சைவ உணவுகள் மனச்சோர்வை உண்டாகுமா?

நாம் உண்ணும் உணவால் நமது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது .

சைவ உணவுகள் மனச்சோர்வை உண்டாகுமா?

நாம் உண்ணும் உணவு நமது மன நிலையில் மாற்றத்தை உண்டாக்குகிறது. கேட்பதற்கு ஆச்சர்யமாக இருந்தாலும் இது தான் உண்மை. அதிக சர்க்கரை கலந்த உணவுகளை உண்ணும்போது, மன சோர்வு அதிகமாகும். இலைகள் உடைய காய்கறிகள் , மஞ்சள், காளான் போன்ற உணவுகளை உண்ணும்போது நேர்மறை உணர்ச்சிகள் அதிகமாகும். இன்னும் சொல்ல போனால் , நாம் விரும்பி உண்ணும் உணவுகள், மூளையின் ஆரோக்கியம் மற்றும் மனநிலையோடு சம்மந்தப்பட்ட வைட்டமின்கள் , மினரல்கள் போன்றவற்றின் அளவை மாற்றியமைக்கின்றன .

மனச்சோர்வு பாதிப்பு :
சைவ உணவுகள் மனச்சோர்வை அதிகரிக்கின்றன என்று  கூறப்படுகின்றன. அதை குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ள பட்டு வருகின்றன. ஆகவே ஆரோக்கிய பலன்களுக்காக , அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுபவர்கள் இதனை கருத்தில் கொள்வது நல்லது. சைவ உணவை சாப்பிடுகிற ஆண்களுக்கு மனச்சோர்வின் பாதிப்பு அசைவ உணவை சாப்பிடுகிறவர்களை விட  இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. சைவ உணவை உண்ணுபவர்கள் ஒமேகா 3 கொழுப்பு சத்து , வைட்டமின் பி 12 , போலேட் போன்றவற்றை குறைவாக எடுத்துக் கொள்கின்றனர். இவை மனச்சோர்விற்கு வழி வகுக்கின்றன.

ஒமேகா 3 கொழுப்புகள்:
மனிதர்களில் பலரும் குறைந்த அளவு  ஆரோக்கிய கொழுப்பை  கொண்டிருக்கின்றனர். ஒமேகா 3 ஒரு ஆரோக்கியமான கொழுப்பாகும். இது இதய நலனை பாதுகாக்கிறது. மூளையின் ஆரோக்கியத்திலும், மனநல ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. ஒமேகா 3 யின்  தினசரி உட்கொள்ளல் அளவு குறிப்பிட்டு  சொல்ல பட வில்லை. என்றாலும் சில சுகாதார  அமைப்புகள்  ஒரு நாளைக்கு 250மிகி முதல் 500 மிகி வரை ஒமேகா 3 எடுத்து கொள்ளலாம் என்று கூறுகின்றன. மனச்சோர்வில் பாதிக்கப்பட்டோர், இந்த அளவை அதிகரித்து எடுத்துக் கொள்ளலாம். அன்கோவீ , சால்மன், சர்டைன் , கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது.

வைட்டமின் பி 12:
அறிவாற்றல் குறைவது, அல்சைமர் போன்ற நோயால் பாதிப்பது போன்றவை வைட்டமின் பி12 குறைபாடால் ஏற்படுவதாகும். கவனக்குறைவு, மன அழுத்தம் போன்றவை இதன் குறியீடுகளாகும். பதட்டம் மற்றும் மனச்சோர்வு வைட்டமின் பி12 குறைபாடால் ஏற்படும். சைவ உணவு உண்ணுகிறவர்கள் பெரும்பாலும் வைட்டமின் பி12 குறைபாட்டால் பாதிக்க படுவர். மாட்டிறைச்சி, கடல் உணவுகள், முட்டை மற்றும் பால் பொருட்களில் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது. சைவ உணவில், ஈஸ்ட், தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் போன்றவற்றில் இது அதிகமாக உள்ளது.

போலேட்:
போலேட் , மன நிலையை நிர்வகிக்கும் நரம்பிய கடத்திகளான செரோடோனின், டோபமைன் போன்றவற்றை  உற்பத்தி செய்ய உதவுகின்றன. அதிக அளவு போலேட்  உட்கொள்வதால் மனச்சோர்வு குறைகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலிக் அமிலத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு குறைவதாக கூறப்படுகிறது.
சைவ உணவினை  உண்ணுகிறவர்கள் கீரை, அவகேடோ, பச்சை காய்கறிகள் போன்றவை வழியாக போலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

தாவர உணவுகளில் குறிப்பிட்ட அளவு ஆரோக்கிய கூறுகளே உள்ளன. கார்னோசின், டாரின் , வைட்டமின் பி 12 , DHA ,EPA  போன்றவை தாவர  உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்துகள் ஆகும்.

மேலே கூறியவற்றிலிருந்து புரியும் உண்மை என்னவென்றால் சைவ உணவுகளால் மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மனச்சோர்விலிருந்து நம்மை பாதுகாக்க வைட்டமின் பி12, போலேட், ஒமேகா 3 கொழுப்புகள் போன்றவற்றை எடுத்து கொள்வது நல்லது.