முதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட உயிர் போன நிலை 

புற்று நோய் கட்டிகள் உடலின் எந்தப் பகுதியில் ஏற்பட்டாலும் அது மிகவும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. அதனைப் போக்குவதற்கு பல மருத்துவ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இங்கு ஒரு மனிதர் தன் வாழ்நாள் மழுவதும் ஒரு மிகப் பெரிய புற்று நோய்க் கட்டியைத் தனது முதுகில் சுமந்து வாழ்ந்து வருகிறார். அந்தக் கட்டியானது அவருடைய கழுத்து மற்றும் நுரையீரல் பகுதி வரை பரவி உள்ளது.

முதுகில் புற்று நோய் கட்டி ஏற்பட்டு கிட்டத்தட்ட உயிர் போன நிலை 

இந்த அபூர்வ மனிதர்  பெயர் திரு. டேங். கடந்த 30 வருடங்களாக தன்னுடைய முதுகில் 85x65 செ மி அளவு புற்று நோய் கட்டியை சுமந்து வருகிறார் . இவருக்கு வயது 68. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டியால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

30 வருடங்களாக வளர்ந்த கட்டி:
இந்த 68 வயது மனிதருக்கு , 30 ஆண்டுகளுக்கு மேலாக முதுகில் இந்த கட்டி வளர்ந்து வருகிறது.

அதிர்ச்சி அளிக்கும் இந்த நிலையின் புகைப்படங்கள்:
இவருடைய முதுகில் உள்ள கட்டியின் எடை 61lb அதாவது, 14.9கிலோ எடை கொண்டது என்பது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கட்டி இவருடைய முதுகு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கட்டியை அகற்ற விரும்பினார்:
இந்த கட்டியை அகற்றுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வந்தார் இந்த ஏழை மனிதர். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று இந்தக் கட்டியை அகற்றுமாறு கேட்டார். ஆனால் இந்த கட்டியை அகற்றுவதில் உள்ள பலவேறு சிக்கல்களை அறிந்த மருத்துவர்கள் இதற்கு இணங்க மறுத்தனர். இந்த கட்டி, இவருடைய நுரையீரல், முதுகுத் தண்டு, முக்கிய இரத்தக் குழாய்கள் போன்றவற்றில் பரவி உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன. இதனால் இந்த கட்டிய அகற்றுவத்தின் அபாயம் அதிகரித்தது.

இறுதியில் இதற்கான நிவாரம் கிடைத்தது:
பல கட்ட முயற்சிகளுக்கு பின்னர், இவருடைய துன்பத்திற்கு விடிவு கிடைத்தது. அதிக இரத்த அழைப்பு இருந்தாலும், இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. மரபணு நிலை மற்றும் நரம்பு நார்க்கட்டிக் காரணமாக இந்த கட்டி வளர்ச்சி பெற்றுள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். இந்த மருத்துவ சிகிச்சை தொடர்ந்து 33 மணி நேரம் நடைபெற்றது என்று ஆதார பூர்வ தகவல் குறிப்பிடுகிறது. 100 பேர் கொண்ட மருத்துவ குழுவுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இனி அந்த மனிதர் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியும். 

இந்த விசித்திர வழக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்.