அக்ரூட் எண்ணெய்யின் ஆரோக்கிய பலன்கள்

அக்ரூட் பருப்பு ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் மிக பெரிய ஆதாரமாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் அக்ரூட் எண்ணெய் , சருமம், தலை முடி, மற்றும் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்ததாக உள்ளது. இதன் நன்மைகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அக்ரூட் எண்ணெய்யின் ஆரோக்கிய பலன்கள்

அக்ரூட் எண்ணெய் பல்வேறு சிகிச்சைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு எண்ணெயாகும். பல ஆண்டுகளாக, இந்த எண்ணெய்யை ஆரோக்கிய வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம். பல நோய்களுக்கும் இந்த எண்ணெய் ஒரு மருந்தாக பயன்படுகிறது. மேலும், அழகு சார்ந்த சிகிச்சைகளுக்கு இது ஒரு மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.எந்த ஒரு ஆரோக்கிய சீர் கேட்டையும் சரி செய்யும் ஆற்றல் இந்த எண்ணெய்க்கு உண்டு . அந்த அளவிற்கு இது ஒரு அற்புதமான எண்ணெய்யாக பார்க்கப்படுகிறது.

அக்ரூட் எண்ணெய், அக்ரூட்டில் இருந்து எடுக்க படும் ஒரு எண்ணெயாகும். ஜக்லான்ஸ் ரெஜியா என்பது இதன் அறிவியல் பெயராகும். இதன் ஓடு , மனித மூளை போன்ற வடிவத்தில் இருக்கும். பருப்பு  மற்றும் கொட்டை வகைகளில் மிகவும் ஆரக்கியமான ஒரு உணவு பொருளாக அக்ரூட் கருதப்படுகிறது. இந்த வகை பருப்பிற்கு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அக்ரூட் எண்ணெய் ஒரு சிறந்த அன்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். இதில் வைட்டமின், மினரல் போன்றவை அதிகமாக உள்ளன. பல்வேறு வழிகளில்  இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எண்ணெய்யை  பல்வேறு விதமாக பயன்படுத்தி, மொத்த உடலுக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம். மேலும் சரும மற்றும் தலை முடி ஆரோக்கியத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்.

இந்த எண்ணெய்யை பயன்படுத்துபவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம். இந்த எண்ணெய் பல்வேறு தொந்தரவுகளை கட்டுபடுத்த உதவுகிறது. சமையலுக்கு கூட அக்ரூட் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.. உடலில் வெளிப்புறமாக தடவலாம். நேரடியாக இதனை பருகவும் செய்யலாம். சாலட் போன்ற உணவுகளில் மேலே ஊற்றியும் உண்ணலாம். இத்தகைய ஆரோக்கியம்  பொருந்திய, சக்தி மிகுந்த அக்ரூட் எண்ணெய்யின் பலன்களை இப்போது காணலாம். தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய்க்கான சிகிச்சை :
உடலின் கொலஸ்ட்ரால்  அளவை பரிசோதித்து, அதனை குறைக்க விரும்புவோர், அக்ரூட் எண்ணெய்யை பயன்படுத்தலாம். அக்ரூட் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதால் இதயம் தொடர்பான நோய்கள் வருவதை குறைக்கலாம். இரத்த குழாய்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை  அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆஸ்துமா, எக்ஸிமா, ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் அக்ரூட் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது. அக்ரூட் எண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடல் உபாதைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. அக்ரூட் பருப்பிற்கு, கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இது ஒரு சிறந்த அன்டி செப்டிக். பூஞ்சை தொற்றுகள் உதாரணத்திற்கு, குடர் புழு, கண்டிடா, கழிப்பறை படை, சேற்று புண் போன்ற பூஞ்சை தாக்குதலால் ஏற்படும் தொற்றுகளை போக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. மூட்டு வலி மற்றும் தசை வலிகளுக்கு அக்ரூட் எண்ணெய் மசாஜ் நல்ல நிவாரணத்தை தருகிறது.

ஞாபக சக்தியை அதிகரிக்கிறது :
மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க அக்ரூட் எண்ணெய் சிறப்பாக உதவுகிறது. மூளையின் வளர்ச்சிக்கு பரிந்துரைக்கப்படும் உணவுகளில்  இது முன்னணியில் உள்ளது. மூளையின் செயலாற்றலை அதிகரிக்கவும், ஞாபக சக்தியை மேம்படுத்தவும் அக்ரூட் எண்ணெய் உதவுகிறது. மூளையின் முதிர்ச்சியை பல மடங்கு  குறைக்கும்  ஆற்றல் இந்த எண்ணெய்க்கு உண்டு அன்று அறியப்படுகிறது. அல்சைமர் மற்றும் ஞாபக சக்தி தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த எண்ணெய் நல்ல பலனை தருவதாக ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எடை குறைப்பு :
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க அக்ரூட் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. அக்ரூட் எண்ணெய் தொப்பையை  குறைப்பதுடன், உங்கள் வயிற்று அளவை சீராக மாற்ற உதவுகிறது. நீங்கள் எடை குறைப்பு செய்ய விரும்பினால், உங்கள் உடற்பயிற்சி மற்றும் டயட் உணவுடன் இந்த எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வதால் விரைவில் உங்கள் எடை குறைப்பு எண்ணம் ஈடேறும்.

பளபளப்பான சருமம்  :
அக்ரூட் பருப்பு எண்ணெய், உங்கள் சருமத்தில் பல விந்தைகளை செய்கிறது. அக்ரூட் எண்ணெய் சரும புத்துணர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் இது ஒரு சிறந்த டோனர் . கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், கண் வீக்கம் மற்றும் சோர்வான கண்களுக்கு இது ஒரு நல்ல சிகிச்சையை தருகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. சருமம் வறட்சி அடையாமல் பாதுகாப்பதுடன், அழகான பொலிவான சருமத்தை பெறவும் இந்த எண்ணெய்யை  பயன்படுத்தலாம். சருமத்தை ஈரப் பதத்துடன் வைக்க உதவுகிறது. இதனால் சருமம் புத்துணர்ச்சி அடைகிறது. சருமத்தில் உண்டாகும் தழும்புகள் மற்றும் கோடுகளை அகற்ற உதவுகிறது. இளமையில் வயது முதிர்ச்சியை தடுக்கிறது. சொரியாசிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

அழகான் கூந்தல்:
தலை முடி பிரச்சனைகளுக்கும் அக்ரூட் எண்ணெய் பதில் தருகிறது. அக்ரூட் எண்ணெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், செல்களில் ஏற்படும்  சேதத்தை தடுத்து, முடி உதிர்வை தடுக்கிறது. உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி கொடுத்து, வறட்சி அடையாமல் பாதுகாத்து, தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. பொடுகை எதிர்த்து போராடுகிறது. தொடர்ந்து அக்ரூட் எண்ணெய்யை தலை முடியில் தடவி வந்தால், முடி வளர்ச்சி அதிகமாகும். அக்ரூட் எண்ணெய் முடிக்கு பளபளப்பையும் மிருதுவான தன்மையையும் தருகிறது.

நல்ல தூக்கம் :
பதட்டம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆழ்ந்த தூக்கத்தை இழந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த எண்ணெய் ஒரு வரப்பிரசாதம். இன்சோம்னியா என்ற தூக்கமின்மை , ஒழுங்கற்ற தூக்கம், போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நல்ல தூக்கத்தை பெற, அக்ரூட் எண்ணெய் உதவுகிறது. இந்த எண்ணெய்யில் மெலடோனின் உள்ளது. இது தூக்கத்தை மேம்படுத்தி முறை படுத்துகிறது.

வயது முதிர்வு:
வயது முதிர்வை குறைக்கும் தன்மை அக்ரூட் எண்ணெய்க்கு உண்டு. அக்ரூட் எண்ணெய் ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸ்சிடென்ட் ஆகும். ஆகையால் வயது முதிர்வை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு . செல்களில் சேதத்தை விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து இந்த அன்டி ஆக்ஸிடென்ட் போராடுகிறது. இதனால் வயது முதிர்வு  கட்டுப்படுத்தப்படுகிறது. 

இத்தனை அற்புதமான தன்மைகளை  கொண்ட அக்ரூட் எண்ணெய்யை அனைவரும் நிச்சயமாக வாங்கி பயன்படுத்த வேண்டும் . இதனால் உடலின் மொத்த ஆரோக்கியமும் நமது வசப்படும்.