கல்லீரலுக்கு நன்மை தரும் உணவுகள் 

கல்லீரலுக்கு நன்மை தரும் உணவுகள் 

மனித உடலில் கல்லீரலின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் மிகவும் பெரியது இந்த கல்லீரல். இதன் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது மிகவும் அவசியமாகும்.  உடலில் பல தரப்பட்ட செயல்பாடுகளை செய்வது இந்த கல்லீரலாகும். உடலுக்கு புரதம், கொலெஸ்ட்ரோல் போன்றவற்றை உற்பத்தி செய்வது வைட்டமின், மினெரல் , கார்போஹைடிரேட் போன்றவற்றை சேமித்து வைப்பது போன்றவை கல்லீரலின்  வேலையாகும்.

உடலில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு கல்லீரலில் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. உடலில் ஆல்கஹால் போன்ற நச்சுக்களை உடைத்தெறிவதற்கு கல்லீரல் உதவுகிறது. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில உணவு பொருள்களின் குறிப்புகள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. இதனை அறிந்து கொள்ளலாம் வாருங்கள் !

பூண்டு:
பூண்டில் செலினியம் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும்.  இது சிறந்த ஆன்டிஆக்ஸிடெண்டாக இருப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. கல்லீரலுக்கு ஒரு சிறந்த உணவாக பூண்டு பரிந்துரைக்கப்படுகிறது. பூண்டில் இருக்கும் ஆர்ஜினைன் என்ற அமினோ ஆசிட் இரத்த நாளங்களை தளர்த்தி கல்லீரலில் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ஆலிவ் ஆயில் :
ஆலிவ் எண்ணெயை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு பெரிய அளவில் பயன்படுகிறது. கொழுப்பு திசுக்களை வழங்கி உடலில் நச்சுக்களை வெளியேற்றுகிறது . கல்லீரலில் செயல்பாட்டில் இதன் பங்களிப்பு மகத்தானது.

காய்கறிகள் மற்றும் கீரைகள் :
இலைகள் உடைய பச்சை காய்கறிகள் கல்லீரலின்  பாதுகாப்புக்கு முக்கியமானவை.இவை  உலோகம், இரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவை உணவில் சமன் செய்கின்றன . கீரைகள், பீட்ரூட் , காலிப்ளவர் மற்றும் முளை  விட்ட தானியங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகள் ஆகும்.  

க்ரீன் டீ :
கேட்சின் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட்  க்ரீன் டீயில் அதிகமாக உள்ளது . பல விதமான புற்று நோயை எதிர்த்து போராடி உடலை பாதுகாக்கவும் கல்லீரலின்  ஆரோக்கியத்திற்கும்  இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நாரத்தம்பழம் :
இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கல்லீரலால் சுரக்கப்படும் க்ளுட்டத்தின் அதிகமாக உள்ளது. நாரத்தம்பழத்தில் 70மில்லிகிராம் அளவு க்ளுட்டத்தின் உள்ளது.  நச்சுக்களை வெளியேற்ற என்சைம்கள் உருவாக்குவதில் கல்லீரலுக்கு இந்த  க்ளுட்டத்தின் பயன்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இந்த பழம் சிறந்தது.  

அக்ரூட் : 
சிறந்த ஆன்டிஆக்சிடண்டான இந்த அக்ரூட் ஆரோக்கியமான கொழுப்பையும் உருவாக்குகிறது.  கல்லீரலில் தேவையற்ற கொழுப்புகள்  சேராமல் பார்த்து கொள்கின்றது . இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கல்லீரல் செல்களை சுற்றி வலிமையான  செல் சவ்வுகளை உருவாக்குவதில்  முக்கிய பங்காற்றுகின்றன.

ஆப்பிள்:
பெக்டின் என்ற ஸ்டார்ச் வகை , ஆப்பிளில் அதிகமாக உள்ளது. இது உடலை தூய்மையாக்குவதில் முக்கிய பனி செய்கிறது. இதன் மூலம் செரிமான பாதையில்  உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது. கல்லீரலில் சுமை அதிகரிப்பதை இது தடுக்கிறது. 

மஞ்சள்:
குர்குமின் என்ற ஒரு வேதிப்பொருள் மஞ்சளில் இருக்கிறது. இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். வீக்கத்தை குறைக்கும் தன்மையும் இந்த மஞ்சளுக்கு அதிகம் உண்டு. பித்த பையை பாதுகாத்து பித்த நீர் ஓட்டத்தை அதிகரிக்கவும், கல்லீரலை தூய்மை படுத்தவும் இது உதவுகிறது.  கல்லீரலுக்கு நலன் தரும் ஒரு சிறந்த உணவு மஞ்சள்.

நமது தினசரி உணவில் இவற்றை பயன்படுத்தி கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்போம் .