குளிர் சாதனத்தின் டன் என்றால் என்ன ?

சில வருடங்களுக்கு முன் ஏர் கண்டிஷனிங் ஒரு ஆடம்பர பொருளாக இருந்தது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிமாக இருக்கும் இந்த காலத்தில்  பலருக்கு இது ஒரு அத்தியாவசியமானதாகி விட்டது .

குளிர் சாதனத்தின் டன் என்றால் என்ன ?

வெப்பமான  காலநிலைகளில் பெரும்பாலான வீடுகளை குளிர்விக்க குளிர் சாதனம் தேவையாக உள்ளது.  நடுத்தர குடும்பங்களில் கூட இன்று ஏர் கண்டிஷனர் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. கீழே கொடுக்கப்படும் தகவல் மக்களுக்கு குளிர் சாதனத்தைப் பற்றி மேலும் நன்கு அறிய உதவும்.

குளிர் சாதனம் பற்றி?
1908 ஆம் ஆண்டில் "ஜி. பி. வில்சன்" என்பவர் முதன் முதலில் "குளிர் சாதன செயல்பாட்டு வரையறை" என்பதை உருவாக்கினார். குளிர் சாதனத்தின் தந்தை எனக் கூறப்படும், "வில்லிஸ் கேரியர்", இதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டார்.

ஒரு கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொருத்தமான காற்று சூழலை பராமரிக்க குளிர் சாதனம் உதவும்.
சில இடங்களில் அதிகமாக ஈரப்பதத்திலிருந்து காற்றை விடுவிக்க உதவும்.
சீரான மற்றும் போதுமான காற்றோட்டத்தை அனைத்து இடங்களிலும் விநியோகிக்க  இது உதவுகிறது.
காற்றில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத உயிரினங்கள், தூசி, மற்றும் பிற வெளி மாசுகளை  திறம்பட நீக்கி நம்மை காக்கிறது.
கடுமையான வெயில் காலங்களிலும் குளிர் சாதனம் பொருத்தி இருக்கும் அறைக்கு குளிர் காற்று கொடுக்கிறது.
சில சாதனங்கள் குளிர் காலத்தில் அறைக்கு வெப்பக் காற்றையும் கொடுக்கும் தன்மை கொண்டது. குளிர் பிரதேசங்களில் இத்தகைய சாதனம் உபயோகப்படும் .

குளிர் சாதனம் எப்படி வேலை செய்கிறது?
குளிர் சாதனத்தின் முதல் பணி நமது வீட்டிலோ அல்லது அறையிலோ இருக்கும் சூட்டை வெளியேற்றுவதே. குளிர் சாதனம் சூடான காற்றறை வெளியே அனுப்புவதோடு மட்டும் அல்லாமல், நமது அறைக்கு உள்ளே குளிர் காற்றையும் புகுத்துகிறது. "எவாப்பிரேட்டர் காயில்" (evaporator coil) எனப்படும் சில "குளிர் குழாய்கள்" (cold pipes) மூலம் அவை குளிர்ச்சியை நமது அறையினுள் செலுத்துகின்றன. நமது உடலில் வியர்வை எப்படி ஆவியாகிறதோ அதே போன்ற செயலை "எவாப்பிரேட்டர் காயில்" செய்கிறது. அதனாலேயே இதற்கு இப்பெயரும் வந்தது. இந்த "எவாப்பிரேட்டர் காயிலில்" ஒரு குறிப்பிட்ட வகை திரவம் நிரப்பப்பட்டு இருக்கும். அந்த திரவத்தின் பெயர், "ரெஃப்ரிஜிரேண்ட்" (refrigerant) எனப்படும். இந்த "ரெஃப்ரிஜிரேண்ட்" எனப்படும் திரவமே, காற்றில் இருந்து சூட்டை பிரிக்கையில் திரவத்தை வாயுவாக மாற்றுகிறது. பிறகு அது அந்த வாயுவை இன்னொரு காயில் (coil) மூலமாக  திரவமாக்கி வெளியேற்றுகிறது. அந்த இரண்டாவது காயிலின் பெயர் தான் "கன்டென்சர்" (condenser). "கம்ப்ரஸ்ஸர்" (compressor) எனப்படும் ஒரு பம்ப் (pump) மேலே குறிப்பிட்ட இரண்டு காயில் களுக்கும் இடையில் "ரெஃப்ரிஜிரேண்டை" நகர்த்தி செல்லவும், "ரெஃப்ரிஜிரேண்டின்" அழுத்தத்தை மாற்றுவதற்கும் (ஆவியாகுதல் அல்லது திரவமாக்குதல்) உதவுகிறது. இந்த பணிகளை திறம்பட இயக்க மோட்டார் ஒன்று பொருத்தப் பட்டிருக்கும்.

குளிர் சாதனத்தில் "டன்" என்று வகைப்படுத்துவது எதற்க்காக?
குளிர்சாதன பெட்டி  கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், ஒரு இடத்தை குளிர்வூட்ட பெரிய பெரிய ஐஸ் ப்ளாக்ஸை பயன்படுத்தி வந்தனர். குளிர் சாதனம் கண்டுபிடித்த உடனேயே, அதன் திறனை ஒரு நாளைக்கு பயன்படுத்த தேவையான ஐஸ் ப்ளாக்ஸ் இன்  அளவை வைத்து கணக்கிட ஆரம்பித்தனர். இதன் மூலம் தான் ஒரு குளிர்சாதனப் பெட்டியின் அளவை "டன்" (ton) என குறிப்பிடும் முறை  வந்தது.

ஒரு மணி நேரத்தில் குளிர் சாதனம் பொறுத்த பட்டிருக்கும் இடத்தில எவ்வளவு வெப்பத்தை அது  விடுவிக்கிறது என்பது டன் என்பதகும். ஒரு டன் என்பது ஒரு மணி நேரத்திற்கு 12,000 BTU அளவு வெப்பத்தை வெளியேற்றும். BTU என்றால் Birtish Thermal Unit எனப்படும். ஒரு டன் அளவு கொண்ட குளிர்சாதனம் 24 மணி நேர காலத்தில்(24x12000) 288,000 BTU வெப்பத்தை வெளியேற்றும்.   இரண்டு டன் அலகு 24,000 BTU  அளவு வெப்பத்தை ஒரு  மணி நேரத்தில் வெளியேற்றும் என்று  மதிப்பிடப்படுகிறது.