சிவப்பு பூச்சிக்கடியை எவ்வாறு குணப்படுத்துவது 

சிகர் என்று அழைக்கப்படும் ஒரு வகை சிவப்பு பூச்சின் இனம் தோல் துளைக்கும் ஈ வகையைச் சார்ந்தது.

சிவப்பு பூச்சிக்கடியை எவ்வாறு குணப்படுத்துவது 

ஆர்ச்னிட் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வகை பூச்சிகள் பெர்ரி பூச்சிகள், ஹார்வெஸ்ட் பூச்சிகள் அல்லது சிவப்பு பூச்சிகள் என்றும் அழைக்கபப்டுகின்றன. இந்த வகை பூச்சிகள் பெரும்பாலும் வெளிபுறங்களில் குறிப்பாக புல்வெளிகளில் காடுகளில் மற்றும் ஓரளவிற்கு ஈரப்பதம் நிறைந்த பகுதிகளான ஏரிகள், ஓடைகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இந்த பூச்சிகளுக்கு இருக்கும் சிறிய கூர்மையான நகங்கள் மனிதர்களையும் விலங்குகளையும் அழுத்தமாகப் பிடித்துக் கொள்கின்றன. 

இந்த சிறிய பூச்சியை உருப்பெருக்கி லென்ஸ் மூலம் மட்டுமே காணமுடியும். அதனால் சாதாரண கண்கள் மூலம் இவற்றைக் கண்டு இவை கடிக்காமல் தடுப்பது இயலாத காரியம். இந்த பூச்சி எப்போது கடிக்கும் என்பது கூட உங்களுக்குத் தெரியாது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் இந்த பூச்சி கடித்ததற்கான அறிகுறிகள் தோன்றும். பூச்சி கடித்த இடத்தில் அரிப்பு, வீக்கம், தடிப்பு, சிவந்து போவது போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றும்.

இந்த சிவப்பு பூச்சிக் கடிப்பதால் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை. ஆனால் இந்த வகை பூச்சி கடிப்பதால் ஒருவித அச்வௌகரியம் உண்டாகும். தூக்கத்தில் தொந்தரவுகள் ஏற்படும். பொதுவாக இந்த வகை பூச்சிகள் இடுப்பு, மணிக்கட்டு, அல்லது சரும மடிப்புகளில் கடிக்கும். இந்த பூச்சிக்கடி குணமாவதற்கு ஒன்று முதல் மூன்று வாரங்கள் ஆகும். இந்த காலகட்டத்தில் உண்டாகும் அரிப்பு, வலி, வீக்கம் போன்றவற்றைக் குறைப்பதற்கு சில எளிய தீர்வுகளை முயற்சிக்கலாம். 

குறிப்பு:
பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் தொற்று பாதிப்பு உண்டாகலாம். ஒருவேளை தொற்று பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்கலாம்.

 1. வெந்நீர் குளியல் :
சிவப்பு பூச்சி உங்களைக் கடித்தவுடன் முதல் வேலையாக நீங்கள் செய்ய வேண்டியது வெந்நீர் குளியல். இதனால் இந்த பூச்சிகள் உங்கள் உடலில் எங்காவது ஒட்டி இருந்தால் அவை கீழே விழுந்து விடும். இதனால் சருமம் மேலும் எந்த பாதிப்பையும் ஏற்க முடியாத நிலை உண்டாகும்.

1. ஒரு கிருமிநாசினி சோப் பயன்படுத்தி உடல் முழுவதும் நன்றாகத் தேய்க்கவும். பிறகு நன்றாகக் குளிக்கவும்.
2. குளித்து முடித்தபின் ஒரு மென்மையான டவல் கொண்டு உடலை சுத்தமாகத் துடைக்கவும். உடலை அழுத்தமாகத் தேய்க்க வேண்டாம். இதனால் உடலில் தடிப்புகள் அதிகமாகி, வலி அதிகரிக்கும். 
3. சிறு அளவு ஆலிவ் எண்ணெய் அல்லது மென்மையான மாயச்ச்சரைசர் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
மிகவும் சூடாக இருக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டாம். மேலும்,  நீங்கள் அணிந்திருந்த ஆடைகளையும் குளிக்கும்போது வெந்நீரிலேயே துவைத்துக் கொள்ளுங்கள்.

 2. விக்ஸ் வெபர் ரப் ;
குளித்து முடித்த பின் நீங்கள் செய்ய வேண்டியது ஒரு விக்ஸ் மருந்தை எடுப்பது. உங்கள் வீட்டு மருந்து டப்பாவில் இருக்கும் ஒரு பொதுவான மருந்து, பூச்சிக்கடியின் அரிப்பு மற்றும் எரிச்சலை உடனடியாகப் போக்குகிறது. இந்த விக்சில் உள்ள குளிர்ச்சியான மென்தால் , சருமத்தில் உள்ள அரிப்பைப் போக்கி சருமத்திற்கு  நிவாரணம் கொடுக்கிறது. ஒருவேளை பூச்சிக்கடியால் கொப்பளம் உண்டானால், அதனைப் போக்கவும் விக்ஸ் பயன்படுகிறது.

1. விக்ஸ் வெபர் ரப் சிறிதளவு எடுத்து அதில் சிறு துளி தூள் உப்பு சேர்க்கவும்.
2. இரண்டையும் ஒன்றாகக் கலந்து பாதிக்கபட்ட இடத்தில் தடவவும்.
3. அழற்சி அல்லது வீக்கம் இருந்தால், தொடர்ந்து சிலமுறை இதனைத் தடவலாம் அல்லது ஒரு முறை மட்டுமே தடவலாம்.

 3. குளிர் ஒத்தடம்:
பூச்சிக்கடியால் உண்டாகும் அரிப்பைப் போக்க குளிர் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர் ஒத்தடம் கொடுப்பதால் உண்டாகும் இதமான தன்மை, அரிப்பைக் குறைக்க உதவும்.

1. ஒரு மெல்லிய துணியில் சில ஐஸ் கட்டிகளைப் போட்டு கட்டிக் கொள்ளவும். 
2. இந்த ஐஸ் கட்டிகளை பூச்சிக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்கவும். 
3. ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் அதே முறையைப் பின்பற்றவும்.
4. பாதிக்கப்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுவதால் கூட அரிப்பு குறையலாம். தேவைப்பட்டால் மீண்டும் இதனைத் தொடர்ந்து செய்து வரலாம்.

4. பேக்கிங் சோடா:
தடிப்புகள் மற்றும் அரிப்பைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வாகக் கருதப்படுவது பேக்கிங் சோடா. அமிலத்தை சமநிலைப்படுத்தும் தன்மை பேக்கிங் சோடாவில் இயற்கையாக இருப்பதால், அரிப்பைப் போக்க உதவுகிறது. தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் பேக்கிங் சோடா உதவுகிறது.

1. குளிர்ந்த நீரால் நிரப்பப்பட்ட பாத் டப்பில் ஒரு கப் பேக்கிங் சோடா சேர்க்கவும். 
2. நன்றாகக் கலந்து அந்த நீரில் 15 நிமிடம் குளிக்கவும்.
3. பிறகு மென்மையான டவல் கொண்டு உடலைத் துடைக்கவும்.

மற்றொரு வழி:
1. இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும். 
2. இந்த பேஸ்டை பாதிக்கபட்ட இடத்தில் தடவவும்.
3. பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும்.
4. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இப்படி செய்யலாம்.

குறிப்பு:
திறந்த காயம் அல்லது வெட்டுப்பட்ட சதைப் பகுதியில் பேக்கிங் சோடாவை பயன்படுத்த வேண்டாம்.

 5. ஓட்ஸ்:
ஒட்ஸ் எரிச்சல் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் இதமளிக்கும் பண்புகள் கொண்ட ஒரு மூலப்பொருள். இதனால் பூச்சிகடியின் பொதுவான அறிகுறியான அரிப்பில் இருந்து உடனடி நிவாரணம் பெற இதனைப் பயன்படுத்தலாம்.
கொரகொரப்பான அதாவது, அரைத்து தூளாக இருக்கும் ஓட்ஸ் பயன்படுத்துவது நல்லது.

1. கொரகொரப்பான ஓட்ஸ் எடுத்து வெதுவெதுப்பான நீர் நிரப்பிய பாத் டப்பில் சேர்க்கவும்.
2. இந்த ஓட்ஸ் துகள்கள் தண்ணீரில் நன்றாகக் கரையும் வரைக் காத்திருக்கவும்.
3. இந்த ஓட்ஸ் கலந்து நீரில் 15-20 நிமிடங்கள் நன்றாகக் குளிக்கவும்.
4. ஒரு நாளில்  இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்யலாம்.
5. பூச்சிகடியின் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் 

 6. ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆப்பிள் சிடர் வினிகர் கிருமிநாசி பண்புகள் மற்றும் அரிப்பு எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டது. இதனால் அரிப்பு , அழற்சி மற்றும் வீக்கம் ஆகியவை குறைகிறது.

1. வடிகட்டாத பச்சை ஆப்பிள் சிடர் வினிகர் 2 கப் எடுத்துக் கொள்ளவும். 
2. இதனை உங்கள் பாத் டப்பில் உள்ள வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். 
3. இந்த நீரில் 15 நிமிடங்கள் குளிக்கவும். 
4. குளித்து முடித்து வந்தபின், உடலில் சிறிதளவு மாயச்ச்சரைசர் தடவுவதால் வறட்சி தடுக்கப்படும்.
5. ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.

மற்றொரு வழி,
1. ஒரு பஞ்சில், அப்பில் சிடர் வினிகரை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம் . 
2. அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் அந்த இடத்தைக் கழுவி கொள்ளலாம்.
3. தொடர்ந்து சில நாட்கள் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.

 7. கற்றாழை:
கற்றாழையில் அருமையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உண்டு. இதனால் வீக்கம், அழற்சி மற்றும் வலி போன்றவை குறைக்கப்படுகின்றன. கற்றாழையில் வைட்டமின் ஈ சத்து இருப்பதால் சருமம் ஈரப்பதத்தோடு இருக்க உதவுகிறது , இதனால் அரிப்பு குறைகிறது.

1. கற்றாழை இலையில் இருந்து பசையை எடுத்து பாதிக்கபட்ட இடத்தில் தடவலாம். 
2. 15 நிமிடங்கள் அப்படியே விடவும். 
3. பிறகு வெதுவெதுப்பான நீரால் அந்த இடத்தைக் கழுவவும். 
4. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றவும்.

மற்றொரு வழி:
1. புதிதாக எடுக்கப்பட்ட கற்றாழைப் பசையில் , சில துளிகள் பெப்பர்மின்ட் எண்ணெய், மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றைச் சேர்க்கவும். 
2. இந்த கலவையை பாதிக்கபட்ட இடத்தில் தடவலாம். 
3. 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
4. பிறகு வெதுவெதுப்பான நீரில் அந்த இடத்தைக் கழுவவும்.
5. ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றலாம்.