அழகான சருமம் மற்றும் கூந்தலை பெறுவதற்கான வழிகள்

பொதுவாக அழகு சிகிச்சைகளில் இயற்கை தீர்வுகள் உடனடி பலன்கள் தராது. தாமதித்தாலும் சிறந்த பலன்களை பெறலாம்.

அழகான சருமம் மற்றும் கூந்தலை பெறுவதற்கான வழிகள்

பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்து, தங்களை அழகாக காண்பிக்க எண்ணும் அனைவருக்கும் தான் இந்த தொகுப்பு. வீட்டில் இருந்தபடியே உங்கள் முகம், கூந்தல் மற்றும் சருமத்தை அழகாக்க இந்த பதிவை படியுங்கள். 

இயற்கை தீர்வுகள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றை முயன்று பாருங்கள். ஒரு மேஜிக் போல் உடனடியாக ஒரு  தீர்வு!

சோர்வடைந்த வறண்ட சருமம்:
குளிர்வித்த யோகர்ட் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.  முகத்தில் சிறிதளவு சர்க்கரை தூவி மறுபடியும் நன்றாக மசாஜ் செய்யுங்கள். 
ஆரஞ்சு பழத்தை பாதியாக நறுக்கி, ஒரு பாதியை எடுத்து முகத்தில் தேயுங்கள் . ஆரஞ்சில் உள்ள சாறு மெதுவாக உருகும். அதன் பிறகு குளிந்த நீரால் முகத்தை கழுவுங்கள். என்ன, வித்தியாசத்தை உணர்ந்தீர்களா?

சோர்வான வறண்ட சருமம் :
பப்பாளியை கொண்டு சருமத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஓட்ஸ் மற்றும் தேனுடன் சிறிது குறித்த பால் சேர்த்து ஸ்க்ரப் போல்  செய்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து பால் மற்றும் தண்ணீரால் முகத்தை கழுவலாம். 

சுருட்டை முடியால்  அவதியா?
2 கப் தண்ணீரை எடுத்து அதில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். அந்த நீரை மெதுவான தீயில் அடுப்பில் வைக்கவும்.  அந்த நீர் பாதியாகும் வரை அப்படியே விடவும். ஒரு ஸ்பிரே பாட்டிலில் அந்த நீரை ஊற்றி முடிக்கு ஸ்பிரே பண்ணவும். அழகான இயற்கை நறுமணத்துடன் கூடிய சுருள் இல்லாத நீண்ட கூந்தலை பெறலாம்.

தலை முடிக்கு இயற்கையான நிறம்:
ரோஸ்மேரி இலைகள் சிலவற்றை எடுத்து 2 கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் சிறு தீயில் வைக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் டீத்தூள் சேர்க்கவும். இந்த நீர் பாதியாகும் வரை கொதிக்க விடவும். இந்த நீரை ¼ கப் ஷாம்பூவுடன் சேர்க்கவும். இந்த ஷாம்பு கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும். உங்கள் தலை முடிக்கு இயற்கையான கருமை கிடைக்கும்.

வழவழப்பான முதுகு பகுதி:
லோ-நெக் பிளவுஸ் அல்லது சோளி போடும்போது முதுகு வழவழப்பாக இருக்க  இதனை முயன்று பாருங்கள். 1 கப் கடல் உப்பு மற்றும் 1//2 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்குங்கள். இதனுடன் 5 துளி சந்தனத்தூள் எண்ணெய்யை சேர்த்து கலந்து முதுகில் ஸ்க்ரப் போல் தடவி மென்மையாக தேயுங்கள். பின்பு ஈர துணியால் துடைத்து விடுங்கள்.

உடனடி முக அழகிற்கு:
முகத்தை ஐஸ் தண்ணீர் கொண்டு கழுவவும். 1 ஸ்பூன் தேன் மற்றும் ஐஸ் கட்டியை  கொண்டு முகத்தில் மென்மையாக தேய்க்கவும். 
முட்டையை எடுத்து முகத்தில் நன்றாக தேய்க்கவும். நன்றாக காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை கழுவவும்.

சோர்ந்த கண்கள்:
நீண்ட நேர வேலைகளுக்கு பிறகு கண்கள் சோர்ந்து இருக்கும். உடனடி தீர்வுக்கு, முகத்தை நீரால் நன்றாக கழுவவும். குளிந்த நீரை எடுத்துக் கொண்டு அதில் சில துளிகள் தேன் மற்றும்  ரோஸ் வாட்டரை சேர்த்து கலக்கவும். இந்த திரவத்தில் ஒரு கண்ணை  வைத்து லேசாக திறந்து மூடவும். பிறகு இந்த நீரை கீழே ஊற்றி விட்டு மறுபடி புதிதாக இதே போன்ற நீரை தயாரித்து  அடுத்த கண்ணை வைத்து இந்த முறையை பின்பற்றவும்.  பிறகு குளிந்த நீரை உங்கள் கண்களில் தெளிக்கவும். சில நிமிடத்திற்கு கண்கள் சிவப்பாக  இருக்கும். ஆனால் உடனடியாக ஒரு புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.