நுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ 

பொதுவாக தலை முடி சேதமடைவதை சில குறிப்புகள் நமக்கு உணர்த்தும். இவற்றுள் முக்கியமான ஒன்று முடியின் நுனி பகுதியில் வெடிப்புகள் உண்டாவது.

நுனி முடி வெடிப்பை போக்க அவகாடோ 

நுனி முடியில் உண்டாகும் வெடிப்பால் தலை முடி கலை இழந்து காணப்படும். அதன் மென்மை குணம் மாறி, முடி சோர சொரப்பாக உணரப்படும். தலை முடியின் வெளிப்புறத்தில் உண்டாகும் சேதத்தால் இந்த வெடிப்புகள் உண்டாகிறது. நுனி முடியில் வெடிப்புகள் தோன்றும் போது அனைவரும் செய்யும் ஒரு வேலை , அந்த முடிகளை வெட்டி விடுவது தான். இதனால் முடியின் நீளம் குறைகிறது. ஆகவே முடிகளை வெட்டுவதற்கு மாற்றாக, அந்த வெடிப்புகளை போக்குவதற்கான வழிகளை தேடுவது தான்  சரியான முயற்சி. இத்தகைய வெடிப்புகளை போக்க பல்வேறு இயற்கை வழிமுறைகள் பின்பற்றபட்டாலும் , அவக்காடோ இந்த சிகிச்சையில் சிறந்த பலனை தருகிறது.  

அவகாடோவை ஏன் பயன்படுத்த வேண்டும் ?

அவகாடோவில் அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. இந்த அமினோ அமிலம், கூந்தலில் ஈர பதத்தை தக்க வைக்க உதவுகிறது. 
இந்த பழத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய், கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்கிறது. இவை, சேதமடைந்த கூந்தலை சரிபடுத்தி வெடிப்புகளை போக்க பெரிதும் உதவுகிறது. 
அவகாடோவில் வைட்டமின் ஏ , பி6, டி, ஈ மற்றும் மினேரல்கள் தாமிரம், இரும்பு போன்றவை உள்ளன. இவை கூந்தலை புத்துணர்ச்சி அடைய செய்து வேர்க்கால்களை பாதுகாக்கின்றன. இத்தகைய ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகின்றன.
அவகாடோவில் வைட்டமின் ஈ போன்ற அன்டி ஆக்ஸ்சிடென்ட் இருப்பதால், தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து கூந்தல் பாதுகாக்கப் படுகிறது. இதனால் கூந்தலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
அவகாடோவை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் , ஒரு இயற்கை கண்டிஷனர் போல் செயல்பட்டு கூந்தலை ஆரோகியமாக வைக்கிறது. செயலிழந்த வேர்கால்களை கூட வலுவடைய செய்து வளர்ச்சியை உண்டாக்கும் இந்த அவகாடோவை  பயன்படுத்தி நுனி முடி வெடிப்பை போக்க சில வழிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படித்து முயற்சித்து பாருங்கள்.

அவகாடோ மற்றும் வாழை பழம்:
அவகாடோ மற்றும் வாழை பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும். இவற்றுடன் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலையில் தடவி ஒரு மணி நேரம் நன்றாக ஊற விடவும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மென்மையான ஷம்பூவால் தலையை அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வருவதால் விரைவில் வெடிப்புகள் காணாமல் போகும். 

அவகாடோ மற்றும் பாதாம் எண்ணெய் :
2 ஸ்பூன் அவகாடோ எண்ணெய் மற்றும் 3 ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். இந்த கலவை எண்ணெய்யை தலையில் மென்மையாக மசாஜ் செய்யவும். நுனி முடி வரை நன்றாக தடவவும். 40 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை ஷம்பூவால் அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்து வரவும்.

அவகாடோ மற்றும் மயோனைஸ் :
அவகாடோவை நன்றாக மசித்து கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து கலக்கவும். இந்த பேஸ்டை தலையில்  தடவி அரை மணி நேரம் ஊற விடவும். பின்பு மென்மையான ஷம்பூவால் வெதுவெதுப்பான நீர் கொண்டு தலையை அலசவும். ஒரு மாதத்தில் 2 முறை இந்த முறையை பயன்படுத்தி தலையை அலசவும். விரைவில் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

அவகாடோ மற்றும் பப்பாளி :
அவகாடோவை நன்றாக மசித்து கொள்ளவும். பப்பாளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை தலையில் தடவவும். அரை  மணி நேரம் நன்றாக ஊற விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும். மாதத்திற்கு இரண்டு முறை இந்த முறையை பின்பற்றி வரவும். விரைவில் நுனி முடி வெடிப்புகள் விலகி உங்கள் கூந்தல் அழகாக மாறும்.
 
அவகாடோ மற்றும் தேன் :
அவகாடோவை நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும். தரமான தேன் வாங்கி, இந்த அவகாடோவில் ௪ ஸ்பூன் கலக்கவும். இந்த கலவையை உங்கள் முடியில் நன்றாக தடவவும். 40 நிமிடங்கள் கழித்து வெந்நீரால் தலையை அலசவும். வாரத்தில் ஒரு முறை இதனை செய்து வரலாம்.. எளிதில் உங்கள் கூந்தலில் உள்ள வெடிப்புகள் மறையும்.
 
அவகாடோ மற்றும் முட்டையின் வெள்ளை கரு :
முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து கொள்ளவும். இதனுடன் மசித்த அவகாடோ 3 ஸ்பூன் சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின், வெந்நீரால் தலையை மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும்.இதனை ஒரு முறை முயற்சித்து பார்த்து நல்ல பலனை பெறலாம்.

அவகாடோ மற்றும் பால் :
அவகாடோவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பிறகு ஷம்பூவால் தலையை அலசவும். மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும். 

மேலே கூறிய முறைகளை பின்பற்றி அழகான வெடிப்புகள் இல்லாத கூந்தலை எளிதில் பெறலாம்.