சரும துளைகளை  சுருங்க செய்ய இயற்கை வழிமுறைகள் !

சரும அழகை மெருகேற்ற பல விஷயங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் அழகை கெடுக்கவும் சில அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் ஒன்று சரும துளைகள் பெரிதாக திறந்து, அழுக்குகள் படிவது.

சரும துளைகளை  சுருங்க செய்ய இயற்கை வழிமுறைகள் !

அதிகமான பெண்களுக்கு சரும பிரச்சனை உள்ளது. இத்தகைய பிரச்சனை கட்டிகள், பருக்கள், கரும்புள்ளிகள், சீரற்ற சருமம் போன்றவற்றிற்கு வழி வகுக்கின்றன.  சருமத்தில் திறந்திருக்கும் துளைகளால் ஊடுருவும் கிருமிகளால் இத்தகைய பிரச்சனைகள் உண்டாகின்றன. இவற்றால் முகத்தில் அழுக்கும் எண்ணெயும் சேர்ந்து முகம் சோர்வாக காணப்படுகின்றது.

ஆகவே இத்தகைய திறந்த துளைகளை போக்குவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனை செய்வதற்கு சிறந்த வழி, முகத்திற்கு வாரத்திற்கு ஒரு முறை பேக் போடுவது தான். குறிப்பாக, இயற்கை மூலபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் பேக்குகள் நல்ல பலனை கொடுக்கும். சந்தையில் வாங்கும் பொருட்களை விட இவற்றில் தரம் அதிகமாக இருக்கும்.  

இன்றைய நமது பதிவில், வீட்டில் இருந்தபடியே நாமாக தயாரிக்கும் சில இயற்கை பேஸ் பேக்கை பற்றி பார்க்கப்போகிறோம். இவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதால் பெரிதாக தோன்றும் சரும துளைகள் சுருங்கி சிறிய அளவில் மாற்றம் பெறுகிறது . இதன் மூலம் உங்கள் முகம் எந்த நேரத்திலும் பளிச்சென்று இருக்கும். இந்த பேஸ் பேக்குகளில் சேர்க்கப்படும் மூலபொருட்கள் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது, தொடர்ந்து படித்து, இவற்றை வீட்டில் முயற்சித்து பாருங்கள்.

முட்டை மற்றும் எலுமிச்சை சாறு பேக் :
தேவையான பொருட்கள்:
முட்டை -1 வெள்ளை கரு மட்டும்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

மேலே கூறிய மூலபொருட்களை எடுத்துக் கொள்ளவும். முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக கலந்து உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவவும். 20 நிமிடங்கள் முகத்தில் நன்றாக ஊற வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவவும். 

பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை ஜெல் பேக்:
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்
கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவவும். 10  நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். அதன் பிறகு சிறிது டோனர் பயன்படுத்துவதால் மேலும் நல்ல பலன் கிடைக்கும்.
 
முல்தானிமிட்டி மற்றும் ஆலிவ் எண்ணெய் பேக்:
தேவையான பொருட்கள் :
முல்தானிமிட்டி -- 1/2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெய் மற்றும் முல்தானிமுட்டியை ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் சீராக எல்லா இடங்களிலும் தடவவும். 10 நிமிடம் நன்றாக காய விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். 

வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் பேக் :
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் - 1 துண்டு
ஆப்பிள் சிடர் வினிகர் - 5 துளிகள்
வெள்ளரிக்காயை ஒரு சிறு துண்டு வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதனை நன்றாக மசித்து கொள்ளவும். மசித்த வெள்ளரிக்காயுடன் ஆப்பிள் சிடர் வினிகர் 5 துளிகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். பின்பு 10 நிமிடங்கள் நன்றாக காய விடவும். பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவவும்.

தேன் மற்றும் டீ ட்ரீ எண்ணெய் பேக் :
தேவையான பொருட்கள்:
தேன் - 2 ஸ்பூன்
டீ ட்ரீ எண்ணெய் - 4 துளிகள்

2 ஸ்பூன் தேனுடன் 4 துளிகள் டீ ட்ரீ எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். முதலில் முகத்தை நன்றாக கழுவவும். ஈர முகத்தில் இந்த கலவையை  தடவவும். 5 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

வாழைப் பழம் மற்றும் பாதாம் எண்ணெய் பேக் :

தேவையான பொருட்கள் :
கனிந்த வாழை பழம் - 1
பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

கனிந்த வாழைப் பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போடவும். அதனுடன் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை  உங்கள் முகத்தில் எல்லா இடங்களிலும் தடவவும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவவும்.

சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்  :
தேவையான பொருட்கள்:
சந்தன தூள் - 1/2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

சந்தன தூளை ரோஸ் வாட்டரில் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் நன்றாக தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


ஓட்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்:
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்

ஒரு ஸ்பூன் வேக வைத்த ஒட்சுடன் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

யோகர்ட் மற்றும் பழுப்பு சர்களை பேக் :
தேவையான பொருட்கள் - 
யோகர்ட் - 2 ஸ்பூன்
பழுப்பு சர்க்கரை - 1 ஸ்பூன்

மேலே கூறிய யோகர்ட் மற்றும் பழுப்பு சர்க்கரையை ஒன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் எல்லா இடங்களிலும் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

மஞ்சள் தூள் மற்றும் பால் பேக் :
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
காய்ச்சாத பால் - 1 ஸ்பூன்
 
காய்ச்சாத பால் 1 ஸ்பூன் எடுத்து அதில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். இந்த கலவையி உங்கள் முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.