தெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் ?

தேங்காயை சமஸ்க்ருதத்தில் ஸ்ரீ பலா  என்று கூறுவர். அதாவது கடவுளின் பழம் அல்லது கடவுளின் சின்னம் என்பது இதன் பொருள்.

தெய்வங்களுக்கு தேங்காயை ஏன் படைக்கிறார்கள் ?

நரபலிக்கு மாற்றாக தேங்காய்:

இதனை நினைத்துப் பார்ப்பதற்கும் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆம், வெளியே கடினமான ஓடு, உள்ளே மேம்னையான சதை மற்றும் சுவையான நீர் கொண்ட தேங்காய் , ஒரு அற்புத பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதனை அமிர்தத்துக்கு மாற்றாக மக்கள் போற்றுகின்றனர். ஒவ்வொரு பூஜை தட்டிலும் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதற்கு , புஷ்பம், இனிப்பு, ஊதுபத்தி,, புனித ஆடை ஆகியவற்றுடன் சேர்த்து கொடுக்கப்படும் ஒரு பொருள் தேங்காய். கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் தட்டில் தேங்காயை சேர்த்து வைப்பது மனிதர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு என்பது ஒரு உண்மை.


ஆம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், நாபலி என்ற விஷயம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நரபலி இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய துயரத்தில் இருந்து மனித சமூதாயத்தை மீட்பதற்காக மனித தலைக்கு மாற்றாக தேங்காய் அர்ப்பணிக்கப்பட்டது. தேங்காய்க்கு  ஒரு தனித்துவமான அடையாள பிரதிநிதித்துவமும் உள்ளது என்பதால் , இது கடவுளுக்கு வழங்கப்படும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கடவுள் பிரசாதம் :

 இந்துக்களின் எல்லா பூஜை வழிபாடுகளிலும் தேங்காய் முக்கியத்துவம் பெற்றது. இறைவனுக்கு பிரசாதமாக செய்யப்படும் எல்லா இனிப்புகளிலும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களிலும் தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. 

நரபலிக்கு மாற்றாக தேங்காய் எப்போதிருந்து மாற்றப்பட்டது?
புராண கதைகளின்படி, ஆன்மீக குறு ஆதி சங்கரர், கடவுளை கவருவதற்காக நரபலி கொடுக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை என்று கூறி, மனித உயிர்களை நரபலியில் இருந்து காப்பாற்றினார். நரபலி பற்றிய ஆன்மீக முக்கியத்துவம் அல்லது மத குறிப்புகள் ஏதும் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். நரபலியை அவர் கண்டனம் செய்தார். இத்தகைய நரபலிக்கு மாற்றாக தேங்காயை கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். ஆன்மீக குருவின் போதனைக்கு பின், நரபலியை நிறுத்திய மக்கள் இந்த சடங்கிற்கு பின்னல் இருந்த யுக்தியை மட்டும் தொடர விரும்பினர். ஆகவே தேங்காய் உடைப்பதை பின்பற்றத் தொடங்கினர்.

தேங்காய் மற்றும் மனிதனின் தலைக்கனம்:
தேங்காய் என்பது தலைக்கனத்தின் அறிகுறியாகும். அதாவது தனிபர் தலைக்கனத்தை உணர்த்தும் ஒரு குறியீடாக தேங்காய் கருதப்படுகிறது. ஒரு தனி மனிதனின் தலைக்கனம் அதிகரிக்கும்போது , எவர் முன்னிலையிலும் தலை குனிய மாட்டார். மேலும், கடவுளைத் தொழுவது என்பது இந்த தலைக்கனத்தை உடைத்தெறிந்து இறைவனே எல்லோருக்கும் பெரியவன் என்ற எண்ணத்தை மனதில் கொள்வதாகும். ஆகவே, தேங்காயை கடவுள் முன்னிலையில் உடைப்பது ஒருவரின் தலைக்கனத்தை உடைப்பதற்கு சமமாகும். கடவுளுக்கு தேங்காய் உடைப்பதால், இறைவன் முன் தன்னை ஒப்படைத்து தலைக்கனத்தை விடுவதன் அறிகுறியாக அறியப்படுகிறது.

மனிதனின் தலை தேங்காய் ஓடாகவும், அவன் மனதில் உள்ள விருப்பங்கள் மற்றும் எண்ணங்கள் தேங்காயில் உள்ள நீராகவும் கருதப்படுகிறது. தலைக்கனம் மற்றும் மனதின் விருப்பங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, கடவுளிடம் தன்னை ஒப்படைப்பதை இது விளக்குகிறது.

சுயநலமில்லாத தேங்காய்:
கல்பவிருக்ஷம் என்று அறியப்படும் தேங்காய், ஒரு சுயநலமில்லாத மரமாக அறியப்படுகிறது. தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும், அதன் இலைகள், பழங்கள், பட்டைகள் என்று அனைத்தும் மனிதரால் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் மரத்தின் இலைகள் ஓலை கூரைகளை உருவாக்கப் பயன்படுகின்றன, தேங்காயின் சதைப்பகுதி ஆரோக்கியமான உணவாகும், தேங்காய் பழத்திலிருந்து தண்ணீர் பல தாகம் கொண்ட ஆத்மாக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. இது இயற்கையிலேயே மிகவும் இனிப்பு சுவை கொண்டதாகும்.. இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், சமையலுக்கு பயன்படுகிறது. காயத்தை குணமாக்க உதவும் மருந்தாகவும் பயன்படுகிறது. தென்னை மரத்தின் பட்டை மற்றும் நார்களும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

சிவபெருமானின் மூன்று கண்கள்:
தென்னை மரத்தின் சுயநலமில்லாத அர்ப்பணிப்பு தன்மை மற்றும் பயன்பாட்டால், கடவுளுக்கு நம்மை அர்பணிக்கும் சுயநலமில்லாத தன்மையை குறிக்கும் ஒரு குறியீடாக தேங்காய் அறியப்படுகிறது. இந்த மரத்தை ஒரு முறை மண்ணில் நட்டவுடன் அது தானாக வளர்கிறது. மனித உதவி அதற்கு பெருமளவில் தேவைப்படுவதில்லை. தேங்காயில் மூன்று குறிகள் உள்ளது. இவை மூன்றும் சிவபெருமானின் மூன்று கண்களாக பாவிக்கப்படுகின்றன.  தேங்காயை புனிதமாகவும் முக்கயத்துவம் நிறைந்த ஒரு பொருளாகவும் கருதுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.