ஆக்டிவேடட் சார்கோலின் 5 அற்புத நன்மைகள்

ஆக்டிவேடட் சார்கோல் - இதன் ஆரோக்கிய மற்றும் அழகு பயன்பாடுகள் ஏராளமாக உள்ளன. அதனைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆக்டிவேடட் சார்கோலின் 5 அற்புத நன்மைகள்

சமீப காலங்களில் இதன் பயன்பாடு குறித்து பல அறிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கை மருந்துகளில் தனித்து நிற்கக்கூடிய அளவிற்கு இது மிகுந்த சுவாரஸ்யமான தன்மைகளைக் கொண்டது இந்த ஆக்டிவேடட் சார்கோல்.

மேற்பரப்பை உண்டாக்கும் நுண்துளைகளில் இது சிறப்பாக செயல்புரிகிறது. திரவம் அல்லது வாயுவில் படிந்துள்ள கூறுகளை சிறை பிடிக்க இது ஒரு வடிகட்டியாக விளங்குகிறது. இயற்கையாக நச்சுகளை நீக்கும் ஒரு சக்தி மிக்க பொருளாக இன்றும் ஆடிவேடட் சார்கோல் இருந்து வருகிறது. இது உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் மற்றும் பிற துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டதாகும். வீட்டில் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு இதில் பல சுவாரஸ்யமான தன்மைகள் உள்ளன. 

மேலும் தெரிந்து கொள்ள விருப்பமா? இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்டிவேடட் சார்கோலின் பயன்பாடுகள் :

பல நூற்றாண்டுகளாக பல மாற்று மருந்துகள் இந்த சார்கோலின் நன்மைகளை மறைத்து வந்துள்ளன. ஆனால் இன்றைய நாட்களில் மறுபடியும் ஆக்டிவேடட் சார்கொளின் புகழ் திரும்பி, பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கி வருகின்றன.

ஆனால் இந்த பொருளின் முதன்மை பணி, உடலை சுத்தம் செய்வது மட்டுமே. இதன் அன்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் செரிமான தன்மைகள் காரணமாக பல்வேறு சிகிச்சைகளின் அடிப்படை பொருளாக இது பயன்படுவதற்கு காரணமாக உள்ளது.

அடுத்தது, இதனை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

1. வயிறு உப்புசம் மற்றும் வாய்வு :

வயிறு முட்டிய உணவிற்கு பின் ஏற்படும் அஜீரண மற்றும் வாய்வு அறிகுறிகளைத் தடுக்க ஆக்டிவேடட் சார்கோலை உட்கொள்ளலாம். உங்கள் செரிமானத்திற்கு இடையூறாக இருக்கும் கூறுகளை உறிஞ்சும் திறன் இதில் உள்ள கூறுகளுக்கு உள்ளது, இதனால் அழற்சி வினைகள் தடுக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் சார்கோல் தூள் (5 கிராம்) 
ஒரு கப் தண்ணீர் (250 மிலி)

செய்முறை:

ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் சேர்த்து நன்றாக கலக்கவும். 

பருகும் முறை:
ஒரு பெரிய விருந்து உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் இந்த நீரை பருகவும் 

2. ஹேங் ஓவர் சிகிச்சை :
இரத்தத்தில் படிந்துள்ள ஆல்கஹாலை உறிஞ்சும் தன்மை ஆடிவேடட் சார்கோலுக்கு இல்லை. ஆனால், நிறைய தண்ணீருடன்  இதனை சேர்த்து பருகுவதால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகி, மதுபானம் வழியாக உடலுக்குள் சென்ற கழிவுகள் வெளியேற ஊக்குவிக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்:
ஒரு ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் தூள் (10 கிராம்)
2 கப் தண்ணீர் (500 மிலி )

செய்முறை:

தண்ணீருடன் ஆக்டிவேடட் சார்கோல் தூளை சேர்த்து கலந்து கொள்ளவும். 

பருகும் முறை :
ஹேங் ஓவரில் இருக்கும்போது இதனை பருகலாம்.
இதனைப் பருகும்போது வாயில் உறிஞ்சி மெதுவாக பருகவும். இதனால் வினை புரிவதற்கான நேரம் கிடைக்கும்.

3. கீல்வாதத்திற்கான சிகிச்சை :
ஆக்டிவேடட் சார்கோலில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக கீல்வாதத்தினால் உண்டாகும் வலி குறைகிறது. இதனை நேரடியாக பயன்படுத்துவதால், பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, மேலும் வீக்கம் குறைகிறது.

தேவையான பொருட்கள்:
5 ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் (50 கிராம்)
4 கப் தண்ணீர் (1 லிட்டர்)

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஆடிவேடட் சார்கோலை சேர்த்து கலக்கவும்.

பயன்படுத்தும் முறை :
ஒரு துணியை இந்த நீரில் ஊறவைத்து, பிறகு அதனை பாதிக்கபட்ட இடத்தில் போடலாம்.
பிறகு அரை மணி நேரம் அப்படியே விடவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு அந்த பகுதியை கழுவி விடவும்.
ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம்.

4. பூச்சி கடிக்கான சிகிச்சை:
ஆக்டிவேடட் சார்கோலை உட்புறமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், சிறிய பூச்சி கடிக்கு இதனை வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கூறுகள், வீக்கத்தை குறைத்து, ஒவ்வாமை வினைகளை தடுக்கிறது.

தேவையான பொருட்கள்:
1 ஸ்பூன் ஆக்டிவேடட் சார்கோல் தூள் (10 கிராம்)
1/2 ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (8 கிராம்)

செய்முறை:
தேங்காய் எண்ணெயுடன், ஆக்டிவேடட் சார்கோல் தூளை சேர்த்து ஒரு விழுதாக தயாரிக்கவும்.

பயன்படுத்தும் முறை :
பூச்சி கடி இருக்கும் இடத்தில இந்த விழுதை தடவி காய விடவும்.
பிறகு குளிர்ந்த நீர் அதிக அளவு எடுத்துக் கழுவவும்.
உங்கள் காயத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரையில் இதனை முயற்சிக்கவும்.

5. கரும்புள்ளிகளுக்கான மாஸ்க்:
பலருக்கும் இந்த சிகிச்சை ஒரு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுக்கும். சார்கோலின் உறிஞ்சும் தன்மை காரணமாக சருமத்தை சுத்தம் செய்து, சரும துளைகளை அடைத்திருக்கும் கரும்புள்ளிகளை போக்குகிறது.

தேவையான பொருட்கள்:
ஆக்டிவேடட் சார்கோல் தூள் ஒரு ஸ்பூன் (5 கிராம்)
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு
2 ஸ்பூன் தேன்

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் ஆக்டிவேடட் சார்கோலை சேர்த்து அதில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்க்கவும்.
நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன் சிறிது தேன் சேர்க்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக கலக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:
கரும்புள்ளிகள் பாதித்த இடத்தில் இந்த கலவை கொண்டு மாஸ்க் போல் தடவவும்.
20 நிமிடங்கள் வரை நன்றாக காய விட்டு, பின்பு கவனமாக அதனை அகற்றவும்.
பின்பு நிறைய தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி விடவும்.

ஆக்டிவேடட் சார்கோல் பல வித நன்மைகள் கொண்டது. அதனால் இதனை கைகளில் வைத்திருப்பதால் உடனடி பலன் கிடைக்கும். ஆகவே இதனை பயன்படுத்தி மகிழுங்கள்.