இளமையோடு வாழ ஆயுர்வேதம் !

வயது ஏறிக்கொண்டு இருப்பதை குறித்து கவலை அடைகிறீர்களா? எல்லோருக்கும் வயது ஏறி கொன்டே தான் இருக்கும். அதனை பற்றி கவலை கொள்ளாமல் மனதை இளமையுடன் வைத்து கொள்ள முயற்சியுங்கள். மனம் இளமையோடு இருந்தால் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இளமையோடு வாழ ஆயுர்வேதம் !

ஆயுர்வேதத்தில் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்து இளமையை அதிகரித்து முதுமை தாமதப்படுத்த சில வழிகள் பின்பற்ற படுகின்றன.  பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையை பின்பற்றி வருகிறோம். முனிவர்கள் ஆயுர்வேத முறையை பின்பற்றி பல ஆண்டுகள் இளமையோடு இருந்தனர்  என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தின் முக்கிய நியமங்கள்  வாதம், பித்தம், கபம். இந்த மூன்றும் ஒரு மனிதனின் உடலில் சரியாகவும் சம நிலையிலும் இருக்கும்போது அவன் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் தோன்றுகிறான் என்று கூறுகிறது.

வயது முதிர்வை தாமதப்படுத்த இங்கே சில மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை சதையில் எளிதில் கிடைக்க கூடியதாகும். இவற்றை வாங்கி பயன்படுத்தி உங்கள் இளமையை தக்க வைக்கலாம்.

ஷிலாஜித் :
ஆயுர்வேத கடையில் கிடைக்க கூடிய ஒரு பொருள் ஷிலாஜித். பல வியாதிகளுக்கு நிவாரணத்தை தருகிறது. பசை போன்ற தன்மையில் இருக்கும் இந்த மருந்து இளமையோடு இருக்க உதவுகிறது.

ச்யவனபிராஷ் :
குளிர் காலத்தில் ஓரு  ஸ்பூன் ச்யவனபிராஷ் சாப்பிடுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சளி மற்றும் இருமல் முற்றிலும் நீங்குகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும்  மூலிகைகள், மினரல்கள் மற்றும் பழங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த மருந்தை ஒரு ஸ்பூன் சாப்பிடுவதால் சருமத்தில் இருந்து நச்சுக்கள் வெளியேறி கட்டிகள், புண்கள் போன்றவை குறைகிறது.

ரசாயனா :
உடல் , சருமம் மற்றும் மனதை புதுப்பிக்கும் ஆற்றல் ரசாயனாவிற்கு உண்டு. இது 40 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது. இது பவுடராகவும் மாத்திரையாகவும் கடைகளில் கிடைக்கின்றது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் அற்புதமான மாற்றங்கள் உங்கள் சருமத்தில் உண்டாகும். உங்கள் சருமம் மென்மையாகவும், இளமையாகவும் மாறும்.

அஸ்வகந்தா :
ரசாயனாவின் ஒரு பகுதி மருந்துதான் இந்த அஸ்வகந்தா. சரும புத்துணர்ச்சிக்கும் இளமைக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. இது கேப்ஸ்யூல் வடிவில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்த தொடங்கியவுடன் நல்ல பலனை விரைவில் உணர்வீர்கள்.

ஆம்லா :
எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழம் இந்த நெல்லிக்காய் என்னும் ஆம்லா. முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த மறுத்து இந்த ஆம்லா. ஆயுர்வேத எண்ணெய்களில் இது முக்கிய இடத்தை பிடிக்கிறது. நெல்லிக்காயை மூலப்பொருளாக கொண்டிருக்கும் க்ரீம்களை பயன்படுத்தும்போது வயது முதிர்வு தாமதமாகும். 

ஆயுர்வேதத்தை விட இயற்கையான மருந்துகள் வேறு எங்கும் கிடைக்காது. இன்றைய சந்தையில் முழுவதும் வேதி பொருட்களால் ஆன க்ரீம்கள் மற்றும் லோஷன்கள் விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தி இளமையோடு வாழலாம்.