பிக்யு எண்ணெயில் அற்புத நன்மைகள்

வயதான பிறகும் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பிக்யு எண்ணெயில் அற்புத நன்மைகள்

உங்கள் கூந்தல் மற்றும் சருமம் இளமையில் இருக்கும் அதே வனப்புடன் எப்போதும் இருக்க வேண்டுமா? இதை எல்லாவற்றையும் தரும் ஒரு மந்திர பொருள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? தொடர்ந்து இந்த பதிவைப் படித்திடுங்கள். 

இந்த பதிவில் நாள் பார்க்கப்போகிற அந்த மந்திரப் பொருள் ஒரு எண்ணெய். அதன் பெயர் பிக்யு எண்ணெய். இந்த எண்ணெய்யின் மகத்துவங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? இதோ உங்களுக்காக..

இதய ஆரோக்கியம் :
பிக்யு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு நல்ல தீர்வு தருகிறது. இது இரத்தத்தில் அதிக  கொழுப்பு அளவைக் குறைகிறது . இதற்கான காரணம், இதில் உள்ள மோனோ நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள், அது உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது. பிக்யு எண்ணெய் தமனி சுவர்கள் மற்றும் இரத்த நாளங்களை வலிமையாக உருவாக்குகிறது, இதனால் இதயத் தாக்குதல்கள், இதய நோய்கள், மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் :
உயர் இரத்த அழுத்தத்தை போக்கும் இதன் குணம் இந்த எண்ணெயில் மற்றொரு மகத்துவமாகும். இதில் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் உண்டு. மற்றும் இந்த எண்ணெய்க்கு அழற்சியைப் போக்கும் தன்மை உண்டு. அழற்சி அதிகமானால், இரத்தம் உறைவதை அதிகப்படுத்தி, மேலும் இதய நோய்களுக்கான சிக்கல் வலுப்பெறும். இந்த எண்ணெய் இரத்த நாளங்களை அழுத்தத்தில் இருந்து விடுவித்து, அவற்றை தளர்த்துகின்றது.

கண் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்கிறது :
பீக்யு எண்ணெய், கண் பார்வையை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ வில் உள்ள கார்டினாய்டு ஒரு அன்டி ஆக்சிடென்ட் போல் செயல்படுகிறது. அதாவது பிக்யு எண்ணெய் அல்லது பழத்தை சாப்பிடுவதால்,  தசைகள் சீர்கேடு தடுக்கப்படுகிறது, மற்றும் பார்வையின் தெளிவை அதிகரிக்கிறது. பிக்யு எண்ணெய் தீங்கு விளைவிக்கும் கூறுகளை சேதப்படுத்தி , கண் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

செரிமானத்திற்கு ஏற்றது :
செரிமான மண்டலத்திற்கு ஏற்ற ஒரு எண்ணெய்யாக பிக்யு எண்ணெய் இருக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் உங்கள் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல், வயிறு மந்தம் , வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்றவை குறைகிறது. உங்கள் செரிமான மண்டலத்தில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றவும் இந்த நார்ச்சத்து உதவுகிறது. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கூந்தலை மிருதுவாக மாற்றுகிறது :
உங்கள் கூந்தலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற ஒரு எண்ணெய்யை தேடிக் கொண்டு இருகிறீர்களா? நீங்கள் இந்த பிக்யு எண்ணெய்யை முயற்சிக்கலாம். கூந்தலை மிருதுவாக, பளபளப்பாக மற்றும் வலிமையாக மாற்ற உதவும் சீரம் போன்ற பொருட்களில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. பிக்யு எண்ணெய் மூலம் உங்கள் கூந்தலை வாரத்திற்கு மூன்று முறை மசாஜ் செய்து, ஷாம்பூவால் தலையை அலசி, கண்டிஷனர் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

முடி உடைவதை தடுக்கிறது :
வறண்ட, சேதமடைந்த மற்றும் உடைந்த முடிகளை சரி செய்ய பிக்யு எண்ணெய் பயன்படுகிறது., கூந்தலின் ஆழமான சீரமைப்பு சிகிச்சையில் பிக்யு எண்ணெய் பலன் தருகிறது. உங்கள் கூந்தலை  ஈரப்பதத்துடன் வைத்து, முடியில் உள்ள சிக்குகளை அகற்றி நுனி முடி உடைவதைத் தடுக்கிறது. 

சருமம்:
உங்கள் சருமத்திற்கும் பிக்யு எண்ணெய்யை பயன்படுத்தலாம். எக்ஸிமா மற்றும் சருமத்தின் நாட்பட்ட வறட்சியை எதிர்த்து சரும தொற்றுகளைப் போக்க இந்த எண்ணெய் உதவுகிறது. பிக்யு எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து, சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.

உடலுக்கான மாய்ச்சரைசெர் :
சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க இந்த எண்ணெய் பயன்படுகிறது. காயங்களை விரைவாக குணப்படுத்தவும் , நீர்சத்தை அதிகரிக்கவும் இந்த எண்ணெய் உதவுகிறது. சருமம் இளமையுடன் மிருதுவாக, புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒருமுறை இதனை பயன்படுத்தி வருவதால் விரைவில் நல்ல பலன் கிடக்கும்.

உடல் மசாஜிற்கு ஏற்றது:
உடலுக்கு ஏற்ற ஒரு மசாஜ் செய்ய இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் இதர சுத்தமான எண்ணெயுடன் சேர்த்து பிக்யு எண்ணெய்யை கலந்து உடலில் தடவி மசாஜ் செய்யலாம். இந்த கலவையை பஞ்சில் நனைத்து உங்கள் முகத்தில் தடவலாம். மென்மையான மசாஜ் செய்த பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு குளிர்ந்த  நீரில் குளித்துப் பாருங்கள். உங்கள் உடலில் ஒரு அருமையான உணர்வு தோன்றி உங்களை நாள் முழுக்க உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

மேலே கூறிய அனைத்தும் பிக்யு எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் ஆகும். இந்த பதிவைப் படித்து இதன் நன்மைகளை அறிந்து கொண்டீர்களா? இதுவரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தாமல் இருந்தால் உடனே இதனை பயன்படுத்தி மேலே கூறிய நன்மைகளைப் பெற்றிடுங்கள். உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர மறவாதீர்கள்.