பங்குனி உத்திரம்

நவபாஷாண முருகன் சிலை மற்ற சிலைகளை விட அதிக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இந்த ஆற்றலை பலமடங்காக  தருகிறது.

பங்குனி உத்திரம்
created to wikipedia
பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம்

பங்குனி மாதத்தில் 12வது நட்சத்திரமான உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாளை பங்குனி உத்திரம் என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. உத்திர நட்சத்திரத்தின் குணம் அன்பும், ஒற்றுமையும் பொதுவாக எந்த ஒரு குணத்தையும் அதிகமாக்கும் வல்லமை பௌர்ணமி நாளுக்கு உண்டு. அதனால் தான் பங்குனி உத்திரம் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நாள் என்று கூறுகின்றார்கள். 

திருமணம் கைகூடும்:

இந்நாளில் தான் பார்வதி-பரமேஸ்வரர், ராமன்-சீதை, தேவர்களின் திருமணங்கள் நடைபெற்றன.முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு  திருப்பரங்குன்றத்தில் மணம் முடித்துத்தந்த நாளும் இந்திருநாளே.  அதனால் இந்த புனிதமான நாளான பங்குனி உத்திர பௌர்ணமியன்று விரதம் இருந்து அம்பாள்  கோயிலுக்கு அல்லது முருகன் கோயிலுக்கு  சென்று  திருமண வரம் வேண்டுவோருக்கு திருமணம் கைகூடும்.

மலைகளில் உள்ள இறைவனை வழிபட காரணம்:

மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பௌர்ணமி தினத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது நல்லது என்று வழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள். அதுவும் மலைப் பகுதியில் உள்ள தெய்வ சிலைகள் பிரபஞ்ச சக்தியை அதிகமாக உள்வாங்கி அந்த ஆற்றலை தன்னை தரிசிப்பவர்களுக்கு  திருப்பித்தரும் ஆற்றல் பெற்றது என்று உணர்ந்ததாலேயே இது போன்ற  திருவிழாவை கொண்டாட சொன்னார்கள். பங்குனி உத்திர விழாவை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழனி, மருதமலை, பழமுதிர்சோலை, உள்ளிட்ட பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களிற்க்கு  சென்று கொண்டாடிவருகின்றனர்.  தமிழ் கடவுளான முருகனுக்காக பல திருவிழாக்கள் நடைபெற்றாலும்  பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திர திருவிழாவை கொண்டாடுவது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

பழனி மலையில் இத்திருவிழா கோலாகலமாக கொண்டாடுவதற்கு காரணம்:

ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் இத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாட அங்கு உள்ள முருகன் சிலை மலைமீது இருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல அந்த சிலை நவபாஷாணத்தில் ஆனது என்பதுவும் மற்றொரு காரணம் ஆகும். இந்த நவபாஷாண சிலை மற்ற சிலைகளை விட அதிக பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு இந்த ஆற்றலை பலமடங்காக  தருகிறது.அதனால் தான் இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து காவடியை சுமந்தும், பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதோடு, அங்கு நடக்கும் பூஜைகளையும், திருகல்யாணத்தையும் தேரோட்டத்தையும் காண கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடும் ஒற்றுமையுடனும் அன்போடு இருக்கவும், பிள்ளை பேறு கிடைக்கவும்,சகல ஐஸ்வர்யமும் கிடைக்கவும் பங்குனி உத்திர விரதம் உதவுகிறது. இந்த நாளில் வேண்டும் அனைத்தும் நிறைவேறும். பங்குனி உத்திரம் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு காரணம்  முருகனின் அருள் கிடைத்ததற்காக நன்றி கூறவும் மற்றும் அருளை பெறுவதற்காகவும் கொண்டாடுகின்றனர். 

இந்த பங்குனி உத்திரத் திருநாளில் அம்பிகையையும், முருகனையும் மனதார நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் இறைவனின் அருளால்  நல்ல மணவாழ்க்கை அமைந்திடும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும், குழந்தைப்பேறு கிடைத்திடும், வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திடும் போன்ற எண்ணற்ற பலன்களை பெறலாம். நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த தினத்தின் மகிமையை உணர்ந்ததாலேயே இந்நாளில் இறைவனின் திருவருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதற்காகவும், நம் கலாச்சாரத்தை பேணவும் இந்த பங்குனி உத்திர திருவிழாவை இன்றும் விமர்சையாக  கொண்டாடிவருகின்றனர் என்பதை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.