தைராய்டு சுரப்பியை பராமரிக்க 6 வழிகள்

வளர்சிதை மாற்றத்திற்கான ராஜாவாக விளங்குவது தைராய்டு சுரப்பி.

தைராய்டு  சுரப்பியை பராமரிக்க 6  வழிகள்

ஆற்றல்  வெளிப்பாடு, இதயம்  மற்றும் செரிமான நலன்  , எலும்புகளை  நிர்வகிப்பது , மூளை வளர்ச்சி மற்றும் தசை கட்டுப்பாடு போன்றவற்றை   ஒழுங்குபடுத்துவது  தைராய்டு  சுரப்பியின்  சிறப்பாகும். ஆகவே தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்  கொடுப்பது  மிகவும் அவசியாயமாகிறது. சிறந்த  தைராய்டு  பாராமரிப்பிற்கான நிலைகள்  இதோ ..

  1. ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பு:

தைராய்டு  சுரப்பியின் சரியான செயல்பாட்டை  பாதிக்கும் ஒரு நிலை  தைராய்டு  குறைபாடு. பல ஆண்டுகளுக்கு முன்பு  உலக மக்கள் தொகையில் 30% பேர் ஐயோடின்  குறைபாடு  என்ற பாதிப்பை  எதிர்கொண்டனர். அதனால் உணவு வழியாக ஐயோடின் உட்செலுத்துதல் நன்மை தரும் என்று உணர்ந்த அரசு, உப்பில் ஐயோடின் சேர்ப்பதை உறுதி செய்தது . இதனால்  தைராய்டு  தொடர்பான கோளாறுகளான  தைராய்டு வீக்கம், மூளை வளர்ச்சி பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகின்றன. அடுத்தசில ஆண்டுகளில் உலகம் முழுவதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. எனவே உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்படும் உப்பில் ஐயோடின் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  1. குடல் ஆரோக்கியம்:

தைராய்டு ஹார்மோன்களான T 3 மற்றும் T 4 போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் செரிமான மண்டலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு சுரப்பியால் சுரக்கப்படுவது T 4 ஹார்மோன் என்றாலும் உடல் செயல்பாட்டிற்காக உடலில் அது T3 யாக மாற்றம் செய்யப்படுகிறது. ஆரோக்கியமான  T 4 ஹார்மோன் உற்பத்தி சரியான நிலையில் இருந்தாலும் குடல் பராமரிப்பு சரியான நிலையில் இல்லாதபோது  இந்த மாற்றம் செய்யும் செயல்பாட்டில் சமரசம் செய்யப்படுகிறது. T 4 ஹார்மோன் உற்பத்தி இருந்தாலும் முழுமையான முறையில் அது பயன்படுவதில்லை. இது குறிப்பிட்ட தைராய்டு எதிர்ப்பு நிலையை உடலில் உருவாக்கக்கூடும்

  1. மனஅழுத்தம்:

குடல் ஆரோக்கியம் போல், மனஅழுத்தமும் T 3 ஹார்மோன் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆகவே சரியான வளர்சிதை மாற்றத்திற்கு ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தம் இல்லாத நிலையும் அவசியம். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் மனஅழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். குறிப்பிட்ட பொழுதுபோக்கை மேற்கொள்ளுதல், மகிழ்ச்சியாக சிரிப்பது, சிறந்த தோழமை கொள்வது, அன்பு செலுத்துவது, மூச்சை ஆழமாக இழுத்து வெளியில் விடுவது போன்றவற்றைப் பின்பற்றுவதால் மனஅழுத்தத்திற்கு குட் பை சொல்லிவிடலாம்.

  1. கணவன்-மனைவி உறவு:

மகிழ்ச்சியான திருமண உறவில் மனஅழுத்தம் குறைகிறது. கணவன் மனைவியின்  நெருக்கமான உறவு நிலையில் எண்டோபிரின் மற்றும் மனநிலையை ஊக்குவிக்கும்  இதர ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. மேலும் இந்த நெருக்கம்  பலவீனமான தைராய்டு வளர்சிதை மாற்றத்தில் இடையூறை உண்டாக்கும் என்பதும் உண்மை. எனவே தைராய்டு சுரப்பியில் உண்டாகும் எந்த ஒரு பாதிப்பையும் கண்டறிந்து களைவது மிகவும் அவசியம். இதனைப் புறக்கணிக்கும் போது உங்கள் உடல்நலனில் பல இடையூறுகள் உண்டாகலாம்.

  1. தைராய்டு வீக்கக் காரணி:

தைராய்டு வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடும் பொருட்கள் நீங்கள் உட்கொள்ளும் உணவில் உள்ளதா? தைராய்டு சுரப்பி அயோடினை எடுத்துக் கொள்வதில் அத்தகைய உணவுகள் தலையிடுகின்றனவா? ஹைப்போ தைராய்டிசம் பாதிப்பு இருந்தால், குறுக்குவெட்டு காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி போன்ற தைராய்டு வீக்கத்தை உண்டாக்கும் கோட்ரோஜெனிக் உணவுகளைத் தவிர்க்கவும், தினை, வேர்க்கடலை, முளைகள், கீரை மற்றும் அடர் பச்சை இலை காய்கறிகளின் பயன்பாட்டை மிதப்படுத்தவும். ஆனால் சில குறுக்குவெட்டு காய்கறிகள் புளிக்க வைத்து பயன்படுத்தும்போது தைராய்டு சுரப்பிக்கு நன்மை செய்கின்றன. 

  1. புளிக்க வைத்த உணவுகள்:

புளிக்க வைத்த உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், தைராய்டு சுரப்பிக்கும் நன்மை செய்கின்றன. பீட் கேவாஸ், புளித்த பழங்கள் மற்றும் காய்கறிகளும், லாக்டோ புளித்த சல்சா, கிம்ச்சி, புளிக்க வைத்த முட்டைகோசு போன்றவை சுவையான மற்றும் அற்புதமான உணவுகளாகும்.

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே தைராய்டு.சுரப்பியை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியம்.