வாழ்க்கையையும் வேலையையும் சம நிலையில் வைக்க உடனே செய்ய வேண்டிய 5

வாழ்க்கையையும் வேலையையும் சம நிலையில் வைத்து பார்ப்பது  பலருக்கும் கடினமான ஓர் காரியம். ஒருவர் எவ்வளவு தான் முயற்சித்தாலும், செய்ய வேண்டிய வேலை மிக அதிகமாக இருக்கும். வேலையை தாண்டிய வாழ்க்கை என்பது குறைவாகவே இருக்கும்.

வாழ்க்கையையும் வேலையையும் சம நிலையில் வைக்க உடனே செய்ய வேண்டிய 5

விஷயங்கள் :
இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் வேலையை விட்டு துரத்தலாம் என்ற நிலை உள்ளதால், விடுப்பு எடுப்பதை பற்றிய சிந்தனை கூட இருப்பதில்லை. இப்படி இருக்கும் போது வேலையையும் வாழ்க்கையையும் எப்படி சம நிலையில் வைப்பது ? இதனை பற்றி சற்று சுருக்கமாக காண்போம்.

வேலைக்கு ஒரு எல்லையை வைத்து கொள்ளுங்கள் :
உங்கள் வேலை நேரத்தை பற்றி உங்கள் மேலாளருக்கு தெளிவாக குறிப்பிடுங்கள் . வேலை நேரத்திற்கு பிறகு உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பதையும் தெரிவியுங்கள். அதாவது, எந்த எண்ணில் உங்களை தொடர்பு கொள்ளலாம் , முக்கியமான மற்றும் அவசரமான வேலை தொடர்பான மின்னஞ்சல்களுக்கு எவ்வளவு நேரத்தில் உங்களால் பதில் தர இயலும் என்பதை அவர்களுக்கு தெரிவியுங்கள். தொழில் நுட்பம் அதிகமாக வளர்ந்த இந்த காலகட்டத்தில் தொழிலாளர்கள் 24 மணி நேரமும் தொடர்பில் இருப்பது மிகவும் எளிதாக இருக்கிறது. இப்படி உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் உங்கள் வேலை நேரம் தொடர்பான புரிதல் இருக்கும் பட்சத்தில் நாள் முழுதும் வேலை செய்யும் பிரச்சனை இருக்காது.

உங்கள் முக்கியத்துவத்தில் தெளிவாக இருங்கள் :
உங்களுக்கு முக்கியமானவற்றை பற்றிய புரிதலை உருவாக்கி கொள்ளுங்கள். ஒரு விஷயத்தில் மட்டும் உங்கள் கவனம் இருக்க வேண்டுமானால் அது எதுவாக இருக்கும் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பதில் எதுவோ, அதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். அதற்கு பிறகு மற்ற விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் முதல் முக்கியமான 5 விஷயங்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒன்றன் பின் ஒன்றாக அடைய முயற்சியுங்கள்.

உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள் :
நீங்களே எப்போதும் முதல் நிலையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சிறந்த கலைஞர்கள் கூட சில நேரங்களில் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வர். ஒருவர் தனக்கான நேரத்தை பற்றி சிந்திப்பது மிகவும் முக்கியமானது. அதுவும், தலைக்கு மேல் வேலை இருக்கும்போது இது மிகவும் அவசியம். தியானம் செய்யுங்கள், சிறிய நடை பயிற்சி செய்யுங்கள், உங்களை சற்று திசை திருப்ப முயற்சியுங்கள். நமது வேலைகள் நம்மை ஆட்கொள்ள விடாமல் இருக்க மேலே கூறியவற்றை முயற்சிக்கலாம். உங்கள் வேலையின் அட்டவணை உங்களை இடைவெளி எடுக்காமல் வேலை செய்ய கூறி கொண்டே இருக்கும். ஆனால் உங்களுக்கு இடைவெளி அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள்.

உதவி கேட்பதற்கு தயங்க வேண்டாம்.:
எல்லாவற்றையும் நீங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் சக ஊழியரிடம் சென்று உங்கள் வேலை பளுவை போக்க உதவ முடியுமா என்று மென்மையாக கேட்கலாம். அதே சமயம், நேரம் வரும்போது, அடஹ்வைது அவர்களுக்கு உதவி தேவைப்படும் போது , அவர்களுக்கு உதவும் முதல் ஆளாய் நீங்கள் இருக்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களை கவனியுங்கள் :
நீண்ட நேரம் அலுவலகத்தில் இருப்பது, உடற்பயிற்சியை புறக்கணிப்பது, மோசமான உணவு பழக்கம், போன்றவை, உங்கள் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணத்தை தரலாம். இத்ததைய பழக்கத்தை முக்கியமாக கைவிட வேண்டும். இது தொடர்ந்தால் , ஏற்கனவே, சம நிலையில் இல்லாத வாழ்க்கையும் வேலையும் இன்னும் கடினமாக மாறும். இதனை மறுபடியும் இழுத்து பிடிப்பது மிகவும் கஷ்டம் .