கர்னாலா - சுற்றுலா தலம்

கர்னாலா இயற்கை எழில் சூழ்ந்த கோட்டை நகரம். கர்னாலாவை சென்றடையும் வழிமுறை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம் .

கர்னாலா - சுற்றுலா தலம்

கர்னாலா மும்பை மற்றும் பூனே நகரங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற  சுற்றுலா தலமாகும். இந்த இயற்கை எழில் சூழ்ந்த கோட்டை நகரம் மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

கர்னாலாவின் இரண்டு முக்கிய சிறப்புக்கள், 
13 வது நூற்றாண்டு கோட்டை. 
பறவைகள் சரணாலயம். இந்த சரணாலயம் பல்வேறு உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு வீடாகும். 
அடர்ந்த காடுகள் மற்றும் மலைப்பிரதேசம் ஆகியவற்றால் இவ்விடம் இயற்கை ரசிகர்களின் சொர்க்கபுரியாக கருதப்படுகிறது. 

பெருநகரத்தில் செயற்கை சூழலின் சுவடு சிறிதும் இல்லாது, அமைதி பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த இயற்கையான சூழ்நிலை ஒரு சிறந்த மாற்றாக இருக்கின்றது.

கர்னாலாவை சென்றடையும் வழிமுறை: 
சாலை வழி:
கர்னாலாவை சென்றடைய ஒரு சிறந்த வழி சாலை வழி.
இந்நகரம் சாலைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் நாட்டிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து கர்னாலாவிற்கு இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் உள்ளன.
ஆண்டின் அனைத்து மாதங்களும் கர்னாலாவிற்கு செல்ல சிறந்த காலங்களாக இருக்கின்றது.

கையேடு வரைபடம்:
மும்பையிலிருந்து கர்னாலா அடைய மூன்று வழிகள் உள்ளன. இதன் தூரம், வழித்தடங்களை பொறுத்து, மொத்தம் 48.3 கிமீ  முதல் 60 கிமீ வரை உள்ளது.

வழி 1 (மும்பை - புனே நெடுஞ்சாலை வழியாக): 
மும்பை - நவி மும்பை - பன்வெல் - பேத் - கர்னாலா. 
மும்பை-புனே நெடுஞ்சாலை வழியாக கர்னாலாவை அடைய ஏறக்குறைய 1.5 மணி நேரம் ஆகும். நவி மும்பை, பன்வெல் போன்ற பிரபலமான நகரங்களிலிருந்து இந்த பாதை அமைந்திருக்கின்றது. பாதை நன்கு பராமரிக்கப் பட்டிருப்பதால் 48.3 கிமீ தூரத்தை விரைவாக கடக்க முடியும்.


வழி 2 (மும்பை - புனே நெடுஞ்சாலை வழியாக): 
மும்பை - நவி மும்பை - சீவூட்ஸ் - பேத் - கர்னாலா.
இந்த வழியின் தூரம் சுமார் 51 கிமீ இந்த தூரத்தை சுமார் 2 மணி நேரத்தில் கடக்க முடியும். 

வழி 3 (மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக): 
மும்பை - முலுண்ட் கிழக்கு - நவி மும்பை - காமோத் - பன்வெல் - கர்னாலா.
60 கிமீ தூரம் கொண்ட இந்த மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை வழியாக செல்ல 2 மணி நேரங்கள் ஆகும்.

பன்வெல் - இடை நிறுத்தம்:
மும்பையில் இருந்து பயணம் செய்ய சிறந்த நேரம் அதிகாலை. அதற்கு இரு முக்கிய காரணிகளாக இருப்பது, நகர சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து. நெடுஞ்சாலையில் சிற்றுண்டிக்கு பலவித கடைகள் உள்ளன. வடா பாவ், மசாலா பாவ், போஹா முதலியவற்றிலிருந்து தொடங்கி, நெடுஞ்சாலை முழுவதும் ஏறக்குறைய பல வகை உணவுகள் கிடைக்கூடியதாக இருக்கின்றது. பன்வெல் மற்றுமொரு கோட்டை நகரமாகும். கொங்கன் கடற்கரையின் நுழைவாயிலாக பன்வெல் அழைக்கப்படுகிறது. மேலும் நவி மும்பையின் மிகவும் நெரிசலான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நகரம் 300 ஆண்டுகள் பழமையானது. முகலாய ஆட்சியில் முதன்முறையாக வணிக வழித்தடங்களை முன்வைத்து உருவாக்கப்பட்டது, பின்னர் இந்நகரம் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டது.

இரண்டு முக்கியமான விநாயகர் கோயில்கள்:
இந்த நகரத்தில்  மஹாராஷ்டிராவின் இரண்டு முக்கியமான விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன. அவை, 

1.பல்லாலேஷ்வர் கோவில்:
விநாயக பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள எட்டு கோயில்களுள் பல்லாலேஷ்வர் கோவிலும் ஒன்றாகும். "பல்லால்" என்ற ஒரு பக்தரின் பெயர் கொண்டு என்று அழைக்கப்படுவது இந்த கோவிலின் ஒரு சிறப்பாகும்.

2. வரதவிநாயக் கோவில்:
1725 ம் ஆண்டு ராம்ஜி மஹாதேவ் பிவால்கர் என்பவரால் கட்டப்பட்ட வரதவிநாயக் கோவிலும், விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட எட்டு கோயில்களில் ஒன்றாகும்.

கர்னாலா - சுற்றுலா தலம்:
மும்பை மற்றும் புனே நகரைச் சுற்றிலும் பச்சை வண்ணம் சூழப்பட்ட இடமாய் கர்னாலா உள்ளது. இந்த நகரம் நம்மை இயற்கை அன்னைக்கு நெருக்கமாக எடுத்துக் செல்கிறது. மாசற்ற புதிய காற்றில் நம்மை தழுவிக்கொள்ளும் சிறந்த இடமாய் இஃது திகழ்கிறது.

இந்த கர்னாலா கோட்டை, ஃபன்னல் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது, இஃது கர்னாலா பறவைகள் சரணாலயத்தையும் உள்ளடக்கியது. கர்னாலா இரண்டு கோட்டைகளை உள்ளடக்கியது. அவற்றில் ஒன்று உயர்ந்த மட்டத்தில் உள்ளது மற்றொன்று தாழ்ந்த மட்டத்தில் உள்ளது.

மற்ற தகவல்கள்:
கோட்டையின் உச்சிக்கு செல்ல மலையேற்றம் செய்பவர்கள் சுமார் 2 மணி நேரங்களில் உச்சியை அடைய முடியும். இறங்குவதற்கு அதற்கும் குறைவான நேரமே ஆகும். இந்த கோட்டை அதிக செங்குத்தாய் இல்லாத காரணத்தால் இங்கு மலை ஏறுவது மிகக் கடினமாக இராது. ஆயினும் மழைக்காலங்களில் பாதை வழுக்கும் என்பதால் சற்று கவனமாக நடக்க வேண்டி இருக்கும்.

அடுத்துள்ள கர்னாலா பறவைகள் சரணாலயம் 4.8 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இந்த சரணாலயம் 150 வகையான உள்ளூர் பறவை இனங்கள் மற்றும் 37 வகையான புலம்பெயர்ந்த பறவை இனங்களுக்கு வீடாக அமைகிறது.

இந்த சரணாலயம் ஈரமான வனப்பகுதியை உள்ளடக்கியது. வனத்துறை, வனப்பகுதிக்குள்ளேயே பல மரங்களை பெயரிட்டு குறிப்பிட்டுள்ளதன் மூலம் பார்வையாளர்களை பயிற்றுவிக்க முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.