த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???

திருப்பங்களும், எதிர்பாரா விஷயங்களும் நிறைந்த, சிறந்த 17 பாலிவுட் த்ரில்லர் படங்களின் லிஸ்ட் இங்கே உள்ளது. சீட்டின் நுனிக்கே உங்களை வர வைக்கக்கூடிய, இந்த படங்களை, த்ரில்லர் லவ்வர்களுக்காகவே இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???
த்ரில்லர் படங்களின் லவ்வரா நீங்கள்???

என் ஹெச் 10:

 

டெல்லியின் புறநகரில் நடப்பதாக காட்டப்படும், இந்த த்ரில்லர் படத்தில், இந்தியாவில் நடக்கும் ஆவணக் கொலைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து நீங்கள் பயப்படும் அளவுக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. தியேட்டரை விட்டு வெளியேறும்போது, ஏற்படும் அச்சத்தை கண்டிப்பாக தவிர்க்க  முடியாது.

 

 

 

ஷைத்தான் (2011):

 

 

 

ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளே இருக்கும் உள்ளார்ந்த ஷைத்தானின் குணத்தை  இந்த படம் கூறுகிறது. இந்த த்ரில்லர் படத்தில் நகர்ப்புற உள்ள சில இளைஞர்களை சுற்றி கதை பிண்ணப்பட்டுள்ளது. சுலபமாக பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபடும் அந்த  இளைஞர் கூட்டம், தங்களுக்குளேயே உள்ள பணக்காரக் பையனை கடத்துவது போல் கதையிருக்கும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி கூறுவதாக படம் நகர்கிறது. நம்மை இந்த படம் பலவிதத்தில் பயமுறுத்திவிடும். 

 

 

 

அக்லி 2013:

 

 

பெயருக்கு ஏற்ற போல், இந்த த்ரில்லர் படம் மனிதர்களின் சுயநலம் மற்றும் பேராசையினால் ஏற்படும் அசிங்கத்தை காட்டுகிறது. தனது கடத்தப்பட்ட குழந்தையைத் மீட்க விரும்பும் ஒரு குடிகாரத் தாய், கையில் பணம் கிடைத்ததால் தனது காதலனை ஏமாற்றும் ஒரு பெண், தனது சகோதரியை பணத்திற்காக மிரட்டும் ஒரு இளைஞன் என படத்தின், ஒவ்வொரு கதாபாத்திரமும் உங்களை பயமுறுத்தும் . இந்த படம் பல மட்டங்களில் நம்மை யோசிக்க வைக்கிறது.

 

 

பாஞ்ச்( ரீலீஸாகவில்லை):

 

இந்த படம் மிக வன்முறையாக இருப்பதால்

,இன்னும் சென்சார் வாரியம் இதை திரையிட அனுமதிக்கவில்லை. அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் முதல் படமான இது, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் போதைப்பொருள், பாலியல் மற்றும் வன்முறை என பயமுறுத்தும் காட்சிகளால் நிறைந்துள்ளது.

 

 

 

குலால் (2009):

 

 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில், துரோகம், ஆசை, சக்தி, ஊழல் மற்றும் காமம் ஆகியவற்றை பற்றி கூறும் சிக்கலான கதை. ராஜஸ்தானில் எடுக்கப்பட்ட  இந்த படம் ராகிங் மற்றும் மாணவர் பல்கலைக்கழக அரசியலை கூறுகிறது. படத்தில் தலைப்புக்கு ஏற்றவாறு வன்முறை காட்சிகள் அதிகம்.

 

 

 

பேண்டிட் குயின் (1994):

 

 

அரசியல்வாதியான பூலன் தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, சேகர் கபூரின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடுமையான வன்முறை காட்சிகளை கொண்டிருந்ததால் தணிக்கை வாரியத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. இப்படம் ஒரு உண்மை கதையை கொண்டு எடுக்கப்பட்டது.

 

 

 

சங்கர்ஷ் (1999):

 

 

அசுதோஷ் ராணாவின் சிறந்த நடிப்பில் வெளிவந்த சங்கர்ஷ், மத கொள்கைகளுக்காக, பலியிடும் சடங்கை பற்றிய கதையை பேசுகிறது. ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் கதை பலவிதத்தில் நம்மை தொந்தரவு செய்கிறது. இது நாம் வாழும் சமூகத்தின் மோசமான பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு தைரியமான முயற்சி.

 

 

 

சத்யா (1998):

 

கெட்ட வார்த்தைகள், ரத்தக் காட்சிகள் மற்றும் வன்முறை கதை என எல்லா பயங்கர பக்கத்தையும் சத்யா காட்டுகிறது. இந்த படம் மும்பையின் இரக்கமற்ற தன்மையைக் காட்டுகிறது. இதன் அண்டர்வேர்ல்டு  உலகிற்குள் சிக்கிக் கொள்ளும் ஒரு புலம்பெயர்ந்தவரின் கதையைச் படம் சொல்கிறது. ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இப்படம், மனதை கண்டிப்பாக உலுக்கும்.

 

 

தாட் டே ஆப்டர் எவ்ரி டே (2013):

 

 

குறும்படமாக இருந்தாலும், ஈவ்-டீசிங் பற்றி தைரியமாக கூறுதால் ,இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அனுராக் காஷ்யப்பின் அபாரமான இயக்கத்தில் வந்த இப்படம் உணர்ச்சிகளின் கலவையாக உள்ளது.

 

 

துஷ்மேன் (1998):

 

 

இந்த படத்தில் அசுதோஷ் ராணாவின் பயமுறுத்தும் மனநோயாளியாக நடித்துள்ளார். இப்படத்தை பார்த்தால் பயத்தில் இரவில் தூக்கம் வராது. பாலியல் ஆசைக்காக இளம்பெண்களை, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் இரக்கமற்ற கதாபாத்திரத்தில்  ராணா நடித்துள்ளார். இப்படத்தை பார்த்தால், கோவத்தில் ராணாவை வெறுக்க ஆரம்பித்துவிடுவோம். படத்தின் முடிவில் நீதி வழங்கப்பட்டாலும், படம் மனதை கடுமையாக பாதிக்கிறது

 

சத்மா (1983):

 

 

ஒரு பள்ளி ஆசிரியர் (கமல்ஹாசன்) மற்றும் கார் விபத்தால் நினைவிழந்த ஒரு பெண்ணை (ஸ்ரீதேவி) சுற்றிய கதை தான் சத்மா. தான் யாரென்றே தெரியாத ஸ்ரீதேவியை காதலுடன் கமல் கவனித்துக்கொள்கிறார். கதையின் முடிவில், தனது இழந்த நினைவை மீண்டும் பெறும் ஸ்ரீதேவி, கமலை அடையாளம் காணத் தவறுகிறார். படம் ஒரு உணர்ச்சிபூர்வமான க்ளைமாக்ஸ் காட்சியில் முடிவடைகிறது, அங்கு ஸ்ரீதேவிக்கு தன்னை நினைவுபடுத்த கமல் தீவிரமாக முயற்சிக்கிறார், ஆனால் பயனில்லை. இந்த காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது. தைரியமானவர்களை கூட அழவைத்துவிடும்.

 

பிரதிகாத் (1987):

 

 

பிரதிகாத் படம் அரசியல்வாதி மற்றும் கல்லூரி விரிவுரையாளருக்கு இடையேயான போராட்டம் பற்றியது. கணவரின் முன்பே மக்கள் கூட்டம் நிறைந்த தெருவில் மனைவி துன்புறுத்தப்படும் காட்சி மிக கொடுமையானது. கடைசியில் படத்தில் நாயகி வில்லனின் தலையில் கோடரியை வைத்து அடித்து நொறுக்கி பழிவாங்குகிறாள். வன்முறை நிறைந்த காட்சிகளை கொண்டு, அநியாயத்திற்கு எதிராக போராடும் ஒரு பெண்ணை பற்றிய கதை இது.

 

 

அஞ்சம் (1994):

 

 

வெறித்தனமான காதலால் ஏற்படும் விளைவுகளை கூறும் பழிவாங்கும் கதை இது. படத்தில் ஷாரூக் மோசமானவானக நடித்துள்ளார். தனது மணிக்கட்டுகளை அறுப்பதும், கதாநாயகியை துன்புறுத்துவதும் மற்றும் தீபக் டிஜோரியின் மண்டையை உடைப்பது என வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக உள்ளது.

 

 

 

 

வாஸ்தவ்:

 

 

ரவுடி சோட்டா ராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இப்படம் மும்பையின் நிழல் உலகத்தின் யதார்த்தத்தைக் காட்டுகிறது. ஒரு அப்பாவி மனிதர் (சஞ்சய் தத்) தற்செயலாக ஒரு ரவுடியின் சகோதரனைக் கொன்றுவிடுகிறார். கடைசியில் சூழ்நிலைகளால் சஞ்சய் மும்பையின் பயங்கர ரவுடிகளில் ஒருவராக மாறிவிடுகிறார்.

 

ஷூல் (1999):

 

 

 

ஷூல் படம் ஒரு நேர்மையான போலீஸ்காரரை பற்றியது. தனது நேர்மையால் அவர் அனுபவிக்கும் துன்பங்கள் தான் படத்தின் கதை. ஹூரோ மனோஜ் பாஜ்பாய் பீகாரில் உள்ள ஒரு கிராமத்தின் பயங்கர ரவுடியை அரெஸ்ட் செய்கிறார். ஊரலுக்கு எதிராக போராடும் பாஜ்பாய் கடைசியில் தனது மனைவியையும் குழந்தைகளையும் இழந்து விடுகிறார். படத்தின் களைமாக்ஸில் பாஜ்பாய் மாநில சட்டப்பேரவையில் நுழைந்து இந்திய சினிமாவில் மிகச்சிறந்த உரைகளில் ஒன்றை நிகழ்த்தி, ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சியில் முடிவடைகிறது. 

 

 

 

எல்.எஸ்.டி (2010):

 

 

 

எல்.எஸ்.டி படம், ஒரு சிறந்த திரைக்கதையை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஹேண்டிகேம் கேமராவை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், திபாகர் பானர்ஜி சிறந்த படத்துக்கு பணம் தேவையில்லை என்பதை நிரூபித்துள்ளார். படம் முழுவதும் உங்களுக்கு ஒரு நொடி கூட போர் அடிக்காது. மென்மையான மணம் கொண்டவர்களுக்கு இப்படம் ஏற்றது அல்ல.