நயன்தாரா விக்னேஷ் சிவனுடன்  இணைந்து ஓணம் கொண்டாடினார் 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கேரளாவில் ஓணம் கொண்டாடினார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுடன்  இணைந்து ஓணம் கொண்டாடினார் 

ஓணம் கொண்டாடுவதற்காக கேரளா புறப்பட்ட திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களது கொண்டாட்டங்களின் அழகிய படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

விக்னேஷ் இயக்கிய விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார் . விக்னேஷ் அடுத்து நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி நடித்துள்ள “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தை இயக்கவுள்ளார்.

“சுற்றியுள்ள அனைத்து அழகான மக்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள் :)”

“மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றை நம்பிக்கையுடன் மேம்படுத்துவோம் :) இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகையை அழைக்க ஒரே வழி இதுவே :) “

என்று அவர் தன்னுடைய  வாழ்த்து செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்