும் பிடித்த ஒன்று அத்தி பழம். இதனை உண்பதால் கிடைக்கும்  பயன்கள் ஏராளம். இந்த அத்தி பழத்தை பல வகையாக நம் உணவில் நாம் எடுத்துக் கொள்ளலாம். 

அத்தி பழத்தை வெயிலில் உலர வைத்து அதை அப்படியே உண்ணலாம். இப்படி உலர்த்திய பழங்கள் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். முந்திரியுடன் சேர்த்து இதை ஒரு மில்க் ஷேக்காக  செய்து உட்கொள்வது உலகில் பலருக்கும்   மிகவும் பிடித்த ஒரு பானமாகும். இதனை செய்வதற்கு அத்தி பழத்தை நன்றாக ஊறவைத்து பின் அதனுடன்  முந்திரி மற்றும் பால் சேர்க்க வேண்டும் .

இதனை சிறிய துண்டுகளாக்கி  சாலட்டில்  பயன்படுத்தலாம் . அத்தி பழத்தை இனிப்புகள் செய்வதில்   உபயோகித்தால் அதன்  சுவை இரட்டிப்பாகும். குறிப்பாக பர்பி மற்றும் பால் பேடா செய்வதில் இதன் பங்கு மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இரத்த அழுத்தம் மற்றும் வயது மூப்பு:
அத்திப்பழங்களில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். இது சோடியத்தின் விளைவுகளை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. ஈஸ்ட்ரோஜென் மற்றும் இருப்பு சத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வயது முதிர்வை தடுக்கிறது. சருமத்திற்கு, தலைமுடிக்கு மற்றும் நகங்களுக்கு இது நல்ல பலன்களை கொடுக்கிறது. அத்தி பழத்தை கூழாக்கி முகத்தில் போடும் போது பருக்கள் தோன்றுவது குறைகிறது.

எடை மேலாண்மைக்கு   உதவுகிறது:
அத்தி பழத்தை குறிப்பிட்ட அளவு எடுக்கும் போது அது  எடையை  கட்டுப்படுத்த உதவுகிறது. அவை நார்ச்சத்து நிறைந்தவைகளாக இருக்கின்றன. வறுத்த மற்றும் தேவையற்ற சிற்றுண்டிகளை உண்பதற்கு பதிலாக நாம் அத்தி பழத்தை தேர்வு செய்தால் , அது வயிற்றை ஆரோக்கியமான முறையில் நிரப்பும். இதனால் தேவையற்ற கொழுப்புகளால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறையும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு:
அத்தி பழங்கள் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைகின்றன.
ட்ரைகிளிசரைடுகள் என்பன இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பு துகள்களாகும். இவை இதய நோய்களுக்கு மற்றும் மாரடைப்புக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது:
இதய நோய் , நீரிழிவு , புற்று நோய் போன்ற நோய்களுக்கு  நாள் பட்ட வீக்கங்களே காரணம். 
அத்தி பழங்களில் ஆக்சிஜெனேற்ற சக்தி அதிகமாக உள்ளது. ஆகவே நாள் பட்ட வீக்கத்திற்கான அடிப்படை கூறுகளை கட்டு படுத்துவதில் இவை துணை புரிகின்றன.ஆகையால் இந்த நாட்பட்ட வீக்கங்களில் இருந்து நம் உடலை காப்பதில் அத்திப்பழம் இன்றியமையாததாகும்.
 
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது:
அத்திப்பழங்களில் காணப்படும் குளோரோஜெனிக் அமிலம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.அத்திப் பழத்தில் காணப்படும்  அதிக அளவு பொட்டாசியம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய  பங்கு வகிக்கிறது.

பலமான எலும்புகளை வடிவமைக்கும்:
எலும்புகளை பலப்படுத்துவதில் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. அத்தி பழங்களில் கால்சியம் அதிகமாக  உள்ளதால் இவை எலும்புகளை பலமாக்குகிறது.கால்சியம் சத்துக்களை உடலுக்கு தருவதில் பால் பொருட்களுக்கு பிறகு  அத்திப்பழத்தை நாம் பயன் படுத்தலாம். 

மலச்சிக்கலைத் தடுக்கும்:
அத்தி பழத்தில் நார் சத்து அதிகமாக இருப்பதால் அது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. இதனால் மலச்சிக்கல்  தடுக்கப்படுகிறது.
 

இனப்பெருக்க அமைப்பை சரிபார்க்கிறது:
அத்தி பழத்தில் மெக்னீசியம், ஜின்க், மாங்கனீசு போன்ற தாதுக்கள் உள்ளன. இவை நீண்ட ஆயுளையும் கருவுறுதலுக்கான  வளத்தையும் கொடுக்கின்றன. ஆகவே குழந்தை பேறுக்கு திட்டமிடும்போது அல்லது கர்ப்பமாக இருக்கும் போது அத்தி பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும்போது அது ஒரு சிறந்த பலனை தருகிறது. 

சிறுநீரக கற்களை தடுக்க:
அத்தி இலைகளை  எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். பிறகு அந்த நீர் குளிர்ந்தவுடன் பருக வேண்டும்.இதை சில நாட்கள் தொடர்ந்து செய்யும்போது சீறுநீரக கற்களை  தடுக்க முடியும் .