கோவக்காயின் நன்மைகள் 

கோவக்காய் , இந்த காயை பற்றி தெரியாதவர்களுக்கான  ஒரு தொகுப்பு தான் இந்த பதிவு

கோவக்காயின் நன்மைகள் 

எனக்கு தெரிந்த வரையில் பாகற்காயை கூட சிலருக்கு பிடிக்கும் , கோவைக்காயை நிறைய பேருக்கு பிடிக்காது. அதன் சுவையா அல்லது அந்த காயை கொண்டு நாம் அதிக அளவில் எந்த ஒரு சுவையான ரெசிபியும் செய்வதில்லையா என்று தெரியவில்லை. சில உணவுகளை நாம் நம்  உடல் நலத்திற்காக சாப்பிட்டாக  வேண்டும். அந்த வகை காய்களில் கோவைக்காயும் ஒன்று.

பலவிதமான ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள்  உள்ள ஒரு காய் இந்த கோவக்காய். 100கிராம் கோவக்காயில் 1.4மி கி அளவு இரும்பு சத்து , 0.08 மி கி வைட்டமின் பி2(ரிபோப்லாவின் ) 0.07 மி கி வைட்டமின் பி1 (தீயமின்) ,1.6 கிராம் நார்ச்சத்து மற்றும் 40மி கி கால்சியம் உள்ளது.

1. இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் :
இந்தியாவிலும் இலங்கையிலும் பழங்காலத்தில் இருந்தே கோவைக்காயை நீரிழிவு நோய்க்கு மருந்தாக  பயன்படுத்தி வந்தனர். கோவக்காய் தண்டுகள்  மேல் பகுதி மற்றும் அதன் இலைகளை சமையலில் சேர்த்து வந்தனர்.காய்களை சாலடுகளில் சேர்த்தோ அல்லது கறியாக  சமைத்தோ உண்டு வந்தனர். கிளீனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் , கோவக்காய் இலைகளை பச்சையாக உண்ணும் போது அது சாப்பாட்டிற்கு பின்னான க்ளுகோஸ் சகிப்புத்தன்மையை அதிகரித்து  இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டுபிடிக்கபட்டுள்ளது.

2. உடல் பருமனை குறைக்கிறது:
கோவக்காயின் வேர்கள் உடல்பருமனை தடுக்கும் தன்மை கொண்டது என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. கோவக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனைகளை களைய இந்த காய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

3. சோர்வை போக்குகிறது :
இரும்பு சத்து குறையும் போது மனிதர்களால் இயல்பான புத்துணர்ச்சியுடன் இருக்க முடியாது. ஆகையால் எப்போதும் உடல் மெலிந்து சோர்வுடன் காணப்படுவர். இரும்பு சத்து தாவர உணவுகளிலும் விலங்கு உணவிலும் கிடைக்க பெறுவதாகும். ஆண் பெண் இருபாலருக்கும் சோர்வு ஏற்படாமல் இருக்க உடலுக்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். கோவக்காயில்  1.4 மி கி  இரும்பு சத்து உள்ளது. இது தினசரி உட்கொள்ளல் அளவில்  17.50% ஆகும். ஆகையால் கோவைக்காயை   உங்கள் தினசரி உணவில் சேர்க்கும் போது உங்கள் உடலையும் மனதையும்  பிட்டாகவும்  , ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது.   

4. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது:
வைட்டமின் பி2  தண்ணீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்தாகும். உடலுக்கு தேவையான ஆற்றலின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதால் இது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். இந்த சத்துகள் அதிகமாக உள்ள கோவைக்காய் நரம்பு மண்டலத்தை பலமாக்குகிறது. அல்சைமர் நோய், கால்-கை வலிப்பு, உணர்வின்மை,  பதட்டம் மற்றும்  பல நரம்பு தொடர்பான பிரச்சினைகள் கையாள்வதில் கோவக்காய் பெரும் பங்கு வகிக்கிறது. கோவக்காயில்  உள்ள  வைட்டமின் பி6 மூலம்  கார்பல் டன்னல்  நோய்த்தாக்குதலின் அறிகுறிகளைக் கையாள முடிகிறது என்று நம்பப்படுகிறது.

5. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கிறது:
கோவக்காயில் உள்ள தீயமின் , கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றுவதற்கு உதவுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்ற ஆதாரமாக உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை எளிதில் இயங்க வைக்க உதவுகிறது. இது புரதங்கள் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவுகிறது. கோவக்காயில் 0.07மி கி  அளவு தீயமின் உள்ளது. இது தினசரி உட்கொள்ளல் அளவில் 15.83% ஆகும். சிவப்பு அணுக்களின் உற்பத்தியில் தீயமின் பங்கு அதிகமாக உள்ளது. உடலுக்கு சீரான ஆற்றல் கிடைக்க இவை உதவுகின்றன. 

6. செரிமான புலன்களை ஆரோக்கியமாக்குகிறது:
நார்ச்சத்தின் முக்கியமான பணி செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைப்பதே. நார்ச்சத்தின் முக்கிய பங்கு மலத்தின் அளவை  அதிகரித்து அதனை மென்மையாக்குவது. கோவைக்காயை அதிகமாக உட்கொள்ளும்போது மலம் அதிகமாக வெளியேறும். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளும்போது இரைப்பை கோளாறுகள், அல்சர், மலச்சிக்கல் ,மூல நோய், இரைப்பை உணவு குழாயில்  ஏற்படும் நோய் போன்றவை தடுக்கப்படுகின்றன. 

7. சிறுநீரக கற்களை தடுக்கிறது:
சிறுநீரகத்தில்  கால்சியம் மற்றும் மற்றவகை தாதுக்கள் படிகமாக  உருவாவது தான் சிறுநீரக கற்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதிக அளவு கால்சியம் உட்கொள்ளல் அல்லது உறிஞ்சுதல் சிறுநீரக கற்களுக்கு  காரணம் என்று முந்தய நாட்களில் மக்கள் எண்ணியிருந்தனர். ஆனால் இன்றைய அறிவியல் ஆய்வுகளில் அதிக கால்சியம் கொண்ட உணவினால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதில்லை எனவும், தண்ணீரில் கால்சியம் அளவு அதிகரிக்கும் போது தான் கற்கள் தோன்றுகிறது என்றும், கூறுகின்றனர். மற்றும் உணவில் கால்சியம் அதிகரிக்கும்போது  அது சீறுநீரக கற்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்  . ஆகையால்  கோவக்காய் அதிகம் உட்கொண்டால் சீறுநீரக கற்கள் வருவதை தடுக்க முடியும். 

இத்தனை நல்ல பலன்கள் கொண்ட கோவைக்காயை இனி தினமும் நமது உணவில் சேர்த்து பயன் பெறுவோம்!