வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை நினைத்து விரதம் இருந்து  பூஜை செய்தால் நாம் நினைக்கும் அனைத்தும் நிறைவேறும்.

வசந்த நவராத்திரி

வசந்த நவராத்திரி 

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை சைத்ரசுத்த பிரதமையில் தொடங்கி, ஸ்ரீ ராம நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தில் கொண்டாடுவதால் இந்த பண்டிகையை வசந்த நவராத்திரி என்றும். லலிதாம்பிகையை வழிபடுவதால் லலிதா நவராத்திரி என்றும் அழைப்பார்கள். இந்த ஆண்டு வசந்த நவராத்திரி ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி நிறைவடைகிறது.

வசந்த நவராத்திரியின் போது தேவி துர்க்கையை ராமர் வழிபட்டதால் துர்க்கையின் அருள் பெற்று ராவணன் என்ற அரக்கனை அழித்து வெற்றி பெற்றார். இதனால் இது ராமர் காலத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு இருக்கிறது என்று கூறுகின்றனர். புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குனி மாதம் கோடை காலம் என்பதால் கோடை காலத்தில் தோன்றும் நோய் கிருமிகளால் ஏற்படும் வியாதிகள் நம்மை அண்டாமல் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ அருள கூடியவள் லலிதாம்பிகை என்பதால் பங்குனி மாதத்தில் வரும் வசந்த  நவராத்திரியின் போது லலிதாம்பிகையை நினைத்து விரத்தையும், பூஜையையும் மேற்கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

வசந்த நவராத்திரியின் 9 நாட்களும் அம்பிகைக்கு படைக்க வேண்டிய பிரசாதங்கள் :  

சூரியன் - ஞாயிற்றுக்கிழமை: கோதுமையில் அப்பமும்,  

சந்திரன்திங்கட்கிழமை: அரிசியில் சக்கரை பொங்கல்   மற்றும் பச்சைப்பயிறு சுண்டல், 

செவ்வாய் - செவ்வாய் கிழமை: துவரம் பருப்பு  பொங்கல் மற்றும் காராமணி சுண்டல், 

புதன்புதன்கிழமை: பச்சைப்பயிறு சுண்டல்,

குரு - வியாழக்கிழமை: எலுமிச்சை சாதம் கொண்டைக்கடலை சுண்டல்,

சுக்கிரன்வெள்ளிக்கிழமை: தேங்காய் சாதம் அல்லது தயிர் சாதம் மற்றும் மொச்சை சுண்டல், 

சனி  -  சனி கிழமை: எள்ளு சாதம் உளுந்து வடை மற்றும் நவதானிய சுண்டல்.

நவகிரக நாயகிக்கு இந்த ஒன்பது நாட்களும் நவகிரகங்களுக்கு உரிய பிரசாதத்தை படைக்க வேண்டும். நவராத்திரியின் கடைசி நாள் சர்க்கரை பொங்கல் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி ஆரம்பிக்கும் நாளை கணக்கில் கொண்டு அம்பாளுக்கு பிரசாதத்தை அந்தந்த நாளுக்கு ஏற்ப படைத்தால் நவகிரகங்களை சாந்தப்படுத்துவதோடு, சகல  ஐஸ்வர்யத்தையும் அளிப்பாள்  நவகிரக நாயகியான லலிதாம்பிகை. 

லலிதாம்பிகை மூல மந்திரம்:

"   ல ஹ்ரீம்

ல ஹ்ரீம்

ல ஹ்ரீம்"

லலிதா நவராத்திரியின் ஒன்பது நாட்களும் லலிதாம்பிகையை நினைத்து மனதார இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்தால் சகல சௌபாக்கியத்தையும் அருள்வாள் அம்பிகை.

நவராத்திரி நிர்ணயம் என்னும் புத்தகத்தில் நவராத்திரி பூஜை மேற்கொண்டால் சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை நினைத்து விரதம் இருந்து  பூஜை செய்தால் நாம் நினைக்கும் அனைத்தும் நிறைவேறும். இந்த நாட்களில் அன்னதானம் எவரொருவர் செய்கிறாரோ அவர்களின் குடும்பத்திற்கு  அன்னையின் அருள் பரிபூரணமாக  கிடைக்கும்.