நுரையீரல் காசநோய்

நுரையீரல் காசநோய் நுரையீரலைக் கடந்து பரவுமா ?

நுரையீரல் காசநோய்

நம்மில் பலரும் டிபி என்னும்  காசநோய் குறித்து அறிந்திருப்போம். இதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு நுரையீரல் சார்ந்த நோய் என்பதை அறிந்திருப்போம். ஆனால் இந்த நோய் நுரையீரலைக் கடந்து உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கும் என்பது நம்மில் பல பேர் அறியாத ஒரு விஷயமாகும். டி பி என்னும் காசநோய் ஒரு பொதுவான பெயர் ஆனால் நுரையீரல் காசநோய் என்பது சற்று புதிய பெயராகவே உள்ளது. இது ஒரு பரவக்கூடிய கிருமி தொற்றாகும் , இது நுரையீரலில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடியதாக உள்ளது. நுரையீரல் காசநோய் உருவாகக் காரணமாக இருக்கும் கிருமி மைக்கோபாக்டீரியம் ட்யூபர்க்ளோசிஸ்  என்பதாகும். இந்த பாக்டீரியா , நுரையீரலை தாக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகிறது ஆனால் உடலின் மற்ற பகுதிகளையும் பாதிக்கிறது.

காசநோய் பாதிக்கப்பட்ட நபரின் உடலில்  வெளிப்படக்கூடிய நீர்த்துளிகள் , காற்றின் வழியாக பரவுவதால் மற்றும் ஒரு ஆரோக்கியமான நபர் இந்த காற்றை சுவாசிப்பதால் அவருக்கும் இந்த நோய் பரவும் வாய்ப்பு உண்டாகிறது . உடலின் மற்ற பகுதிகளுக்கு இந்த தொற்று பரவும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.

நுரையீரல் காசநோய்க்கான அறிகுறிகள் :

  • தொடர்ச்சியான இருமல் 
  • இருமும்போது இரத்தம் வெளிப்படுவது 
  • தொடர்ச்சியான மற்றும் மிதமான காய்ச்சல் 
  • தொடர்ச்சியான மார்பு வலி 
  • விவரிக்கமுடியாத எடை இழப்பு 
  • இரவு நேரத்தில் அதிக வியர்வை 
  • சோர்வு 

பாதிக்கப்பட்ட நபர் மேலும் சில அறிகுறிகளையும் கொண்டிருக்கலாம். இந்த நிலையில் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது மிகவும் அவசியம். இந்த அறிகுறிகளைக் கண்டவுடன் முறையான நோயறிதல் மிகவும் அவசியம்.

நுரையீரல் காசநோய் யாரை அதிகம் பாதிக்கலாம் ?

மேலே கூறிய அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானோர் முதன்மை நிலை காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் சிலர் இந்த நோய்க்கான அபாயத்தை அதிகம் கொண்டிருக்கலாம். 

  • பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் கொண்டிருப்பவர்கள் , குறிப்பாக நீண்ட நாள் நோய்களான நீரிழிவு, எய்ட்ஸ் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள்.
  • கீமோதெரபி  போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக மாற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்கள், 
  • முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் 
  • புகைபிடிக்கும் நபர்கள் 
  • தன்னுடல் தாக்கும் நோய் உள்ளவர்கள் 

நோயறிதல்  முறை :

உங்கள் மருத்துவர் உங்களுக்கு பின்வரும் சிகிச்சை முறைகளை பரிந்துரைப்பார்.

  • மார்பு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் 
  • உங்கள் மருத்துவ வலாறு  குறித்து கேட்டு அறியப்படும் 
  • நுரையீரலில் திரவம்  இருப்பதை அறிய உடல் பரிசோதனை செய்யப்படும் 
  • தோல் மற்றும் இரத்த பரிசோதனை  உட்பட மருத்துவ பரிசோதனை  செய்து நுரையீரல் காசநோய் இருப்பது உறுதி செய்யப்படும் .

தடுப்பு முறைகள் :

நுரையீரல் காசநோய் இருப்பது கண்டறிப்பட்டவுடன் அது பரவக்கூடிய நிலை உண்டாகிறது. இது பரவாமல் தடுக்க சில அடிப்படை தடுப்பு நடவடிக்கை எடுப்பது அவசியம். நீங்கள் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது உங்களுக்கு அருகில் இருப்பவர் நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதால் நோய்க்கான அபாயம்  குறைக்கப்படும். 

  • இந்த நோயால் பாதிக்கபட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • இருமல் மற்றும் தும்மல் வெளிப்படும்போது முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்வது அவசியம் .
  • தடுப்பு முறைகள் பற்றி நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் தெரிந்து கொள்வது அவசியம். 
  • மருத்துவர் பரிந்துரைத்த எல்லா  மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது  
  • இருமல் மற்றும் தும்மல் வெளிப்பட்டவுடன் கைகளை சுத்தமாகக் கழுவுவது நல்லது.
  • பள்ளிக்கு  செல்வது, வேலைக்கு   செல்வது, மற்றவர்களுடன் சேர்ந்து இருபப்து போன்றவற்றை மருத்துவர் கூறும் வரை தவிர்த்துக் கொள்ளுங்கள். 
  • நோயாளி பயன்படுத்திய டிஷ்யூ போன்றவற்றை பாதுகாப்பாக ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து அப்புறப்படுத்துங்கள்.
  • அறைக்குளேயே  இருப்பவர்கள்  , அந்த அறையில் நல்ல காற்று பரவும்படி கதவு  மற்றும் ஜன்னல்களை சற்று  திறந்து வையுங்கள் .