நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

சத்தான உணவில் கீரை மிகவும் முக்கியமானவை. தினமும் ஒவ்வொரு வகையான கீரையை எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து," நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற வாசகத்திற்கு ஏற்ப ஆரோக்கியமாக வாழலாம்.

நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

 நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க வேண்டுமா?

கீரை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம் உடலில் உள்ள நோய்களை அகற்றும் ஆற்றல் கொண்ட பல சத்துக்கள் உள்ள உணவு. சத்தான உணவில் கீரை வகைகள் மிகவும்  முக்கியமானவை. இயற்கையாக கிடைக்கும் கீரை வகைகள் நம் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது.

கீரையில் உள்ள சத்துக்கள்:

கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி1,  பி2, பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள், புரதம், வைட்டமின் கே, சோடியம், பொட்டாசியம், தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம், பாஸ்பரஸ், மாவுச்சத்து, வைட்டமின் ஈ, துத்தநாகம், தாமிரம், காப்பர், ஐயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின், ரிபோஃபிளேவின், தயாமின் போன்ற சத்துக்களைக் கொண்டது கீரை.

உலகில் பல வகையான கீரைகள் இருக்கின்றன. மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சத்துக்களும் கீரைகளில் இருந்து நமக்கு கிடைக்கிறது. பலவகையான கீரைகள் இருந்தாலும் அதற்குரிய நிறத்தினாலும், வடிவத்தினாலும், சத்துக்களினாலும்,  மருத்துவ குணங்களினாலும் அவற்றுடைய  தனித்துவத்தை பெறுகின்றது. இதில் சிறப்பு என்னவென்றால் பல வேறுபாடுகளை கொண்ட கீரைகள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் ஆற்றல் பெற்றதுதான்.

 கீரையில் உள்ள முழு சத்துக்களை பெற இதை செய்யுங்கள்:

  • அதன் சத்துக்கள் அப்படியே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதை நறுக்குவதற்கு முன்பாக நன்றாக அலசிப் பயன்படுத்துவது நல்லது, 
  •  கீரையை சமைக்கும் போது 8 நிமிடங்களுக்கு மேல்  வேக  வைக்கக்கூடாது, 
  •  இதை சமைக்கும்போது மூடி வைத்து  சமைக்கக் கூடாது, 
  • இதை பொரிக்கவும் கூடாது. இப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து போகும்.
  • கீரையை ஃபரஷ்ஷாக செய்ய வேண்டும். 
  • கீரையை வெயிலில் காய வைக்க கூடாது. 
  • கீரையை அதன் நிற மாறாமல் சமைக்க வேண்டும். 
  • கீரையை சமைக்கும்போது அதிகம் தண்ணீர் ஊற்றக்கூடாது . 

 பல் முளைக்காத பச்சை குழந்தைகள் முதல் பல் விழுந்த முதியவர் வரை இதை  அனைவராலும் கீரையை உண்ண முடியும். உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது கீரைகள். தினமும் ஒவ்வொரு வகையான கீரையை எடுத்துக் கொண்டால், நமக்கு நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோயற்ற  வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற வாசகத்திற்கு ஏற்ப   ஆரோக்கியமாக வாழலாம்.