சேதமடைந்த கூந்தலை சரி செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த இயற்கை வழிகள் 

இன்றைய நாட்களில் கூந்தலைப் பராமரிப்பதில் பலரும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்..ஒரு நபரின் பர்சனாலிட்டியை மேம்படுத்துவதில் அவரின் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது

சேதமடைந்த கூந்தலை சரி செய்ய பழங்காலத்தில் பயன்படுத்தி வந்த இயற்கை வழிகள் 

ஒருவரின் முக அழகை மேலும் அழகாக்கும் திறன் அவரின் தலைமுடிக்கு உண்டு. பல தலைமுறையாக கூந்தல் பராமரிப்பு முறை நடைபெற்று வருகிறது.  தற்போது சந்தைகளில் கூந்தல் பராமரிப்பிற்கான பல வித பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவை கூந்தல் உதிர்வு, வறண்ட தலைமுடி, பொடுகு என்று பல வித கூந்தல் பிரச்சனைக்கு தீர்வைத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இவைகளினால் கூந்தல் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதை உறுதியாக யாராலும் கூற முடியாது. 

கூந்தல் மெலிவு, வழுக்கை, பொடுகு, வறண்ட தலைமுடி, போன்றவற்றை சரி செய்வதற்கு பல ரசாயன வழிமுறைகள், லேசர் சிகிச்சை போன்றவற்றையும் இன்றைய நாட்களில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இத்தகைய சிகிச்சை முறைகள் கூந்தலில் இன்னும் பல மோசமான விளைவுகளைத் தருகின்றன. இதனால் தலைமுடி மேலும் சேதமடையும் வாய்ப்பும் உண்டாகிறது. 

சிலர் இதனைக் கருத்தில் கொண்டு, ரசாயனம் அற்ற கூந்தல் பராமரிப்பு பொருட்கள், ஆயிர்வேத மருந்துகள், மூலிகை மருந்துகள் போன்றவை மூலம் தயாரிக்கப்பட்ட ஷாம்பூ , கண்டிஷனர் போன்றவற்றை பயன்படுத்த முடிவெடுக்கின்றனர். ஆனால் ஷாம்பூ போன்ற பொருட்கள் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலத்தில் என்ன பயன்படுத்தி தலைமுடியை பராமரித்து வந்தனர் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா? 
பழங்காலத்தில் கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் புத்துணர்ச்சியை திரும்பத் தருவதற்கு சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி வந்தனர். 

கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தலை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதின் அவசியம் பற்றி நாம் அனைவரும் உணர்ந்திருப்பதால் கூந்தலை அழகாக வைத்துக் கொள்ள பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய முறைகள் இன்றைய கூந்தல் பராமரிப்பு பொருட்களில் இருப்பதில்லை. ஆகவே இந்த பதிவைப் படித்து அதன் செயல்முறையை அறிந்து கொண்டு பின்பற்றுவதால் உங்கள் கூந்தல் புத்துணர்ச்சி பெற்று கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் விரைவில் அழியும்.

 1. வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக் :
ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீளமான கூந்தல் என்றால் இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளவும். அந்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வாழைப்பழ விழுதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். வறண்டு அழுக்காக இருக்கும் தலையை சுத்தம் செய்ய,  தேவைப்பட்டால் ஒரு சிறு கற்பூரத்தை இந்த கலவையுடன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலை , கூந்தல் வேர் மற்றும் முழு நீள கூந்தலில் தடவவும். அரை மணி நேரம் இந்த கலவை உங்கள் கூந்தலில் ஊறட்டும். பிறகு வழக்கமான ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் கொண்டு தலைமுடியை அலசவும்.

  2. முட்டை மற்றும் தயிர் மாஸ்க் 
நமது பாட்டிகள் கூட இந்த முறையை பின்பற்றி இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். ஒரு முட்டையுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக அடித்து கிளறிக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் கூந்தலில் தடவி, தலையை 10-15 நிமிடம் நன்றாக மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வழக்கமான ஷாம்பூ மூலம் தலையை அலசவும். ஒருவேளை முட்டையின் துர்நாற்றம் பிடிக்காதவர்கள், ஷாம்பூவால் தலையை அலசும்போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். முட்டை பயன்படுத்தும்போது தலைமுடியை அலச வெதுவெதுப்பான அல்லது சூடான நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

 3. முல்தானி மிட்டி :
முல்தானிமிட்டியை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கவும். தேங்காய் எண்ணெய் கொண்டு இரவே தலைமுடியை நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். மறுநாள் காலை தலையை அலசுவதற்கு முன்னர் ஊறவைத்த முல்தானிமிட்டியை தலையில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். இப்படி செய்யும்போது ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம்.