6 மாதங்களில் உங்களை நீங்களே மேம்படுத்துவது எப்படி?

வீட்டில் இருந்து பணி  புரியும் இந்த காலகட்டத்தில் ஒரு சிறு பயிற்சி மூலம் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ள இந்த குறிப்புக்கள் உங்களுக்கு உதவும்.  

6 மாதங்களில் உங்களை நீங்களே மேம்படுத்துவது எப்படி?

 1. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றை உங்கள் போனில் இருந்து அகற்றிவிடுங்கள். உங்கள் நேரத்தையும் மனநலத்தையும் உடல்நலத்தையும் வீணடிப்பவை இவை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 2. உங்கள் அலைபேசியில் உள்ள தேவையற்ற ஒவ்வொரு செயலியையும்  அறிவிப்புகளையும் முடக்குங்கள். உங்கள் அலைபேசியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சரிபார்க்கவும்.
 3. தனிமையில்  சிறிது நேரம் செலவிடத் தொடங்குங்கள். நாம் நண்பர்களுடன் நிறைய நேரத்தை வீணடிக்க முனைகிறோம்.
 4. நீங்கள் வாங்கிய, ஆனால் இதுவரை படிப்பதற்கு தொடாத அந்த புத்தகத்தைப் படிக்கத் தொடங்குங்கள்.
 5. தாமதமாக அதே நேரம் நீண்ட கால  மனநிறைவைப் பெறுவதற்கு பயிற்சி செய்யுங்கள். ஜங்க்  உணவு, அரட்டை , தூக்கம் போன்ற உடனடி இன்பங்கள் நீண்ட கால துன்பங்களை உங்களுக்கு தருகின்றன. 
 6. ஒவ்வொரு 2-3 நாட்களுக்கு ஒருமுறை  சில வெளிப்புற விளையாட்டுகளை விளையாடுங்கள். அதை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
 7. “ஓய்வெடுப்பது” மற்றும் “நேரத்தை வீணடிப்பது” ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
 8. மற்றவர்களை மன்னியுங்கள். நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.
 9. உங்கள் முன்னுரிமைகள் குறித்து பிடிவாதமாக இருங்கள், மற்றவற்றை  ‘வேண்டாம்’ என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
 10. குறிக்கோள் இல்லாத, எதிர்மறை நபர்களிடமிருந்து விலகி இருங்கள். அவர்கள் உங்களை கீழே இழுப்பார்கள்.
 11. நீங்கள் எப்போதும் மிகவும் விரும்பிய ஒரு  திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நீச்சல், கிட்டார் வாசிப்பது, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்று அந்த திறன் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 
 12. உங்களை பயமுறுத்தும் விஷயங்களை தினமும் செய்யத் தொடங்குங்கள். நீங்கள் மேடையில் ஏறி பேச  பயப்படுகிறீர்கள் என்றால் , துணிந்து  மேடையில் ஏறி நில்லுங்கள். நீங்கள் கணிதத்திற்கு பயப்படுகிறீர்கள், பல கேள்விகளை தீர்க்க முயற்சியுங்கள்.
 13. இறுதியாக, ஒரு நாளின் கடினமான உழைப்பிற்கு பிறகு மட்டுமே பொழுதுபோக்கைப் பற்றி சிந்தியுங்கள். 

தொடர்ந்து இவற்றை முயற்சித்து வரும்போது உங்கள் உயர்வு உங்கள் கண்முன்னே தெரியும்.