பஞ்சகவ்யா

இயற்கை உரமான பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா என்பது இயற்கை உரம். நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கும் கோமியம், மாட்டு சாணம், பால், தயிர், இளநீர் போன்ற பொருட்களை கொண்டு தான் பஞ்சகவ்யாவை செய்கிறார்கள். இந்த உரம் பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அன்று நம் முன்னோர்கள் விவசாயம் செழிக்க இது போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தினார்கள். அதனால் தான் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்தனர். பஞ்சகவ்யா தயாரிக்கும் முறையை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:(20லிட்டர்)

  1. பசுமாட்டுச் சாணம் 5 கிலோ,
  2. மாட்டு கோமியம் 3 லிட்டர்,
  3. பசுமாட்டு பால் 2 லிட்டர்,
  4. பசு மாட்டு தயிர் 2 லிட்டர் (நன்கு புளித்தது),
  5. பசுமாட்டு நெய் அரை லிட்டர்,
  6. வாழைப்பழம் 12,
  7. இளநீர் மூன்று லிட்டர்,
  8. கரும்புச் சாறு 3 லிட்டர்.

செய்முறை: 

பச்சை பசுஞ்சாணி ஐந்து கிலோவுடன், பசுமாட்டு நெய் அரை லிட்டர் கலந்து பிளாஸ்டிக் வாளியில் மூன்று நாட்கள் வைக்கவும். தினம் ஒரு முறை இதை பிசைந்து விடவும். நான்காவது நாள் மற்ற பொருள்களுடன் இவைகளை ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாளியில் நன்கு கரைத்து அதை மூடி நிழலில் வைக்கவும். தினம் இருமுறை குச்சியால் நன்கு கலக்கிவிட வேண்டும். இதனை 21 நாட்கள் எந்த ஒரு இடையூறும் இன்றி வைக்கவும். பின்பு தேவையான நீர் சேர்த்து நன்கு கலக்கி விடவும் பின் இதனை வடிகட்டி பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் அளவு: 100 லிட்டர் நீரில் 3 லிட்டர் பஞ்சகாவ்யா கரைசலைச் சேர்த்து உபயோகப்படுத்தலாம்.

பயன்கள்: 

  1. நெல் சாகுபடியில் அதிக கிளைகள், அதிக கதிர்கள்.
  2. ஒவ்வொரு கதிரிலும் கதிரிலும் அதிக நெல்மணிகள்.
  3. எந்த நோயும் தாக்காது.
  4. இரசாயன நெல்லை விட அதிக விளைச்சல்.
  5. 15 நாட்களுக்கு முன்னரே அறுவடை.
  6. நெல்லின் எடையும் அரைத்த பின் கிடைத்த அரிசியும் அதிகம்.
  7. நஞ்சில்லா உணவால் மருத்துவ செலவு இல்லை.
  8. சாகுபடி செலவு குறைவு, லாபம் அதிகம். 

இது போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி மனிதனை மட்டுமல்ல மண்ணையும், இயற்கை விவசாயத்தை காப்போம்.