கால பைரவர் மந்திரங்கள்

கால பைரவர் சிவபெருமானின் அறுபத்திநான்கு திருமேனிகளுள் ஒருவராவர். மிகவும் கருணை வாய்ந்த கால பைரவரை வணங்குவது மிகவும் எளிது.

கால பைரவர் மந்திரங்கள்

சிவபெருமானின் அம்சமான கால பைரவர் 

கால பைரவரை வழிபடுவதன் மூலம், நீங்கள் உங்கள் எதிரிகளை வெற்றி கொள்ள முடியும், உங்கள் பயத்தைப் போக்க முடியும். கால பைரவரை வணங்குவதற்கு உகந்த நேரம் ஞாயிறு மாலை ராகு கால நேரம். கோயிலைக் காக்கும் கடவுளாக விளங்குபவர் கால பைரவர். குறிப்பாக சக்தியின் ஆலயங்களில் இவர் காவல் காக்கும் கடவுளாக இருக்கிறார். இறைவனின் ஆசிர்வாதத்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற கீழே குறிப்பிட்டுள்ள சில கால பிரவ மந்திரங்களை ஜெபிக்கலாம். 

கால பைரவ மந்திரங்கள் 
ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய 
குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே 
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் க்ஷம் 
க்ஷேத்திரபாலாய கால பைரவாய ஹ்ரைம்


கால பைரவரின் காயத்திரி மந்திரம்:
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !! 

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத் 

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்
 

கால பைரவ மந்திரங்களை ஜெபிக்க வேண்டிய முறைகள் :
கால பைரவரின் படத்தின் முன் அமர்ந்து கொள்ளுங்கள் அல்லது கால பைரவ யந்திரத்தை உங்கள் முன் வைத்துக் கொண்டு மந்திரங்களை ஜெபிக்கத் தொடங்குங்கள். தேங்காய், குங்குமம், கடுகு எண்ணெய் விளக்கு, புஷ்பம், மற்றும் ஒரு நெய்வேத்திய பிரசாதம் ஆகியவற்றை இறைவன் முன் வைத்து ஞாயிறு மாலை ராகு கால நேரமான 4.30 - 6.00  மணி முழுவதும் தொடர்ந்து கால பைரவ மந்திரங்களை ஜெபித்து வாருங்கள். பக்தி மற்றும் அர்ப்பணிப்புடன் இந்த மந்திரங்களை நீங்கள் ஜெபிப்பதால் உங்கள் விருப்பம் நிறைவேற இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்.

கால பைரவ பூஜையில் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக் கூடாதவை:
நீங்கள் தேர்ந்தெடுத்த கால பைரவ மந்திரங்களை ஞாயிறு மாலை ராகு கால நேரத்தில் ஜெபிக்கத் தொடங்குங்கள். பூஜை செய்து மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்குங்கள். உங்களால் முடிந்த வரை எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த மந்திரங்களை ஜெபிக்கலாம். ருத்ராக்ஷ மாலையில் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  1,25,000 மந்திரங்களின் சுழற்சியை நீங்கள் முடிக்கும் வரை மந்திரத்தை தொடரவும். மந்திரம் முடியும் இறுதி நாளில் கால பைரவருக்கு விமரிசையான பூஜை செய்து உங்கள் ஜெபத்தை வெளிப்படுத்துங்கள். இந்த மந்திரங்களை ஒருபோதும் தீமையான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். இப்படி செய்வதால் இந்த தீமையான பலன் உங்களுக்கு திருப்பப்படும்.

கால பைரவ மந்திரத்தை ஜெபிக்கும் நேரம் இந்த விதியை பின்பற்றுங்கள் :
1. உங்கள் உடல் மற்றும் மனத்தை கண்டிப்பாக சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
2. பொய்மைக்கு உங்கள் மனதில் இடம் தர வேண்டாம்.
3. பிரம்மச்சரியத்தைக் பின்பற்றுங்கள் 
4. மந்திரம் ஜெபிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு அருந்துங்கள்.
5. இந்த நாட்களில் வெளியில் உணவு உட்கொள்வதை தவிர்த்திடுங்கள், மேலும் அசைவ உணவை முற்றிலும் ஒதுக்கி விடுங்கள்.
6. சில நல்ல காரியங்களைச் செய்து, பணம், உடை, உணவு ஆகியவற்றைத் தேவைப்படும் மக்களுக்குக் கொடுங்கள்.
7. சிவன் மற்றும் பைரவர் கோவில்களுக்கு சென்று வருதல் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் மற்றும் போர்வைகளை வழங்குதல் நல்ல பலனைத் தரும்.

கால பைரவரை மகிழ்விக்க சில எளிய வழிமுறைகள் :
இந்த மந்திரங்களை ஜெபிப்பதுடன் சேர்த்து இந்த வழிகளை பின்பற்றுவதால் , கால பைரவர் மகிழ்வார்.

1. தேவைபடுபவருக்கு எள்ளு மற்றும் கடுகு தானம் செய்யலாம்.
2. ஞாயிறு மாலை ராகு கால வேளையில் கால பைரவர் சந்நிதியில் கடுகு தீபம் ஏற்றி அவரை வழிபடலாம்.
3. கருப்பு நாய்களுக்கு உணவளித்து, அதனை பராமரிக்கலாம்.
4. ஞாயிறு மற்றும் உங்கள் பிறந்த நாளில் தேவைப்படும் மக்களுக்கு உடை மற்றும் உணவை தானமாக வழங்கலாம்.
5. செவ்வாய் கிழமைகளில் வீட்டு வாசலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.