உங்கள் பிறந்த நாள் பற்றி எண்கணிதம் வெளிபடுத்தும் ரகசியம்

கணிதத்தில், பிறந்த தேதி மற்றும் ஆதிக்க எண், உங்கள் ஆளுமை மற்றும் பண்பை வரையறுக்க ஒரு முக்கிய பங்காக அறியப்படுகிறது.

உங்கள் பிறந்த நாள் பற்றி எண்கணிதம் வெளிபடுத்தும் ரகசியம்

உங்கள் பிறந்த தேதியின் எண்களை கூட்டுவதால் உங்கள் ஆதிக்க எண்ணை கணக்கிட முடியும். நீங்கள்  பிறந்த தேதி  உங்கள் ஆதிக்க எண்ணை நிர்ணயிக்கிறது. உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி, 2, ஜனவரி, 1986 என்றால், உங்கள் ஆதிக்க எண்ணை இப்படி கணக்கிட வேண்டும், 2+1+1986(1+9+8+6) = 27, 2+7=9.. வாருங்கள் உங்கள் பிறந்த நாளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

ஆதிக்க  எண் 1 :

ஆதிக்க  எண் 1 , உங்கள் தனித்தன்மையை வரையறுக்கிறது . நீங்கள் ஒரு கடின உழைப்பாளி. பிறக்கும்போதே தலைவராகும் தன்மை பெற்றவர் நீங்கள். நீங்கள் ஒரு தலைசிறந்த மனிதர், உங்களிடம் எப்போதும் ஆற்றல் நிறைந்து காணப்படும். இந்த அளவுகடந்த ஆற்றல் காரணமாக, நீங்கள் செய்யும் எல்லா செயலிலும் முதன்மையாக திகழ்வீர்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. எந்த ஒரு தடையையும் எளிதில் தாண்டக்கூடிய வலிமை பொருந்தியவர். எல்லா காலகட்டத்திலும், மிகப் பெரிய செயல்களை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள் வெற்றியை உங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். 

ஆதிக்க எண் 2 :
உங்கள் பிறந்த தேதியின் கூட்டல் எண் 2 என்றால் நீங்கள் ஒருங்கிணைப்பை விரும்புபவர். எல்லாவற்றையும் விட அன்பையும் சமாதானத்தையும் நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். இயல்பில் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்பதால் பின்னணியில் இருந்து பணி புரிய அதிகம் விரும்புவீர்கள். நீங்கள் மற்றவருடன் இணைந்து வேலை செய்ய அதிகம் விரும்புவீர்கள். ஒரு குழுவாக இருந்து வேலை செய்யும் கிடத்தில் மிகவும் சிறப்பான வேலையை வெளிபடுத்துவீர்கள். 

ஆதிக்க எண் 3 :
உங்கள் ஆதிக்க எண் 3 என்றால் , நீங்கள் சுய வெளிபாட்டை அதிகம் விரும்புவீர்கள். எந்த ஒரு இருளையும் வெளிச்சமாக்கும் திறமை உங்களுக்கு உண்டு. நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர். உங்கள் உணர்ச்சியை வெளிபடுத்துவதில் வல்லவர். சமூக தொடர்பில் உங்கள வெல்ல வேறு யாருமே இருக்க முடியாது. நீங்கள் சந்தோஷ மனநிலையில் இருந்தால், அந்த இடத்தில பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டவர், மற்றும் தாராள மனம் கொண்டவர்.

ஆதிக்க எண் 4 :
உங்கள் ஆதிக்க எண் 4 என்றால், நீங்கள் ஒரு கடின உழைப்பாளி. இயல்பிலேயே நீங்கள் மிகக் கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவர். மிகவும் விசுவாசம் உள்ளவர். நீங்கள் செய்யும் விஷயத்தில் தீர்மானமாய் இருப்பீர்கள். அதே சமயம், நீங்கள் மற்றவர்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவர். பல உத்திகளை கையாளும் திறன் கொண்டவர். சில நேரம் கொஞ்சம் சோம்பேறியாகவும் இருப்பீர்கள்.

ஆதிக்க எண் 5  :
உங்கள் ஆதிக்க எண் 5  என்றால் அமைதியின்மை உங்கள் பண்பாகும். நீங்கள் மிகவும் நெகிழும் தன்மை உள்ளவர். ஆனால் அதே நேரம் எப்போதும் அமைதி இல்லாமல் இருப்பீர்கள். சுதந்திர சிந்தனை கொண்ட நீங்கள், பிரயாணங்களை அதிகம் விரும்புவீர்கள், அதில் இருந்து அனுபவங்களைப் பெற்றுக் கொள்வீர்கள். மறுபுறம், உங்கள் அமைதியற்ற சுபாவம் காரணமாக, எந்த ஒரு செயலும் உங்களுக்கு உடனே ஒரு சலிப்பை கொடுத்துவிடும். அதே நேரம், பிரச்சனைகளைக் களையும் போது உங்களிடம் அதிக பொறுமை காணப்படும்.

ஆதிக்க எண் 6  :
ஆதிக்க எண் 6 உள்ளவர்கள், சேவை மனப்பான்மைக் கொண்டவர்கள். உங்கள் கவனம் முழுக்க அன்பு, குடும்பம் சேவை போன்றவற்றில் எப்போதும் இருக்கும். இயல்பிலேயே மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்டவர்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவர் நீங்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் உங்களுக்கு ஏற்றதாக செய்யும் திறமை உங்களுக்கு உண்டு. அதாவது, நீங்கள் இருக்கும் சூழலை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர் நீங்கள்.

ஆதிக்க எண் 7 :
ஆதிக்க எண் 6 உள்ளவர்கள், தெளிவில்லாதவர்கள். தெளிவின்மை உங்கள் சுபாவமாக இருக்கும். உங்கள் உணர்வுகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதால், மற்றவர்களுக்கு நீங்கள்  ஒரு புதிராகவே இருப்பீர்கள். உங்களைப் புரிந்து கொள்வது பொறு கடினமான காரியமாக இருக்கும். ஆனால் நீங்கள் நல்ல சிந்தனைக் கொண்டவர்கள். எல்லாவற்றையும் அலசி ஆராயும் தன்மை கொண்டவர். இதனால் நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள். குறிப்பாக அறிவியல் மற்றும் அறிவு சார்ந்த பகுதிகளில் உங்கள் புத்தி கூர்மை வெளிப்படும்.

ஆதிக்க எண் 8 :
நீங்கள் ஒரு சக்திமான், பிறக்கும்போதே தலைவராகும் தன்மைக் கொண்டவர் நீங்கள். குறிப்பாக, வியாபாரம், நிதி மற்றும் அரசியல் உங்களுக்கு இயல்பாவே அருமையாக கை கொடுக்கும் . நீங்கள் கூர்மையான உள்ளுணர்வைக் கொண்டவர்கள். உலக வியாபாரத்தைப் பற்றி முடிவெடுக்கவும், மக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த திறமையை நீகள் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆன்மீக நம்பிக்கைக்கு தலை வணங்குவீர்கள். மற்றும் பணத்திற்காக எதையும் செய்வீர்கள். 

ஆதிக்க எண் 9 :
ஆதிக்க எண் 9 கொண்டவர்கள்,  மனிதத்தன்மைக் கொண்டவர்கள். மனித தன்மை நிறைந்த ஒரு தலைவராக நீங்கள் பார்க்கப்படுவீர்கள். கருணைக் குணம் கொண்டவர் நீங்கள். பல திறன் கொண்ட நீங்கள் எதையும் லட்சியத்துடன் செய்வீர்கள். வாழ்க்கையின் புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள நினைப்பீர்கள். நீங்கள் விரும்பும் ஒருவரின் அன்பு மற்றும் விருப்பத்திற்காக  நீங்கள் ஏங்குவீர்கள்.