வைட்டமின் கே 1 மற்றும் கே 2 விளக்கங்கள்

வைட்டமின்கள் பல வகை படும். அவற்றுள் வைட்டமின் கே இரத்தம் உறைதலுக்கு இன்றியமையாதது.

வைட்டமின் கே 1 மற்றும் கே 2 விளக்கங்கள்

வைட்டமின் பி போல வைட்டமின் கே வும் பல வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழுவாகும் . இவை  இரத்தம் உறைதலை தாண்டி பல ஆரோக்கிய நலன்களை உடலுக்கு செய்கின்றன, வைட்டமின் கே வில் முக்கியமான இரண்டு பிரிவுகள் வைட்டமின் கே1 மற்றும் வைட்டமின் கே2. இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை பற்றியும் , நம் உணவுகளில் வைட்டமின் கே1  மற்றும் கே2   அதிகமாக உள்ள உணவுகளை பற்றியும் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளலாம்.

வைட்டமின் கே என்றால் என்ன?
ஒரே இரசாயன உருவத்தை கொண்ட, கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் அடங்கிய குழு தான் வைட்டமின் கே என்பதாகும். வைட்டமின் கே பல வகைகளை கொண்டது. மனித உணவில் பெரிதும் உள்ளது வைட்டமின் கே 1  மற்றும் வைட்டமின் கே 2 ஆகியன. 
வைட்டமின் கே, ஃபில்லோகுவினோன்(phylloquinone) என்றும் அழைக்கப்படும். இது தாவர உணவுகளாகிய , பச்சை காய்கறிகளில் அதிகம் காணப்படுகின்றன . மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் வைட்டமின் கேவில் 75-90% இந்த கே1  வகை தான் . 
வைட்டமின் கே2 புளிக்க வைத்த  உணவுகளில் மற்றும் விலங்கு உணவுகளில் அதிகம் இருக்கும். குடல் பாக்டீரியாவிலும் உற்பத்தியாகும். மெனாகுவினோன் என்ற பெயரில் இதன் உட்பிரிவுகள்  தொகுக்கப்பட்டிருக்கும். அவை MK 4 முதல் MK 13 வரை ஆகும்.

வைட்டமின் கே 1 அதிகமுள்ள உணவுகள்:
வைட்டமின் கே1 தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளில்  வைட்டமின் கே1 அதிகமாக இருக்கும் . 1 கப் உணவில் எவ்வளவு  வைட்டமின்  கே 1 உள்ளது என்பதையும் பார்க்கலாம்.
* பரட்டைக்கீரை (Kale) - 1062mcg 
* சீமை பரட்டைக்கீரை (Collard greens:) - 1059mcg
* பச்சை கீரை - 889mcg
* நூக்கல் கீரை - 529mcg
* ப்ரோக்கோலி - 220mcg
* களைகோஸ் (Brussels sprouts) - 218mcg

வைட்டமின் கே 2 அதிகமுள்ள உணவுகள்:
வைட்டமின் கே2  உணவு வகைகள் , அதன் உட்பிரிவுகள் படி மாறுபட்டிருக்கும் 
* MK4 விலங்கு உணவுகளில் காணப்படும். இவை பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்ய முடியாத ஒரு வகையாகும். சிக்கன் , முட்டையின் மஞ்சள்  கரு, பட்டர் போன்றவற்றில் MK 4 அதிகமாக இருக்கும்.
* MK5 - MK 13 போன்றவை பாக்டீரியா உற்பத்தியால் உருவாகும். பொதுவாக புளிப்பு உணவுகளில் இவை அதிகம் காணப்படும்.
நட்டோ  என்ற புகழ்பெற்ற ஜப்பானிய உணவு, புளிக்க வைத்த  சோயா பீன்ஸால் தயாரிக்கப்பட்ட உணவாகும். இதில் MK 7 அதிகமாக உள்ளது.
* நட்டோ - 1062mcg
* பன்றி சாசேஜ் - 383mcg
* கெட்டி சீஸ் - 76mcg
* சிக்கன் - 60mcg
* மென்மையான சீஸ் - 57mcg
* முட்டை மஞ்சள் கரு - 32 mcg

வைட்டமின் கே 1 மற்றும் கே 2 வித்தியாசம்:
* இரத்தம் உறைதல், இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு ஆரோக்கியம் போன்றவை  வைட்டமின் கேவின் செயல்பாடுகளாகும்.
* கே 1 மற்றும் கே 2 வைட்டமின்கள் உறிஞ்சுதல் தன்மை மற்றும் திசுக்கள்  கொண்டு செல்லும் தன்மையால் வேறுபடுகின்றன.
* கே 1 வகை வைட்டமின்கள் தாவர உணவில் இருந்து கிடைப்பதால், உடலால் குறைந்த அளவில் உறிஞ்சப்படுகிறது. தாவரங்களில் காணப்படும் கே1 வகையில் 10% மட்டுமே உடலால் உறிஞ்ச படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
* கொழுப்புகள் அதிகம் இருக்கும் உணவில் கே 2 வைட்டமின்கள் காணப்படுகின்றன. இவை கே1 ஐ விட அதிக அளவில் உறிஞ்சப்படுகின்றன.
இது ஏனென்றால் , வைட்டமின் கே என்பது கொழுப்பில் கரைய கூடிய வைட்டமின் ஆகும். ஆகவே கொழுப்பு உணவுகள் அதிகம் உறிஞ்சப்படுகின்றன. 
அது மட்டுமில்லாமல், கே 2 வின் சங்கிலி தொடர் உட்ப்பிரிவுகளால் கே1 ஐ விட அதிகமாக இரத்தத்தில்  கலக்கிறது. வைட்டமின் கே 1 இரத்தத்தில் சில மணி நேரங்கள் தங்கும். வைட்டமின் கே 2 சில நாட்கள் தங்கும். கே 2 வகை வைட்டமின் இரத்தத்தில் நீண்ட நாட்கள் இருப்பதால், உடல் முழுதும் இருக்கும் திசுக்களால் பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் கே 1 கல்லீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் கே குறைபாடு:
அதிக அளவு இரத்தப்போக்கு வைட்டமின் கே குறைபாடால் தோன்றுவதாகும். மற்றபடி மனிதர்களுக்கு பொதுவாக வைட்டமின் கே குறைபாடு தோன்றுவதில்லை.

தினசரி உட்கொள்ளல் அளவு:
வைட்டமின் கே1 தினசரி உட்கொள்ளல் அளவு ஒரு நாளில்  , ஆண்களுக்கு 120 mcg மற்றும் பெண்களுக்கு 90 mcg  ஆகும்.
ஒரு ஆம்லெட் மற்றும் சிறியளவு கீரையில் இந்த அளவை நாம் அடைய முடியும்.
சீரான உடல் நலத்திற்கு மிதமான அளவில்  வைட்டமின் கே 1 மற்றும் வைட்டமின் கே 2 உணவுகளை உண்ணலாம்