ஆரோக்கியமான பயணத்திற்கு தயாராகுங்கள்

இந்த குறிப்புகளை பயன்படுத்தி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான பயணத்திற்கு தயாராகுங்கள்

விடுமுறை நாட்கள் என்றாலே சந்தோஷமான நாட்கள் தான். அலுவலகம் பள்ளி ஆகியவற்றை மறந்து சில நாட்கள் நமது கிராமங்களுக்கோ அல்லது வேறு மாநாகரங்களுக்கோ அல்லது அயல்நாடுகளுக்கோ பயணிக்க விரும்புகிறவர்களுக்கான  பதிவு இது. ஈரப்பதம், வெப்ப நிலை, போன்றவை மாறுபடும், மலை பிரதேசங்கள் போகும்போது உடலின் ஊட்டச்சத்து மற்றும் நீர்சத்தின் தேவையில் மாற்றம் ஏற்படும். அதேபோல் சருமத்திலும் மாற்றம் ஏற்படும். அதற்கு ஏற்ற வகையில் சருமத்தை பராமரிக்க சில குறிப்புகள் உள்ளன. 

பயணத்திற்கு முன்:
பயணத்திற்கு உங்கள் சருமத்தை தயார் செய்யுங்கள். சருமத்திற்கு நீர்ச்சத்தை கொடுங்கள். பயணத்தின்போது ஏற்படும் களைப்பால் சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும். பயணத்தில் பகிரப்படும் மாசு தூசு போன்றவற்றால் ஏற்படும் சரும சேதத்தை தவிர்க்கலாம்.

வெள்ளரிக்காய் மாஸ்க்:
வெள்ளரிக்காயில் உள்ள அதிகமான நீர் சருமத்தை  நீர்ச்சத்தோடு வைக்க உதவும். இதன் மென்மை, சருமத்தை புத்துணர்ச்சியோடு இருக்க உதவும்.
வெள்ளரிக்காயை துருவி வைத்து கொள்ளவும். ½ கப் யோகர்டுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து , இந்த வெள்ளரிக்காய் துருவலை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி காய வைக்கவும். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

பயணத்தின்போது சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்க சில குறிப்புகள்:

நீர்சத்து:
பிரயாணத்தின்போது அதிகமான தண்ணீர் பருகுங்கள். மினெரல் பவுடர் சேர்க்கப்பட்ட தண்ணீர் நல்லது. இதன்மூலம் ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கும். கையில் எப்போது ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தண்ணீர் பாட்டில் வைத்து கொள்ளுங்கள். இப்போது இரயில் நிலையம், ஏர்போர்ட் போன்ற இடங்களில் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. இதனை பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை விட ஸ்டீல் பாட்டிலில் குடிப்பது நல்லது.

மேக்கப் வேண்டாம்:
சில மணி நேரங்களுக்கு அதிகமாக பிரயாணம் செய்யும்போது மேக் அப்பை தவிர்க்கலாம். மேக் அப் போடுவதால் சரும துளைகள் அடைக்கப்பட்டு ஈரப்பதம் குறைகிறது. மற்றும் பிரயாணத்தில் வறண்ட காற்றையும், எரிபொருட்களையும் சுவாசிக்க நேரும் என்பதால் மேக்கப் இல்லாத சருமம் சிறந்தது.

எண்ணெய்:
சந்தனம், யூக்கலிப்டஸ், செவ்வந்திப்பூ , லாவெண்டர் , நேரொளி போன்ற வகை எண்ணெய்யை பயன்படுத்தும்போது உடலுக்கு நன்மையை தரும். தொடர்ந்து பல மணி நேரம் பயணிக்கும்போது நமது நாசியில் நல்ல காற்று புகுவது நல்ல பலனை ஏற்படுத்தும். ஆகவே இதனை உங்கள் மாய்ஸ்ச்சரைசேரருடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது சில துளிகளை கையில் எடுத்து உடலில், கழுத்து பகுதியில் தடவி கொள்ளலாம்.

நன்றாக உறங்குங்கள்:
உறங்கும்போது தான் உடல் ரிப்பேர் செய்யப்பட்டு புத்துணர்ச்சி  அடையும். முக்கியமான ஹார்மோன்கள் உடல் உறங்கும்போது தான்  வளர்ச்சி அடையும்  . எந்த இடத்தில் இருந்தாலும் 8 மணி நேர உறக்கத்தை கைவிட வேண்டாம். நேர மாற்றம் அல்லது வெப்பநிலை மாற்றத்தால் உறக்கத்தில் குறைபாடு இருக்கும்போது 1-3 மிகி மெலடோனின் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். மெலடோனின் என்ற ஹார்மோன் கட்டுப்பாடான நாள் சுழற்சியை நிர்வகிக்கும். ஆகவே உறக்கத்தின் அளவு குறையும் போது  இதன் உற்பத்தி குறையும். மெலடோனின் மாத்திரைகளை எடுக்கும்போது கவனமாக குறைந்த அளவே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுக்கும்போது இயற்கையான மெலடோனின் உற்பத்தி குறைய நேரிடும்.

ஆரோக்கிய உணவு:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, பால் பொருட்கள் நிறைந்த உணவை தவிர்த்து, அவகேடோ, சால்மன், தேங்காய் எண்ணெய், க்ரீ டீ  போன்றவை சேர்க்கப்பட்ட ஆரோக்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம்.

சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்:
வெளியில் அதிக நேரத்தை கழிக்க வேண்டி இருப்பதால் சரும பாதுகாப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்லது. செயற்கையான சரும பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தாமல் சுத்தமான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. 

தூய்மையோடு, நீர்ச்சத்தோடு, பாதுகாப்போடு, ஊட்டச்சத்தோடு ஓவ்வொரு நாளும் காலையும் இரவும் சருமத்தை பராமரியுங்கள். வெளியில் செல்லும்போது சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.