தசை (தசா) பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

ஒரு தசையின் அதிபதி ஜாதகத்தில் வலுவாக இருக்கும் போது அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும் தசாபுத்தியின் குறுக்கீட்டையும் முறியடித்து நல்ல பலன்களை தரும்.

தசை (தசா)  பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

தசை (தசா)

ஒருவரின் தசையே அவர்களின்  வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கிறது. ஒன்பது தசையும் ஒன்பது கிரகங்களை குறிக்கும். ஒவ்வொரு தசையும் எத்தனை வருடம் என்று பார்ப்போம்.

தசை எத்தனை வருடங்கள்:

கேது தசை             7 வருடங்கள்

சுக்கிரன் தசை     20 வருடங்கள்

சூரியன் தசை       6 வருடங்கள்

சந்திரன் தசை      10 வருடங்கள்

செவ்வாய் தசை    7 வருடங்கள்

ராகு தசை               18 வருடங்கள்

குரு தசை                16 வருடங்கள்

சனி தசை               19 வருடங்கள்

புதன் தசை             17 வருடங்கள்

மொத்தம்                 120 வருடங்கள்

அனைத்து தசைகளும் முடிய 120 வருஷங்கள் ஆகும்.

ஒருவர் பிறக்கும் போது அவருடைய நட்சத்திர அதிபதியின் தசை தான் முதலில் வரும் அதன் பிறகு அடுத்தடுத்த தசை வரிசையாக வரும். 120 வருடத்தில் 9 தசையும் முடியும் போது திரும்ப முதல்  தசையில் இருந்து  தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.  

பொதுவாக கிரகங்களில் சுப கிரகம் மற்றும் அசுப கிரகம் என்று இரண்டு அணி உள்ளது. 

           

சுப கிரகம்                அசுப கிரகம்

குரு                              சூரியன்  

சந்திரன்                      செவ்வாய்

சுக்ரன்                          ராகு                        

புதன்                            கேது

                                       சனி

                                                               

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு அணி கிரகங்களும் எதிர் தன்மை உடையவை. ஒரே அணியில் உள்ள கிரகங்கள் சேர்ந்தால் நட்பு நிலையில் இருக்கும். அந்த காலகட்டத்தில் நடக்கும் அனைத்தும் நல்லதாகவே  இருக்கும். அதுவே ஒரு அணியில் உள்ள கிரகம் அடுத்த அணியில் உள்ள கிரகங்களுடன் சேர்ந்தால் பகைமை பாராட்டும். அப்போதுபோது அனைத்தும் தீமையில் முடியும்.  உதாரணமாக சந்திரன் சனி, செவ்வாய், சூரியன், ராகு மற்றும் கேதுவுடன் இணைவது நரகம் போன்ற அனுபவங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒரு தசையின் அதிபதி ஜாதகத்தில் வலுவாக இருக்கும் போது அவனுடைய தசையில் எல்லாமே வெற்றியாக இருக்கும்  தசாபுத்தியின் குறுக்கீட்டையும் முறியடித்து நல்ல பலன்களை தரும்.  சுப கிரகங்கள் தசை நடக்கும் போது நல்லதே நடக்கும் என்று கூற முடியாது கெட்டதும் நடக்கும். அதுபோல் அசுப கிரகங்களின் தசை நடக்கும் போது கெட்டதே நடக்கும் என்று கூற முடியாது நல்லதும் நடக்கும். எந்த தசையும் நம் பூர்வ புண்ணியத்தை வைத்தே நல்ல அல்லது தீய பலன்களை அளிக்கும். ஒரு தசை நடக்கும் போது அந்த தசைக்குரிய தெய்வத்தை வழிபட்டு வந்தால் அந்த தசையால் ஏற்படும் மோசமான பாதிப்பு குறையும்.