பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப் பட்டியல் 

பொட்டாசியம் என்பது ஒரு கனிமம் ஆகும். இதனை நல்ல உப்பு என்று சில நேரம் கூறலாம்.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப் பட்டியல் 

உங்கள் உடலின் இரத்த அழுத்த ஆரோக்கியத்தில் இந்த பொட்டாசியம் பெரும் பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

உயர்ந்த பொட்டாசியம் உணவுகளை எடுத்துக் கொள்கிற மனிதர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் என்பது நீண்ட காலமாக அறிந்த ஒரு செய்தியாகும். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இதன் பெரும் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளது. ஒரு நாளின் பொட்டாசியம் உட்கொள்ளல் அளவை அதிகரித்து, பரிந்துரைக்கப்பட்ட அளவான 4.7 கிராம் எடுத்துக் கொள்வதால் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 1.7 மற்றும் 3.2மிமீ Hg அளவிற்கு குறைவதாக கூறப்படுகிறது. இந்த குறைப்பு, மேற்கத்தியர்கள் ஒரு நாளில் 4 கிராம் அளவிற்கு உப்பின் அளவை குறைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை ஒத்து இருப்பதாக அறியப்படுகிறது. 

பொட்டாசியம் அதிகம் உள்ள சிறந்த உணவுகள் பட்டியல் :

பொட்டாசியம் என்றதும் நம்மில் பலரின் நினைவுக்கு வருவது வாழைப்பழம். ஆனால் வாழைப்பழம் ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது. இதற்குக் காரணம், வாழைப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவு வாழைப்பழம் சாப்பிடுவது அவ்வளவு நன்மையைத் தருவதில்லை.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் உள்ளது. ஆனால் அதே அளவிற்கு மற்ற பழம் மற்றும் காய்கறிகளில் கூட பொட்டாசியம் சத்து உள்ளது. எல்லா வகை பழங்கள் மற்றும் காய்கறிகளில் முதன்மையானதாகக் காணப்படும் ஒரு சத்தாக பொட்டாசியம் சத்து உள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட உணவுகளில் பொட்டாசியம் சத்து சற்று அதிக அளவில் உள்ளது.

உதாரணத்திற்கு, அவகாடோவில் வாழைப் பழத்தை விட இரண்டு மடங்கு அளவு பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. மேலும் இந்த பழத்தில் அடைபடாக் கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால் சிறந்த நன்மையைத் தருகிறது. 

அவகாடோ மற்றும் சுவிஸ் சார்ட் என்ர்று அழைக்கப்படும் செஞ்சீரை போன்றவை ஒரு நல்ல தீர்வாகும்.

வெள்ளை பீன்ஸ் - 1004 மிகி / கப்
சுவிஸ் சார்ட் - 960 மிகி /கப்
அவகாடோ - 874 மிகி / கப்
பசலைக் கீரை - 838 மிக்கி / கப்
பீட் கீரை - 644 மிகி / அரை கப் 
க்ரிமினி காளான் - 635மிகி / 5 அவுன்ஸ் 
சால்மன் - 534 மிக்கி / 3 அவுன்ஸ்
ப்ரோகோலி - 505 மிக்கி / கப்
ப்ரசில்ஸ் ஸ்ப்ரௌட் - 494 மிகி / கப்
செலெரி - 344 / கப்

நீங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்புடன் போராடினால், பொட்டாசியம் உட்கொள்ளல் அளவு குறித்து கவனம் வேண்டும். பெரியவர்கள் உட்கொள்ள வேண்டி பரிந்துரைக்கும் தினசரி அளவு 4700 மிகி அளவு ஆகும்.

பொட்டாசியம் மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பு :
உங்கள் உடலில் உள்ள அணுக்களின் உள்ளேயும் வெளியிலும் சமச்சீரான அளவு பொட்டாசியம் இருப்பதால் உங்கள் உடல் சீரான முறையில் செயல்படுகிறது. ஒரு எலெக்ட்ரோலைட் என்ற முறையில் பொட்டாசியம் என்பது ஒரு நேர்மின் அயனி ஆகும். அதனால் ஒரு குறிபிட்ட அளவு அடர்த்தியை நிர்வகிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சோடியத்துடன் சேர்ந்து நரம்பு தூண்டல் பரப்பு, தசை சுருக்கம் மற்றும் இதய செயல்பாடு போன்றவற்றில் பொட்டசியத்தின் அவசியம் உள்ளது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த பொட்டாசியம் அளவு ஆகியவற்றிற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நிறைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, எனவே, இரத்த அழுத்த நிர்வகிப்பில் உப்பின் அளவைக் குறைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தப்படுகிறதோ அதே அளவற்கு பொட்டாசியம் அளவு அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.