உங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன் அமைவதற்கு சில வாஸ்து குறிப்புகள் 

உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் அமைவதற்கு காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை ஆரோக்கியமாகவும் பூரணமாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உங்கள் காதல் மற்றும் கல்யாண வாழ்க்கை சிறப்புடன் அமைவதற்கு சில வாஸ்து குறிப்புகள் 

உங்கள் அன்பான  உறவுகள் மத்தியில் நேர்மறை எண்ணம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்க பழம்பெரும் அறிவியலான வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடத்தகுந்த வழியில் உதவுகிறது.

இந்தப் பதிவில் உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சில வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நிறம்:

தம்பதிகள் இடையே தெளிவான சிந்தனை இருப்பது சந்தோஷமான மணவாழ்க்கையில் மிகவும் முக்கியம். வீட்டின் வடகிழக்கு பகுதியில் நீலம் அல்லது ஊதா நிறம் இருப்பது, மேலும் அந்த இடம் திறந்த வெளியாக இருந்து வெளிச்சம் அதிகம் இருப்பதால் தம்பதிகள் இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சமையலறை:

சமையலறை அக்கினி மூலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வீட்டின் தென் கிழக்கு மூலையில் சமையலறை அமையவேண்டும். உங்கள் இல்லத்தின் மனையாளைக் குறிக்கும் இந்த பகுதி அவரின் உடல் மற்றும் மனநிலையில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கிறது. இந்த பகுதியில் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்துவதால் இந்த மையத்தின் சக்தி மேம்படுகிறது மற்றும் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை சாத்தியமாகிறது.

படுக்கையறை:

தென் திசையில் அல்லது தென் மேற்கு திசையில் படுக்கையறை அமைக்கப்படவேண்டும். குறிப்பாக வீட்டின் பெரிய படுக்கையறை இந்த இடத்தில் அமைய வேண்டும். இந்த இடத்தைத் தவிர வேறு இடங்களில் படுக்கையறை அமைவதால் உறவுகளில் விரிசல் மற்றும் தம்பதிகள் மத்தியில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கலாம்.

  • தென்மேற்கு திசையில் பெரிய படுக்கையறை அமைவதால் அந்த இல்லத்தின் ஆணுடைய சக்தி மையம் சமநிலை அடைகிறது. இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, தம்பதிகள் இடையில் நல்ல அன்னியோன்யம் வெளிப்படுகிறது.
  • ஆணின் சக்தி மையமாக இந்த பகுதி இருப்பதால், உறவுகளின்  ஸ்தி ரத்தன்மையை மேம்படுவது , முடிவெடுக்கும் திறன் மேம்படுவது, ஆளுமைத் திறன் மேம்படுவது, போன்ற ஆணுக்குரிய குணங்கள் அதிகரிக்கிறது.
  • லேசான மனதை வருடைக்கூடிய நிறங்களை படுக்கையறைக்கு பயன்படுத்துவது நல்லது. பிங்க், பீச் போன்ற நிறங்களை தென்மேற்கு திசை படுக்கையறைக்கு பயன்படுத்தலாம்.
  • இரண்டு படுக்கைகள் அல்லது மெத்தைகளை ஒன்றாக இணைத்து வைப்பது தவிர்க்கப்படவேண்டியதாகும். கட்டிலின் தலைப்பகுதி தென்திசையில் இருக்க வேண்டும். மேலும் இரண்டு கதவுகளுக்கு இடையில் அல்லது  கதவின் முன்புறம் கட்டிலை வைக்கக் கூடாது.
  • வாஸ்துபடி, கணவனின் இடப்பக்கம் மனைவி உறங்குவதால் அமைதியான உறவு இருவர் மத்தியில் நீடிக்கும்.
  • கட்டிலை நோக்கி கண்ணாடி அமைக்கப்படக் கூடாது. இதனால் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் குறைபாடு, ஆற்றல் குறைபாடு,  மயக்கம்  போன்ற நிலைகள் ஏற்படலாம்.
  • பெரிய படுக்கையறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பேணப்பட வேண்டும். குறிப்பாக படுக்கையறையின் வடகிழக்கு மூலை தூய்மையாக இருப்பதால் அந்த அறையில் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.
  • பொதுவாக படுக்கையறையில் ஜோடியாக இருக்கும் சிலைகளை வைத்திருப்பதை நாம் கண்டிருக்கலாம்.  இது காதலின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த வகையில் ஜோடிப்புறா அல்லது லஷ்மி-நாராயணர் சிலையை வைத்திருப்பதால் அதிர்ஷ்டம்  உண்டாகும்
  • தம்பதிகளின் பெரிய படுக்கையறையில் மின்சார உபகரணங்கள் வைத்திருப்பதைத் தவிர்க்கலாம். இவ்வகை உபகரணங்கள் இருவரின் மணவாழ்க்கையை திசைதிருப்பத் தூண்டும். தம்பதிகள் உறங்கும். அறையில் தொலைகாட்சி, கணினி போன்றவற்றை வைத்திருப்பதைத் தவிர்ப்பதால் நல்ல உறக்கம் கிடைக்கும். ஒருவேளை உங்கள் அறையில் அவை இருந்தால்,  உறங்கும் நேரம் அவற்றை ஒரு கவர் கொண்டு மூடி வைப்பது நல்லது.

ஒரு குறிப்பிட்ட உறவை நோக்கி முழுமனதாக ஈடுபடுவது உண்மையான அன்பாகும். இந்த வாஸ்து குறிப்புகளை பயன்படுத்துவதால் தம்பதிகள் மத்தியில் நீண்ட காலம் இந்த அன்பு நிலைத்து இருக்கும்.