காளான் வளர்ப்பு

அதிக அளவு புரதச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காளானை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காளான் வளர்ப்பு

காளான் வளர்ப்பு

நாம் விரும்பி சாப்பிடும் காளானில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

காளானில் செலினியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன என்பதை மிடிஸி டுலன் என்பவர் தி பின்டெரெஸ்ட் டயட் என்னும் நூலில் கூறியிருக்கிறார். இவ்வளவு சத்துள்ள காளானை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காளான் வளர்க்க தேவையான பொருட்கள்: 

  1. காளான் விதை,
  2. பாலித்தீன் பை( ஒரு அடி அகலம் இரண்டு அடி உயரம்)
  3. வைக்கோல்

வைக்கோல் பக்குவப்படுத்தல்: வைகோலை சிறிது சிறிதாக வெட்டி கொதி நீரில் ஒரு மணி நேரம் வேக வைக்கவும் பின் நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். 

காளான் படுக்கை தயாரித்தல்:

  1. இரண்டுக்கு ஒரு அடி அளவுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் 3:1 என்ற விகிதத்தில் வைக்கோலும், காளான் விதையையும் இட்டு படுக்கைகள் தயாரிக்கவும்.
  2. பாலித்தீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதனை உள்பக்கமாக திருப்பி அதில் இரண்டு இன்ச் வைக்கோல் துண்டுகளை நிரப்பி அதன் மேல் ஒரு தேக்கரண்டி (30) கிராம் காளான் விதையை தூவ வேண்டும்.
  3. இதே போல் நான்கு அடுக்குகள் தயாரித்து மேலடுக்கு 2 இன்ச் வைக்கோல் பரப்பி சணலால் கட்ட வேண்டும்.
  4. பாலிதீன் பையின் மையப் பகுதியில் பென்சில் அளவு 10 துளைகள் போட வேண்டும். இந்த படுக்கைகளை வயலில் கட்டி தொங்கவிட வேண்டும்.
  5. படுக்கையில் பூசண விதைகள் பரவ 15 நாட்கள் ஆகும்.
  6. பின் படுக்கைகளை காளான் தோன்றும் அறைக்குள் மாற்ற வேண்டும். 

காளான் அறை தயாரித்தல்: 

ஒரு இருட்டான அறையில் காளான் படுக்கைகளை கட்டி தொங்கவிட வேண்டும் எட்டு நாட்களில் காளான் மொட்டு தோன்றி மூன்று நாட்களில் காளான் உருவாகிவிடும். காளான் அறுவடைக்குப் பின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்கவும் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை அறுவடை செய்ய வேண்டும். 500 கிராம் வைக்கோலுக்கு 900 கிராம் காளான் கிடைக்கும்.

நாம் உண்ணும் உணவு சுவைக்காக மட்டுமின்றி ஆரோக்கியத்திற்காகவும் இருந்தால் நல்லது தானே, நல்லதை விதைத்தால், நல்லதையே அறுவடை செய்வோம்.