கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை வான மண்டலத்தில் ஒருவித நட்சத்திரக் கூட்டமாகும்.

கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை நட்சத்திரம்  இந்திய ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்திய ஜோதிடப்படி இது கால் பாகம் மேஷ ராசியிலும், முக்கால் பாகம் ரிஷப ராசியிலும் இருப்பதாக நம்பப்படுகிறது. 

இந்த நட்சத்திரக் கூட்டம் ஓபன் கிளஸ்டர்ஸ் (Open Clusters) எனும் "திறந்த கூட்டம்"  பகுப்பை சேர்ந்தது. ஆதலால் இவை சமீப காலத்தைச் சார்ந்தவையாக கருதப்படுகிறது. இந்தக் நட்சத்திரக் கூட்டம் நமது பூமியில் இருந்து சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. மேலும் இந்த நட்சத்திரக் கூட்டம் உருவாகி சுமார் 100 மில்லியன் ஆண்டுகள், அதாவது 10 கோடி ஆண்டுகள் இருக்கும். 

இந்த  நட்சத்திரத்தின் மற்ற பெயர்கள்    ,

  • M45
  • Seven Sisters
  • Melotte   

புகைப்பட உபயம்: நாசா