உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா?

உடல் எடையை குறைக்க விரும்புவது நம்மில் பலரின் பொதுவான குறிக்கோளாக உள்ளது .

உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா?

உடல் எடையை குறைக்க எவ்வளவு நாள் ஆகும் என்பதைப் பல காரணிகள் தீர்மானிக்கிறது .அவை என்னவென்று அறிய, இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள் .

மருத்துவர்களின் கூற்றுப்படி, எடை இழப்பு வாரத்திற்கு 1-2 பவுண்டுகள் (0.45-0.9 கிலோ) என்ற அளவில் இருந்ததால் தான் ஆரோக்கியமானது.

உடற்பயிற்சி செய்வதை விட, நமது உணவில் கலோரிகளை குறைப்பதன் மூலம் தான் அதிக எடையை குறைக்க முடியும். 

எடை குறைப்பை பல்வேறு விதமான காரணிகள் தீர்மானிக்கின்றன. 

பாலினம்:

பொதுவாக ஆண்களை விட, பெண்கள் அதிக கொழுப்பு மற்றும் தசை விகிதத்தைக் கொண்டிருப்பதால், எடை குறைப்பு சிறிது தாமதமாகிறது. ஓரே மாதிரியான டயட்டை பின்பற்றும் பெண்களை விட ஆண்கள் வேமாக எடை இழக்கிறார்கள். 

வயது:

வயதானவுடன் உடல் அமைப்பில் இயல்பாகவே பல மாற்றங்கள் ஏற்படுகிறது. உதாரணமாக, கொழுப்பு அதிகரிக்கிறது மற்றும் தசை திறன் குறைகிறது. உடலின் முக்கிய உறுப்புகளின் கலோரி தேவைகள் குறைகிறது. இதுவும் உடல் எடையை தீர்மானிக்கிறது.

உடல் அமைப்பு:

நம் உடல் அமைப்பும்,  எடை  குறைப்பு வேகத்தை தீர்மானிக்கிறது. 

கலோரி:

நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் கலோரிகள், நம் உடல் எடையை பாதிக்கிறது. குறைவான கலோரிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எடை இழப்பு வேகமாக இருக்கும்.

தூக்கம்:

ஆச்சர்யமாக  இருக்கிறதா!!!

தூக்கமும் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இது பல பேருக்கு தெரிவதில்லை. தொடர்ச்சியான  தூக்கமின்மை இருந்தால், எடை குறைப்பு தாமதமாகும்.  தூக்கமின்மை, ஜங்க் ஃபுட் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. 

எடையைக் குறைத்து, நீங்கள் அந்த எடையை தக்க வைக்க விரும்பினால், நிலையான விகிதத்தில் அதை செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடு மற்றும் தேவையான உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைத்தால் தான் நீண்ட காலத்திற்கு உங்களால் அந்த எடையை பராமரிக்க முடியும்.