மதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

உங்கள் வருங்காலத்தைப் பாதுகாப்பாக எதிர்கொள்வதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கவனமாக முதலீடு செய்வது அவசியம்.

மதிப்பு முதலீடு மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி ?

பங்குச் சந்தை மூலம் விரைவான பணத்தை சம்பாதிக்கலாம் என்ற வாக்குகளின் மூலம் நிறைய நபர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். பங்குகள் உயருமா  இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமல், உயர் விலையில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஒரு நோக்கத்துடன், பத்திரங்களை குறைந்த விலையில் வாங்குகின்றனர். இது வெறும் ஊகம் மட்டுமே , முதலீடு இல்லை. 

மதிப்புமிக்க முதலீடு என்பது மிக நீண்ட காலத்திற்கு அவற்றை வைத்திருக்கும் நோக்கம் கொண்ட ஆழ்ந்த மற்றும் முழுமையான ஆராய்ச்சிக்குப் பிறகு பத்திரங்களை வாங்குவதாகும். சுவாரஸ்யமாக இருக்கிறதா ? இல்லையா? ஆம். இத்தகைய முதலீட்டில், சந்தையில் பங்குகளின் அதிகரித்துவரும் மதிப்பில் தொடர்ச்சியான டிவிடெண்டுகளும் இலாபங்களும் அடங்கும். தொடர்ந்து படித்து இதன் முக்கியத்துவத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள். 

மதிப்பு முதலீடு மூலம், தரமான பங்குகள் தங்கள் உண்மையான  மதிப்பை  விட விலை குறைவாக வாங்கப்படுகின்றன. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பொருளாதாரம் போன்ற புற சந்தை காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு நிறுவனத்தின் இருப்புநிலை, வருவாய் அறிக்கை, பணப்புழக்க அறிக்கை போன்ற, நிறுவனத்தின் நிதி அறிக்கைகளைக் கொண்டு மதிப்பு முதலீட்டின் உள்ளார்ந்த மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. 

மதிப்பு முதலீட்டின் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் ?

மதிப்பு முதலீட்டு உலகில் உள்ளே நுழைவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சங்களுள் ஒன்று உள்ளது. அது, மலிவான பங்குகளை வாங்கக் கூடாது என்பதை புரிந்து கொள்வது தான். இதற்கு பதிலாக, மதிப்பு முதலீடு என்பது ஒரு தரமான நிறுவனத்தின் பங்குகள் வாங்குவதற்கான செயல்முறையாகும், அதன் விலைகள் சில தவிர்க்க முடியாத காரணிகளால் குறைந்து விட்டாலும், அவை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது (எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நிறுவனம் கண்டிப்பாக சமாளிக்கும்).

மதிப்பு முதலீட்டு கொள்கைகள் பின்வருமாறு:

ஆராய்ச்சி செய்வது :
ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனத்தைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தின் 
குறைந்த மற்றும் நீண்ட கால வருவாய்
நீண்ட கால திட்டங்கள்
வியாபார முன்மாதிரி
நிதி வடிவமைப்பு  போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மதிப்பு முதலீட்டில் தொடர்ச்சியான லாபத்தில் கவனம் செலுத்தப்படுவதால், மேலே கூறிய அம்சங்கள் இருக்கும் நிறுவனத்தில் மட்டும் முதலீடு செய்வது தான் நன்மை தரும். நிதி ரீதியாக வலிமை வாய்ந்த நிறுவனங்கள் மட்டுமே தொடர் லாபத்தை வழங்க முடியும். இவை அனைத்தும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் மட்டுமே வெளிப்படும்.

பல்வகப்படுத்துதல்  :

வெற்றிகரமான முதலீட்டாளர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு வகையான முதலீடுகளை வைத்திருக்கிறார்கள். பணத்தை ஒரே இடத்தில் முதலீடு செய்வதால் முதலீடு நஷ்டம் அடையும் போது நிறுவனம் பெரும் இழப்பை எதிர்கொள்ளலாம். பல இடங்களில் பிரித்து முதலீடு செய்வதால், இத்தகைய இழப்பை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். உங்கள் முதலீட்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முதலீடுகள் இழப்பைத் தொடுவதால் உங்கள் மொத்த பணமும் வீணாகாது. மேலும், உங்கள் மற்ற பங்குகளில் கிடைக்கும்  லாபம் இந்த நஷ்டத்தை ஈடு செய்யும். 

பாதுகாப்பு விளிம்பு

மதிப்பு முதலீட்டிற்கு ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் எப்பொழுதும் பங்குகளை ஒரு பாதுகாப்பு விளிம்புடன் வாங்க வேண்டும். பாதுகாப்பின் விளிம்பு என்பது பங்குகளின் உள்ளார்ந்த மதிப்புக்கும் நீங்கள் செலுத்துகிற விலைக்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். உதாரணமாக, பங்குகளின் உள்ளார்ந்த மதிப்பு ரூ .100 மற்றும் நிர்ணய விலை ரூபாய் 80 ஆகும் என்றால், பாதுகாப்பின் விளிம்பு 20% ஆகும். உயர்ந்த பாதுகாப்பு விளிம்பின் அளவு, குறைவான ஆபத்து மற்றும் அதிக லாபம் தரும். 

பொறுமையாக இருங்கள் :

பங்குகளை நீண்ட காலம் வைத்திருத்தல் மதிப்பு முதலீட்டில் முக்கியம் என்பதால் உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். சந்தை சூழல் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நேரம் மிகவும் நல்ல முறையில் இருக்கும் சந்தை நிலவரம், மறுநேரம் தலைகீழாக மாறலாம். இரண்டு சூழ்நிலையிலும், உங்கள் பங்குகளை நீங்கள் விற்க நினைக்கலாம் . அதிக லாபம் ஈட்டுவதற்கு அல்லது மிகுந்த நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் இப்படி யோசிக்கலாம். மதிப்பு முதலீடு என்பது இறுதியில் உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும் என்பதை மனதில் கொண்டு இந்த உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்தியாக வேண்டும். தினமும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்கள் மூலம் விரிவடைந்து வரும் சந்தை சூழ்நிலையில் உங்கள் பங்குகளை நீண்ட நாள் வைத்திருப்பது நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவு லாபத்தை ஈட்டித் தரும்.

எப்படி தொடங்குவது ?

முதலீட்டாளர்கள் இரண்டு வகைப்படுவர். ஒன்று தற்காப்பு முதலீட்டாளர், மற்றவர் துணிவுள்ள முதலீட்டாளர்.

தற்காப்புள்ள முதலீட்டாளர் என்பவர்,

சந்தையில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க மாட்டார்.

அடிக்கடி முடிந்தவரை ஆபத்தை குறைக்க நினைப்பார்.

தங்கள் போர்ட்ஃபோலியோவை  நிர்வகிக்க  ஒரு செயலற்ற அணுகுமுறை எடுப்பார்.

முதிர்ந்த, நீல சிப் பங்குகள் அல்லது உயர்தரப் பத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமே முதலீடு செய்வர். இவை இரண்டிலும் இயற்கையாகவே  குறைவான அபாயங்கள் உண்டு. 


ஒரு துணிவுள்ள முதலீட்டாளர் என்பவர் , 

எப்போதும் சந்தையில் சுறுசுறுப்புடன் இயங்குவார்.

புதிய நிறுவனங்களில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க விரும்புவார்.

பல்வகைப்பட்ட ஆனால் கனரக பங்குகளை வாங்க முயற்சிப்பார்.

நீங்கள் மதிப்பு முதலீட்டின் தன்மையைப் புரிந்துகொண்டு அதைப் பற்றிக்கொள்ளும் தன்மையைப் புரிந்து கொள்ளும்போது, முதலீடு செய்ய பங்குகள் வாங்கத் தொடங்கலாம். பங்கு தரகரின் மதிப்புமிக்க ஆலோசனை, இழப்புகளை குறைப்பதற்கும், உங்கள் லாபத்தை அதிகரிப்பதற்கும் ஒரு நீண்ட வழி செல்லும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.