இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா ?

றூத்தின் என்பது குறிப்பிட்ட தாவர அடிப்படைக் கொண்ட உணவுகளில் காணப்படும் பயோ ப்லேவனைடு என்னும் ஒரு கூறு ஆகும். ஆரோக்கிய உணவுக்கு மாற்றாக தற்போது பரவலாக இது புகழ் பெற்று வருகிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா ?


றூத்தின்  - 10 ஆரோக்கிய நன்மைகள் 

றூத்தின் என்றால் என்ன?
பல பழங்கள் மற்றும் தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் பயோப்லேவனைடு கூறு இந்த றூத்தின். இதனை ரூடோசைடு , சொபோரின் என்ற பெயரிலும் அழைப்பார்கள். ஆனால் பெரும்பாலும் இதனை ப்லேவனைடு என்றே குறிப்பிடுவார்கள். இந்த முக்கிய கூறு பல்வேறு அன்டி ஆக்சிடென்ட் தன்மைகளை தன்னிடம் கொண்டுள்ளது. பல்வேறு நோய்நீக்கும் மற்றும் தடுக்கும் தீர்வுகளுக்கு பயன்படுவது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆன்மீகத்திலும்  மருத்துவத்திலும் இந்த பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் உணவில் சில மாற்றங்கள் செய்வதால் இந்த பயோ ப்லேவனைடை உங்கள் உணவில் எடுத்துக் கொள்ள முடியும் அல்லது மாத்திரை வடிவத்திலும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
 
றூத்தின் - ஆரோக்கிய நன்மைகள் :

றூத்தின் கொண்டுள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது காணலாம்.

1. இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது:
பாரம்பரியமாக, றூத்தின் , இரத்தக் குழாய்களின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், அவற்றை வலிமையாக்கவும் உதவுவதாக நம்பப்படுகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டத் தன்மை மேம்படுகிறது, இரத்த ஓட்டம் அதிகரிப்பதால், உடலின் ஆற்றல் அளவு அதிகரித்து, சீரான முறையில் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் சரியான முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்கள் வலிமையடைவதால், வெரிகோஸ் வெயின்ஸ், மூல நோய், சிராய்ப்பு புண் போன்ற நோய்கள் தொடர்பான அறிகுறிகள் தடுக்கப்படுகின்றன. உடலின் ட்ரை க்ளிசரைடு அளவை நிர்வகிப்பதில் சிறந்த முறையில் றூத்தின் உதவுவதாக பார்மகொலோஜிகள் ரிசர்ச் நடத்திய ஆய்வில் மருத்துவர். சாண்டோஸ் குறிப்பிட்டுள்ளார். 

2. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது:
இந்த கூறில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் பண்புகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. இதனால் இதய மண்டலம் ஆரோக்கியமான முறையில் நிர்வகிக்கபப்டுகிறது. இதனால் இதயம் தொடர்பான பல்வேறு நோய்கள், நீரிழிவு போன்றவை சிறந்த முறையில் தடுக்கப்படுகின்றன.

3. இதயக் கோளாறுகள் குறைக்கப்படுகிறது:
கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, உடலின் இரத்த உறைவு ஏற்படுவதை றூத்தின் தடுப்பதாகவும் அறியப்படுகிறது. உடலில் இரத்த உறைவு ஏற்படுவதால் மாரடைப்பு, வாதம், நுரையீரல் வளித்தேக்கம் போன்றவை ஏற்படலாம்.

4. கீல்வாதம் தொடர்பான அறிகுறிகளை குறைக்கிறது:
றூத்தினில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது. மூட்டுகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. எலும்புப்புரை அல்லது கீல்வாதம் போன்ற பாதிப்புகளுக்கு இதனை மாத்திரையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ப்ரோமிளின் மற்றும் ட்ரிப்சின் போன்ற புரதங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

5. அறுவை சிகிச்சைக்கு பின்னர் உண்டாகும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது:
ட்ரிப்சின், பபைன் போன்ற கூறுகளுடன் இணைத்து றூத்தின் சேர்க்கப்பட்ட மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால், சில வகை அறுவை சிகிச்சைக்கு பிறகு, உதாரணதிற்கு மார்பக நீக்கம் போன்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு  உண்டாகும் வீக்கம் குறைவதாக சில ஆதாரங்கள் உள்ளன. 
 
6. வயது முதிர்விற்கான அறிகுறிகள் குறைகிறது:
சில நேரங்களில் சரும பராமரிப்பு பொருட்களில் றூத்தின் சேர்க்கப்படுகிறது. சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கவும், சுருக்கங்களைக் குறைக்கவும் றூத்தின் உதவுவதாக நம்பப்படுகிறது.

7. உடலின் நச்சுகளைப் போக்குகிறது:
உடலை இளம் வயதில் முதிர்ச்சி அடையச் செய்வதும், சருமத்தை சேதப்படுத்தவும் காரணமான ப்ரீ ராடிக்கல்களைக் கட்டுப்படுத்தும் தன்மை றூத்தினுக்கு உண்டு. இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் உடலில் விஷத்தன்மை அழுத்தம் , அழற்சி மற்றும் இதர நாட்பட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்துவதற்கு முன்னர் அதன் பாதிப்பை சமநிலைப் படுத்துகிறது. இதே போன்ற மற்ற அன்டி ஆக்சிடென்ட்களுடன் ஒப்பிடும்போது, றூத்தின் ப்ரீ ராடிக்கல் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்றுவதில் தனித்தன்மை பெற்றது என்று ஜர்னல் ஆப் புட் சைன்ஸ் அண்ட் டெக்னாலஜி என்னும் பதிவில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

8. புற்றுநோய் எதிர்ப்பி :
புற்று நோய்க்கான வழக்கமான சிகிச்சைக்கு ஒரு சிறந்த துணையாக றூத்தின் இருப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கபட்டுள்ளது.

9. மெனியர் நோய் :
காதிரைச்சல், மயக்கம், அடிக்கடி காது கேளாமை போன்ற தீவிர பாதிப்புகளைத் தருவது மெனியர் நோய். இந்த வகை மெனியர் நோய்க்கு றூத்தின் சிறந்த சிகிச்சையைத் தருவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. 

10. மியூகோசிடிஸ் பாதிப்பைக் குறைக்கிறது 
மியூகோசிடிஸ் என்பது சில வகை புற்றுநோய் சிகிச்சை காரணமாக அடிக்கடி ஏற்படும் ஒரு வித வீக்கம் ஆகும். இந்த ப்லேவனைடு , மியூகோசிடிஸ் நிலையைத் தடுக்க உதவுவதாக அறியப்படுகிறது.

உங்கள் தினசரி உணவில் றூத்தினை எவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம்?
சிலவகைப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு றூத்தின் காணப்படுகிறது. அவை,
 . ரோஸ் ஹிப் 
 . ப்ளக் கரண்ட் 
 . பக்வீட் (வெள்ளாவி அவித்த கோதுமை)
 . எலுமிச்சை மரப் பட்டை 
 . எலுமிச்சை மர பூக்கள்
 . ப்ளக் மற்றும் க்ரீன் டீ 
 . ஆப்பிள் தோல் 
 . எல்டர் பூக்கள்
 . செயின்ட் . ஜான் வார்ட் 
 . அத்தி
 . அஸ்பரகஸ்
 
ரோஸ் ஹிப் அல்லது ப்ளக் கரண்ட் கொண்டு ஜாம் தயாரிக்க முயற்சிக்கலாம் . குளிர் காலத்தில் காணப்படும் இந்த பழங்கள் றூத்தின் கூறின் ஆதாரமாக விளங்குகின்றன.
பக்வீட் நூடுல்ஸ் சூப் அல்லது அஸ்பரகஸ் சாலட் போன்றவை ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த றூத்தின் அதிகமுள்ள உணவாக , சுவை மிகுந்த உணவாக கருதப்படுகின்றன.
 
மாத்திரை வடிவம் :
உணவில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டாம் என்று விரும்புகிறவர்கள், மாத்திரை வடிவத்தில் இந்த ப்லேவனைடை எடுத்துக் கொள்ளலாம். உணவிற்கு பின் ஒரு கிளாஸ் தண்ணீருடன் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். இந்த ப்லேவனைடை மாத்திரை வடிவத்தில் எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்கள், சரிபார்க்கப்பட்ட இடத்தில் இருந்து மாத்திரைகளை வாங்க வேண்டும். பாட்டிலில் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும் அல்லது மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். ஒரு நாளில் இரண்டு 500 மிகி மாத்திரைகள் பரிந்துரைக்கபப்டுகின்றன. பக்வீட், ஜப்பானிய பகோடா மரம் மற்றும் தைல மர இலைகள் போன்றவை மருத்துவ மருத்துவ பயன்பாட்டிற்கான றூத்தின் ஆதாரங்களாகும். வறண்ட, அடர்ந்த மற்றும் குளிர்ச்சியான இடங்களில் இந்த மாத்திரைகளை சேமித்து வைக்க வேண்டும்.

பக்க விளைவுகள் :
உணவுகளில் இயற்கையாக இருக்கும் றூத்தின் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். இருப்பினும், கர்ப்பிணிகள், தாயாக தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் றூத்தின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த கூறை மாத்திரையாக எடுத்துக் கொள்வதால் பல வித பக்க விளைவுகள் குறிப்பாக, வயிற்றுக்கோளாறு , தலைவலி, பதட்டம், பார்வை மங்குதல், இறுக்கம், சரும தடிப்பு, மூட்டுகளில் திரவ சேர்க்கை அல்லது அசாதாரணமான இதயத் துடிப்பு போன்றவை ஏற்படலாம். ஒரு சிலருக்கு இந்த கூறை மிக அதிக அளவு எடுத்துக் கொள்வதால் சில நேரங்களில் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம். அந்த நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவது நல்லது. மருத்துவரின் தெளிவான பரிந்துரை இல்லாமல், இந்த கூறின் பல்வேறு ஒருங்கிணைப்புகளை எடுத்துக் கொள்வது சில நேரங்களில் பாதிப்பை உண்டாக்கலாம்.